articles

ஆணையம் மீது நம்பிக்கை வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது - செ.சிவசுப்ரமணியன்

ஆணையம் மீது நம்பிக்கை வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது

பீகாரில்,  வாக்காளர் பட்டியலில் தற்போது மேற் கொள்ளப்படும் “சிறப்பு தீவிர திருத்தம்” என்பது வாக்காளர் பட்டியலை ‘புதுப்பித்தல்’ என்கிற வரையறையையும் தாண்டியது. இத்திருத் தப் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர்கள், தங்க ளை நிரூபிக்கும் அடையாளமாக, பிறப்புச் சான்றிதழ் உட்பட சில ஆவணங்களைக் காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிலைப்பாடு எடுத்துள்ளது. தான் விதித்துள்ள புதிய விதிகள் சாத்தியமானதே என தேர்தல் ஆணையம் வாதிடுகிற அதே வேளையில், பீகாரில் தற்போது நடைபெற்று வரும் இத்திருத்தம் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிற எதிர் பார்ப்பு நிலவுவதால் இது குறித்த விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன. இத்திருத்தமானது ஒரு பெரும் பகுதி வாக்கா ளர்கள், வாக்காளர்

பட்டியலில் இருந்து விடுபடுவ தற்கே இட்டுச் செல்லும் என்கிற கருத்தினை இதனை எதிர்ப்பவர்கள் முன்வைக்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிக்க தகுதி உடைய அத்தனை வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முறைக்கு, அது அடிப்படை அவசியமாகும். எத்தகைய ஆவணங்களை வாக்காளர்கள் வைத்துள்ளனர்,  சமூகத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்த வர்கள் ஆவணங்களை வைத்திருக்க முடியும், எத்தனை சதவீதம் மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடுவார்கள் என்பது குறித்த ஆய்வு கள் எல்லாம் இத்தகைய பணிகளை மேற்கொள்வ தற்கு முன் செய்திருக்க வேண்டும். சமூக ரீதியாக வும், பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும்,  பல வகைகளில் பன்முகத்தன்மை

கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில் தேர்தல் ஆணையம் கூறும் ஆவணங்களை வைத்திருப்பதற்கான வாய்ப்பு கள் ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவே இருக்கும். மாநில நிர்வாகத்தின் கட்டமைப்பு, காலம் காலமாக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் திறன், படிப்பறிவு விகிதம், இது குறித்த ஞானம் - இவற்றிற்கு ஏற்றாற் போல் அது மாறுபடும். இது சில மாநிலங்களில், பெரு வாரியான மக்கள் திரளினர், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடுவதற்கே இட்டுச்செல்லும். அதிர்ச்சி அளிக்கும்  ஆய்வின் முடிவுகள்  அசாம், கேரளா,  மத்தியப் பிரதேசம், உத்தரப்பிர தேசம், மேற்கு வங்கம், தில்லி ஆகிய மாநிலங்க ளில் லோக்நிதி - சிஎஸ்டிஎஸ்(CSDS) அமைப்பு ஒரு ஆய்வினை மேற்கொண்டது.  36 சதவீதத்தினர் மட்டுமே இப்படி ஒரு “சிறப்பு  தீவிர திருத்தம்”நடைபெறுவதையே அறிந்து வைத்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் தங்களி டம் பிறப்புச் சான்றிதழ் கிடையாது என்றனர். ஐந்தில் இருவர், தங்களிடம் குடியிருப்புச் சான்றிதழோ, சாதி  சான்றிதழோ கிடையாது என்றனர். சிறப்பு தீவிர திருத் தம்,  1987 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களு டைய அம்மாவோ அப்பாவோ இந்திய குடியுரி மைக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்கி றது. 2003க்குப் பின் பிறந்திருந்தால், பெற்றோர் இருவருமே வைத்திருக்க வேண்டும் என்கிறது. பெரும்பான்மையான மக்களுக்கு, இந்த நிபந்த னையை நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூன்றில் இருவர்,

 தங்களது பெற்றோருக்கு பிறப்புச் சான்றிதழ் கிடை யாது என்றனர். அதற்கு இணையான எண்ணிக்கை யிலானோர் தங்களிடம் உயர்கல்வி பள்ளிச் சான்றி தழோ, சாதிச் சான்றிதழோ கிடையாது என்றனர்.  கிட்டத்தட்ட 5 சதவீதம் பேர்,தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஒன்று கூட கிடை யாது என்றனர். ஆண்களை விட பெண்களே அதிக மான எண்ணிக்கையில் எந்த ஆவணமும் இன்றி உள்ளனர். இதில், நான்கில் மூவர், சமூகத்தின் பொரு ளாதார அடித்தளத்தில் இருந்து வந்தவர்கள். நான்கில் ஒருவர் பழங்குடியினர். 40சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து வந்தவர்கள். பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மத்தியப் பிரதேசத்தில் 11 சதவீதமும், அசாமில் 36 சதவீதமும்,  கேரளாவில் 36 சதவீதம், தில்லியில் 44 சதவீதம், மேற்கு வங்கத்தில் 49 சதவீதமாகவும் உள்ளனர். பத்தாம் வகுப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் கேர ளாவில் 85 சதவீதம், தில்லியில் 68 சதவீதம் மேற்கு வங்கத்தில் 66 சதவீதம், அசாமில் 61 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 40 சதவீதம் ஆக உள்ளனர். குடியிருப்புச் சான்றிதழை பொறுத்தவரை, கேரளா வில் 65 சதவீதம் தில்லியில் 57 சதவீதம், உத்தரப் பிரதேசத்தில் 55 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 51  சதவீதம் அசாமில் 49 சதவீதம் மற்றும் மேற்குவங் கத்தில் 35 சதவீதம் பேர் வைத்துள்ளனர். சாதிச் சான்றிதழை பொறுத்தவரை, கேரளாவில் 65 சத வீதம், அசாமில் 60 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 51சதவீதம், தில்லியில் 51 சதவீதம், உத்தரப் பிரதே சத்தில் 48 சதவீதம், மேற்குவங்கத்தில் 19 சதவீதம் பேர் வைத்துள்ளனர்.  இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார அடுக்குகள், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள ஆவணங்களை மக்கள் வைத்திருப்பதை தீர்மா னிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிறப்புச் சான்றிதழை பொறுத்தவரை தலித்  மக்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே வைத்துள்ள னர். பழங்குடியின மக்களில் 39 சதவீதம் பேர் வைத்துள்ளனர். பொருளாதார அடுக்கில் மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களில் 23 சதவீதம் பேரே வைத்துள்ளனர்.  பாஸ்போர்ட்டை பொறுத்தவரை பொதுவாக ஐந்தில் ஒருவரும் தலித் பிரிவினரில் 5 சதவீதம் பேரும் பழங்குடியினரில் 4 சதவீதம் பேரும் வைத்துள் ளனர். பெற்றோர்களுக்கான சான்றிதழ்களைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களில் பத்தில் எட்டு பேர் தங்களுடைய தாயாருக்கு பத்தாம் வகுப்பு சான்றிதழ் கிடையாது என்றும் வசதி படைத்துள்ளவர்களில் ஐந்தில் இருவர் தங்கள் தாயாருக்கு பத்தாம் வகுப்பு சான்றிதழ் கிடையாது என்றும் கூறியுள்ளனர். அதிகம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் ... இந்த சர்வேயின் வேறு சில முடிவுகளும் சில செய்திகளைச் சொல்கின்றன.  பிறப்புச் சான்றிதழ் கட்டாயப்படுத்தப்படுவதால் யார் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, படிப்பறிவற்றவர்க ளும், மூத்த குடிமக்களுமே அதிகம் பாதிக்கப்படு வார்கள் என்கிற பதில் வந்தது.

ஏழை மக்களும், கிரா மப்புற மக்களும், புலம்பெயர் மக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்களோடு இஸ்லாமி யர்கள், தலித் மற்றும் பழங்குடி மக்களும் பாதிப்பு க்கு உள்ளாவார்கள். சாதி மற்றும் வர்க்க பேதம் இன்றி பிறப்புச் சான்றி தழ் வைத்திருப்பதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலை யில் தேர்தல் ஆணையம் அதனை கட்டாயம் வைத்தி ருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாக வலி யுறுத்துவது கவலையளிக்கும் அம்சமாக உள்ளது.  எளிய மக்களில் பெரும்பகுதியினரிடம் இச்சான்றி தழ் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய புதிய கட்டுப்பாடுகள், பெரும்பகுதி மக்களை, நியாயமான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேற்றி விடும் என்கிற அச்சம் உள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் 45சதவீதம் பேர்,  நியாயமான வாக்காளர்கள் விடுவிக்கப்பட்டு விடு வார்கள் என்கிற அச்சத்தை தெரிவித்துள்ளனர். நம்பிக்கை மிகவும் முக்கியம்  தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறித்தும் இந்த சர்வே வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. உதாரணத்திற்கு, உத்தரப்பிரதேசத்தில் 2019-இல், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் சதவீதம் 56 சதவீதமாக  இருந்தது.  தற்போது 21 சதவீதமாகக்  குறைந்துள்ளது. கேரளா வில் 57 சதவீதமாக இருந்தது,  35 சதவீதமாகக்  குறைந்துள்ளது. இது உண்மையிலேயே கவலை கொள்ளச் செய்கின்றது.  இந்த சர்வேயில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள்,  பல முக்கியமான விஷயங்களை உணர்த்துவதாக உள்ளன. பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள ஆவணங்கள் மக்கள் கைகளில் இருப்பது என்பது ஏற்ற இறக்கங்களோடு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வரையறைகளோடே மேற்கொண்டு

இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை எடுத்துச் செல்வது என்பது வாக்காளர் பட்டியலில் தங்கள் இருப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நியாயமான உரிமைக ளோடும் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலை  ஏற்படுத்தும். இந்த சவால்களுக்கு வாக்காளர்கள் காரணமாக இருக்க முடியாது. தேர்தல் ஆணை யம் கேட்கும் ஆவணங்களை அரசு மக்களுக்கு வழங்குவதில் உள்ள பலவீனம், அரசு ஏடுகளை  பராமரிப்பதில் உள்ள பலவீனம், இந்த ஆவணங்க ளை பெறுவதில் சாதாரண மக்களுக்கு உள்ள இடை யூறுகள், பெற்றோர்கள் கண்டிப்பாக கொண்டிருக்க  வேண்டும் என சொல்லப்படும் ஆவணங்கள் - இவையெல்லாம் சவால்களை முன்னிறுத்தும். தேர்தல் வாக்காளர் பட்டியல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடை யாது. ஆனால் இப்போது அமல்படுத்தப்படும் திருத்தம், பெரும்பகுதி உண்மை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபடுவதற்கே இட்டுச் செல்லும். பாரபட்சமற்றுச் செயல்பட வேண்டிய அமைப்பு தான் தேர்தல் ஆணையம். அதன் மீதான மக்களின்  நம்பகத்தன்மை குறைவதென்பது ஜனநாயகத்தி ற்கு ஆபத்தானது. தகவல் ஆதாரம் : தி இந்து ஆங்கில நாளிதழின்  ஆகஸ்ட் 16, 17 கட்டுரைகளின் தரவுகள்.