articles

img

ஆயிரம் டாக்டர்கள்... பல்லாயிரம் பொறியாளர்கள்... அருந்ததியர் உள் ஒதுக்கீட்டால் கிடைத்த பலன்! -க.சுவாமிநாதன்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு காரண மாக மருத்துவ, பொறியியல் கல்லூரி களில் அருந்ததிய மாணவர்கள் கால் பதிக்கிற வாய்ப்பு கிடைத்தது. இந்திய விடுதலைக்கு பின்னர் 62 ஆண்டுகள் கழித்தே இது சாத்தியம் ஆகியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இப் பிரச்சினையை அரசியல் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை பெறச் செய்ததும், பல்லாண்டு காலமாக கோரிக்கையை எழுப்பி வந்த அருந்ததியர் இயக்கங்களின் கை கோர்ப்பும் உள் ஒதுக்கீட்டை கைவசம் ஆக்கியது.

2009க்கு முன்பாக அண்ணா பல்கலைக் கழகம், டோட் 1 கல்லூரிகள் என்று அழைக்கப்படு கிற மதுரை தியாகராயர் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி கல்லூரி, சென்னையில் பெருங் கனவாக திகழ்கிற எஸ்.எஸ்.என் கல்லூரி போன்றவற்றில் அருந்ததிய மாணவர்கள் கால் பதிக்க முடியாத நிலைமை இருந்தது என்பதே உண்மை. 

2009 இல் துவங்கி 2023 வரையிலான 15 ஆண்டு கால மருத்துவக் கல்லூரி அனுமதிகள், பொறியியல் கல்லூரி அனுமதிகளில் உள் ஒதுக்கீடு காரணமாக அருந்ததிய  மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இடம் பெற்றுள்ளனர். 

2009 - 10 முதல் ஆண்டில் 56 அருந்ததியர் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரியிலும் இடம்பெற்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்துள்ளது.  15 ஆண்டுகளில் 1500 மருத்துவர்கள் உருவாகி  இருப்பார்கள். 40,000 பொறியியல் பட்டதாரிகள் கல்வியை முடித்து இருப்பார்கள். இது தவிர பாலிடெக்னிக், கலைக் கல்லூரி அனுமதிகளிலும் அருந்ததிய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளனர். அரசு பணி நியமனங்களிலும் அருந்ததியர்கள் இடம்பெறுகிற வாய்ப்பு கிடைத்துள்ளது. 

2023 தமிழ்நாடு பொறியியல் கல்லூரி அனுமதிகளின் கட் ஆப் மதிப்பெண்கள் எந்த அளவிற்கு 2009க்கு முந்தைய காலத்தில் அருந்ததிய மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு இருந்திருக்கும் என்பதை இப்போதும் நிரூபிக்கிற தரவாக அமைந்திருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       200
BC       200
BC M  199.5
MBC   199.5
SC       198.5
SC A   185.5

அண்ணா பல்கலைக்கழக இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       200
BC       199.5
BC M  198
MBC   198.5
SC       195
SC A   186

அண்ணா பல்கலைக்கழக ஐ.டி கட் ஆப் மதிப்பெண்கள்

OC       199
BC       198.5
BC M  198
MBC   198
SC       191.5
SC A   176

அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       195.5
BC       193.5
BC M  191
MBC   191.5
SC       182.5
SC A   168
மதுரை தியாகராயர் இ.சி.இ  கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       196.5
BC       195.5
BC M  195.5
MBC   192
SC       179.5
SC A   167.5
மதுரை தியாகராயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       198
BC       196.5
BC M  195
MBC   194
SC       187
SC A   178.43
கோவை பி.எஸ்.ஜி, இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       199
BC       198
BC M  195.5
MBC   197.5
SC       190
SC A   186

அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       195.5
BC       193.5
BC M  191
MBC   191.5
SC       182.5
SC A   168
மதுரை தியாகராயர் இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       196.5
BC       195.5
BC M  195.5
MBC   192
SC       179.5
SC A   167.5
மதுரை தியாகராயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       198
BC       196.5
BC M  195
MBC   194
SC       187
SC A   178.43
கோவை பி.எஸ்.ஜி, இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள் 

OC       199
BC       198
BC M  195.5
MBC   197.5
SC       190
SC A   186
அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       195.5
BC       193.5
BC M  191
MBC   191.5
SC       182.5
SC A   168
மதுரை தியாகராயர் இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       196.5
BC       195.5
BC M  195.5
MBC   192
SC       179.5
SC A   167.5
மதுரை தியாகராயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       198
BC       196.5
BC M  195
MBC   194
SC       187
SC A   178.43
கோவை பி.எஸ்.ஜி, இ.சி.இ கட் ஆப் மதிப்பெண்கள் 
OC       199
BC       198
BC M  195.5
MBC   197.5
SC       190
SC A   186

அருந்ததியர் உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் எவ்வாறு அவர்கள் உயர் கல்வி நிலையங்களில் நுழைநதிருக்க முடியும்? 

இன்னும் கூட பொதுப் பட்டியலில் எத்தனை அருந்ததியர் இடம் பெற்று இருக்க முடியும் என்பது கேள்வி. நிச்சயமாக பொதுப் பட்டியல் பெரும்பாலும் அருந்ததியர் அல்லாதவர் பட்டியலாகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதே சமூகச் சூழல். இட ஒதுக்கீடு கடந்து அருந்ததியர் முன்னேற்றத்திற்கு மேலும் திட்டமிடுகிற அரசியல் உறுதி தேவைப்படுகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. 

புதிய கல்விப் பிரிவுகளில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு இருந்தும் கூட அவற்றில் அவர்கள் இடம் பெறாததன் காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. 

உதாரணமாக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) கல்விப் பிரிவு 5 கல்லூரிகளில் இருந்தும் 1 ல் மட்டுமே அருந்ததிய மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். 

சைபர் செக்யூரிட்டி கல்விப்பிரிவு 3 கல்லூரிகளில் உள்ளது. 1 கல்லூரியில் (வேலம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை) மட்டும் அருந்ததிய மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் கட் ஆப் இதோ...

OC       173.5
BC       167.5
BC M  172.46
MBC   166
SC       148
SC A   107.5

கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாக இருப்பது சாதிய அடுக்கின் கடைத் தட்டில் எந்த அளவுக்கு அருந்ததியர் அழுத்தப்பட்டுள்ளனர் என்பதன் வெளிப்பாடு. இழி தொழில்கள் இன்னமும் அருந்ததிய மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சாதிய அநீதி தொடரும் சூழலில் இவ்வளவு தூரம் அம்மாணவர்கள் உள் ஒதுக்கீட்டை பயன்படுத்துகிற அளவுக்கு வந்திருப்பதே சாதியச் சமூக அமைப்பின் கன்னத்தில் விழும் அறை ஆகும். 

இருந்தாலும் உள் ஒதுக்கீடு அமலாக்கம், அதன் மீதான கண்காணிப்பு, அருந்ததிய மாணவர்களை ஊக்குவிக்கும் சிறப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியம்.