articles

img

140 ஆவது மாடியில் இருந்து தரையில் விழுந்த...

140 ஆவது மாடியில் இருந்து தரையில் விழுந்த...

துபாயில் 163 தளங்களைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் 140 ஆவது மற்றும் 100 ஆவது தளங்களில் உள்ள வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் பி.ஆர்.ஷெட்டி. 83 வயதாகும் இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிப் பணக்காரர் கதைகளுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவராவார். எப்படி ஈட்டினார் என்பதை விட, பெரிய உயரத்தைத் தொட்டார் என்பதைச் சொல்லிச் சொல்லி அவரை நாயகனாக்கி வைத்திருந்தனர்.  ஒரு கட்டத்தில், அவரது குழுமத்தின் மதிப்பு 1,24,000 கோடி ரூபாயைத் தாண்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் முதல் புகார் வந்தது. கடன் தொகையை, நெருக்கடிகளை மறைக்கிறார்கள் என்பதுதான் அது. கொஞ்சம் கொஞ்சமாக அவை அம்பலமாகின. 33 ஆயிரம் கோடி ரூபாயை மறைத்தனர் என்று வெளியானபோது ஒட்டுமொத்த குழுமமே சரிந்து விழுந்தது.  அண்மையில் தனது நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.