யாசர் அராபத்தை கௌரவித்த இந்தியா - இப்போது மௌனம் சாதிக்கிறது - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்
இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து உலகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரப் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் வகையில் 1988ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் யாசர் அராபத்தை, இந்திய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைத்துக் கௌர வித்தது இந்தியா. உலகில் பல்வேறு நாடுகளின் உரிமைக் காக இந்தியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பாலஸ்தீன உரிமைக் காகக் குரல் கொடுக்கத் தயங்குகிறது. இஸ்ரேலின் படுகொலை களைக் கண்டும் காணாமல், மௌனம் சாதிக்கிறது. இதுவரை பின்பற்றி வந்த அனைத்து நிலைப்பாட்டிலும் முரண்பட்டு ஒன்றிய அரசு செயல்படுகிறது.