வலுவான எலும்புகள் வளர உதவும் பசுமையிடங்கள்
பசுமையிடங்கள் வீட்டுக்கு அருகில் அதிகம் இருக்கும் குழந்தைகளுக்கு எலும்புகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுவுடன் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயன் தரக்கூடியது. மற்ற குழந்தைகளைவிட 20 முதல் 25% கூடுதல் பசுமை நிறைந்த இடங்களுக்கு அருகில் வாழும் குழந்தைகளின் எலும்புகள் வலுவுடன் வளர்கின்றன. இது அவர்களின் இயற்கையான அரையாண்டு காலவளர்ச்சியால் கிடைக்கும் நன்மைக்கு இணையானது.
எலும்புகளின் வளர்ச்சியும் வலிமையும்
மிகக் குறைவான எலும்பு அடர்த்தி (bone density) குறைபாடு இவர்களிடம் 65% மற்றவர்களை விட குறைவாக உள்ளது. இதுவே இதை பற்றி நடத்தப் பட்ட முதல் ஆய்வு. குழந்தை மற்றும் விடலைப்பருவத்தில் எலும்புகள் வலு வடைகின்றன. எலும்புப்புரை நோயால் எலும்புத்தட்டுகள் பாதிக்கப்படுகின்றன. இந்த எலும்புத்தட்டுகள் கடினமான மற்றும் கடினமற்ற துளைகள் உடைய எலும்புகளால் சூழப்பட்டுள்ளன. இவை பாதிக்கப்படுவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பிளாட்டோயிங் (plateauing) என்ற குறைபாடு ஏற்படுகிறது. இதனால் முதுமையில் எலும்பு களின் வலிமை குறைகிறது. குழந்தை கள் பசுமையிடங்களுக்கு சுலபமாகச் செல்வதற்குரிய வசதி மற்றும் அந்த இடங்களின் அளவு அதிகமாக இருக்கும் போது அவர்கள் முதியவர்களாகும்போது எலும்பு முறிவுகள் மற்றும் அது போன்ற ஆபத்துகள் அதிகம் ஏற்படக் காரணமாக இருக்கும் எலும்புப்புரை நோய் (osteoporosis) வராமல் தடுக்கப்படுகிறது. பூங்காக்களுக்கு அருகில் குடி யிருக்கும் குழந்தைகளின் உடலியக்க செயல்பாடுகள் அதிகமாக இருப்பதால் பசுமையிடங்கள் மற்றும் எலும்பு வளர்ச் சிக்கு இடையில் இருக்கும் தொடர்பு வலுவாக உள்ளது. இதனால் அவர் களின் எலும்பு வளர்ச்சி தூண்டப்படு கிறது. இயல்பாக மரங்கள் அதிகம் உள்ள பகுதிகள் அனைவரையும் ஈர்க்கும் இயல்புடையவை. இதனால் இது போன்ற இடங்களில் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி மற்றும் பசுமையிடங்களுக்கு இடையில் உள்ள தொடர்பு வலிமையானது” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “குழந்தைப் பருவத்தில் எலும்புகள் வலுவுடன் வளரும்போது முதுமையில் உடல் வலிமையடைகிறது” என்று டாக்டர் ஹேன் ஸ்லூர்ஸ் (Dr Hanne Sleurs) மற்றும் பிற ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்ட ஆய்வுக்குழு உறுப்பினரும் பெல்ஜியம் ஹாசெல்ட் (Hasselt)பல்கலைக்கழக ஆய்வாள ருமான பேராசிரியர் டிம் நாராட் (Prof Tim Nawrot) கூறுகிறார். மனிதன் சமுதாயத்திற்கு நீண்ட கால நன்மையளிக்கக்கூடிய வகையில் உலகின் நாளைய குடிமக்களான இன்றைய குழந்தைகள் வலுவான எலும்புகளுடன் வளர நகரத் திட்டமிட லாளர்கள் வழி செய்யவேண்டும். இந்த விழிப்புணர்வை இந்த ஆய்வு ஏற்படுத்து கிறது. பசுமையிடங்கள் குழந்தைகளின் உடலியக்கச் செயல்களை அதிகரிக்க உதவுகிறது என்று முந்தைய ஆய்வுகள் கூறின. பசுமையிடங்கள் உடற்பருமன் ஆபத்தைக் குறைக்கிறது. இரத்த அழுத் தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மன நலத்திற்கு உதவும் பசுமையிடங்கள் உயர்ந்த புத்திக்கூர்மையுடன் வாழ வழிவகுக்கிறது. நல்ல மனநலம் மற்றும் உணர்வு நலத்திற்கு (emotional wellbeing) உதவுகிறது. சிறந்த குழந்தை வளர்ச்சிக்கு வகை செய்கிறது. பசுமை யிடங்கள் குழந்தைகள் மற்றும் விடலைப்பருவத்தினர் நல்ல மனநிலை மற்றும் மேம்பட்ட உடற்செயல்பாட்டைப் பெற உதவுகிறது. மரங்கள் அடர்ந்த வனப்பகுதியின் (woodlands) வழியாக நடப்பது மனநல சிகிச்சைகளுக்காக யு கேயில் ஆண்டுதோறும் செலவிடப்படும் 185 மில்லியன் பவுண்டு நிதியை சேமிக்க உதவுகிறது. இந்த ஆய்வுக்கட்டுரை ஜாமா நெட்வொர்க் ஓப்பன் (journal JAMA Network Open என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. பெல்ஜியம் பிளாண்டர்ஸ் (Flanders) என்ற பிராந்தி யத்தில் கிராம, நகர சுற்று வட்டாரப்பகுதி மற்றும் நகரப்பகுதிகளில் வாழும் முன்னூறிற்கும் மேற்பட்ட குழந்தைகளி டம் இந்த ஆய்வுகள் நடந்தன. குழந்தை களின் வயது, உடல் எடை, உயரம், இனம், தாயின் கல்விநிலை போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு நான்கு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் எலும்பு வலிமை மற்றும் அதன் அடர்வு (bone density) செவியுணரா ஒலியைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில் ஆயிரம் மீட்ட ருக்கும் குறைவான தூரத்தில் பசுமை யிடங்களுக்கு அருகில் வாழும் குழந்தை களிடம் பலவீனமான எலும்பு வளர்ச்சிக் குரிய வாய்ப்பு 66% குறைவாக இருந்தது. ஆய்வு முடிவுகளில் ஆண் பெண் குழந்தைகளிடையில் வேறுபாடு காணப் படவில்லை. சிறு வயதில் எலும்புகள் வலுவில்லாமல் வளர்ந்தால் வயதாகும் போது குழந்தைகள் எலும்புப்புரை நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் நலமான சமூகம் உருவாக இந்த ஆய்வு முடிவுகள் முக்கி யத்துவம் வாய்ந்தவை என்று கருதப்படுகிறது. தொலைக்காட்சி, மொபைல் போன், கணினி போன்ற கருவிகளில் செல விடப்படும் நேரம் (screen time), வைட்ட மின் சத்துகள், அன்றாடம் பால் பொருட் களை எடுத்துக்கொள்ளுதல் போன் றவை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி யில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று ஆராயப்பட்டது. ஆனால் இவை முடிவு களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. பசுமையிடங்களால் குழந்தை களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய நேரடியான காரணத்தொடர்பு (causal link) உறுதிசெய்யப்படவில்லை. இதற்கு குழந்தைகள் உடல் இயக்கச் செயல்களைப் பதிவு செய்ய முடுக்கமானி (accelerometer) என்ற கருவியை அவர்கள் அணியவேண்டும். அவ்வாறு அணிந்திருக்கும்போது ஆய்வு செய்வது கடினம். விடலைப்பருவத்தினரிடம் பசு மையிடங்களுக்கும் எலும்பு வலி மைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றிய சமீபத்திய இரண்டு ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளை தந்தது. தென் மேற்கு சீனாவில் 66,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு நேர்மறையான முடிவுகளைத் தந்தது. ஆனால் ஹாங்காங்கில் 65 மற்றும் அதற்கும் கூடுதல் வயதுடைய 4,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் பசுமை யிடங்களுக்கும் எலும்பு வலிமைக்கும் இடையில் இருக்கும் தொடர்பை உறு திப்படுத்தவில்லை. ஹாங்காங் மக்கள் நெரிசல் மிகுந்த, பசுமையிடங்கள் மிகக் குறைவாக உள்ள இடம் என்பதால் இத்தகைய முடிவு கிடைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மரம் செடி கொடிகள் அடர்ந்த பசுமை யிடங்கள் சூழலுக்கு மட்டும் இல்லாமல் மனித உடல் மற்றும் மன நலத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.