நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நிரந்தர கட்டடத்தில் அமைக்க வேண்டும்
மதுரை, செப்.11- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லக் குழு கூட்டம் செப்டம்பர் 9-10 தேதிகளில் மதுரையில் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செய லாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் தோழர் கே.பி.பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் நெருக்கடியான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு 8 முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. உயிர்ச் சேதத்திற்கு ₹1 கோடி இழப்பீடு தருக! மயில், காட்டுப்பன்றி, யானை, புலி, கரடி தாக்குதல்களால் ஏற்படும் உயிர்ச் சேதம் மற்றும் பயிர் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வன ஊழியர்கள் வனவிலங்கு கள் தாக்கி இறந்தால் ₹1 கோடி இழப்பீடு வழங்கப்படுவது போல் பொதுமக்களுக்கும் அதே அளவு இழப்பீடு வழங்கவும், பாதிக்கப் பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கவும் கோரப்பட்டது. மரவள்ளிக்கு ₹16,000 கொள்முதல் விலை தருக! சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் முக்கிய பயிரான மரவள்ளி கிழங்கு விலை கடந்தாண்டு ₹5,000க்கும் கீழ் வீழ்ந்து 2025 ஆம் ஆண்டு தொ டக்கத்தில் ₹4,000 ஆக மேலும் சரிந்துள் ளது. கம்போடியாவிலிருந்து ஸ்டார்ச் இறக்கு மதி வரி 50%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்ட தால் விவசாயிகளுக்கு ₹5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ₹16,000 கொள்முதல் விலை நிர்ணயித்து முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரப்பட்டது. நெல் கொள்முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் என்சிசிஎப் (NCCF)க்கு வழங்கப்பட்ட 42 நெல் கொள்முதல் நிலையங்களை ரத்து செய்து டிஎன்சிஎஸ்சி (TNCSC) மூலம் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். மழை காலங்களில் நெல் பாதுகாப்புக்காக நிரந்தர மேற்கூரையுடன் கூடிய கட்டடங்கள் அமைக்க வேண்டும் என கோரப்பட்டது. மாற்று இடம் தேர்வு செய்க! இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் கும்பரம், ரெகுநாத புரம், வாலந்தரவை, பெருங்குளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நல்ல குடியிருப்பு கிரா மங்கள், லட்சக்கணக்கான பனை-தென்னை மரங்கள், நெல்-எண்ணெய் வித்துக்கள் விளையும் நல்ல மண்வளம் மிக்க பகுதியில் விமான நிலையம் அமைக்காமல் வேறு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பிற கோரிக்கைகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றி யத்தில் ஏனாதி, கணக்கன்குடி, பாப்பாக்குடி கண்மாய்களில் சவுடு மண் அனுமதியின் பெயரில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தேனி மாவட்டம் 18ஆம் கால் வாய்க்கு ஒதுக்கப்பட்ட ₹12 கோடி முழுமை யாக செலவிட்டு உடனடி நீர் வழங்கல் செய்ய வேண்டும். வைகை அணை பகுதியில் 25 ஆண்டுகளாக வழங்கிவரும் மும்முனை மின்சாரத்தை தொடர வேண்டும். மதுரை மாவட்டம் வெள்ளலூர் கிராமத்தில் 30 ஆண்டுகளாக குடியிருக்கும் 150 நிலமற்ற குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.