புதிய கண்ணோட்டத்தை விதைக்கும் பேரறிஞரின் கட்டுரைகள்
“பாசிசத்தை வீழ்த்துவது வர லாற்றுக் கடமை” என்ற இந்த நூல், மார்க்சிய பொருளாதார அறி ஞரான பிரபாத் பட்நாயக் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் சிறப்பான முறை யில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்த 15 கட்டுரைகள் மற்றும் ஒரு நேர்காணல் அடங்கிய இத்தொகுப்பு, இன்றைய அரசி யல் பொருளாதார சூழலை புரிந்து கொள்வதற்கான முக்கியமான ஆவண மாகும். உலக அளவில் மார்க்சிய பொருளா தார சிந்தனையாளராக திகழும் பேரா சிரியர் பிரபாத் பட்நாயக், ஏகாதிபத்தி யத்தின் மூர்க்கத்தனமான செயல்பாடு களையும், நிதி மூலதனத்தின் நடவடிக்கை களையும் மார்க்சிய பொருளாதார கண்ணோட்டத்தில் தொடர்ந்து அலசி வருகிறார். உழைப்பாளி மக்களுக்கு கருத்தியல் ஆயுதங்களை வடிவமைத்துத் தருவதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஜவகர் லால் நேரு பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியராகவும், கேரள திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் பணியாற்றி யுள்ள இவர், தற்போது மார்க்சிய அரசியல் பொருளாதார ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார். நூலின் அம்சங்கள் இன்றைய நவதாராளமய கால கட்டத்தில் இந்நூலின் முக்கியத்துவம் மிகுந்ததாகும். பேராசிரியர் பிரபாத் பட்நாயக்கின் எழுத்துகளை வாசிக்கும் போதுதான், இன்றைய அரசியல் சூழ லுக்குப் பின்னணியில் உள்ள மார்க்சிய பொருளாதார கண்ணோட்டத்தைப் பெற முடியும். “ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் அதன் வர்க்க நலன் ஒளிந்திருக்கிறது” என்ற மார்க்ஸின் கண்ணோட்டத்தில் அமைந்துள்ள இக்கட்டுரைகள், இன்றைய காலச்சூழலில் நடைமுறைப் படுத்தப்படும் ஏகாதிபத்திய, நவ தாராளமய, நவபாசிச பொருளாதாரக் கோட்பாடுகளை அம்பலப்படுத்துகின்றன. முக்கிய கேள்விகளும் பதில்களும் தோழர் என். குணசேகரன் முன்னுரை யில் குறிப்பிட்டுள்ள கருத்தியல் கேள்வி களுக்கு இந்நூல் விரிவான பதில்களை அளிக்கிறது: - இந்துத்துவாக் கொள்கையின் தாக்கம் எவ்வாறு வலுப்பெற முடிந்தது? - கடந்தகால பாசிசத்திற்கும் இன்றைய பாசிசத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? - உலக அளவில் பாசிச அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது? - தொழிலாளர்-விவசாயிகள் கூட்ட ணியின் முக்கியத்துவம் என்ன? - சமூகத்தில் சிறு உற்பத்தியாளர்களின் பங்கு என்ன? இப்படிப்பட்ட கருத்தியல் கேள்வி களை எழுப்பி, மார்க்சிய அடிப்படையில் ஆழமான பதில்களைக் கட்டுரைகளாக வடிவமைத்துள்ளார், பிரபாத் பட்நாயக் நவதாராளமயம் மற்றும் கார்ப்பரேட் இந்துத்துவா நவதாராளமய மற்றும் நவபாசிசக் கூட்டணியின் இந்திய வடிவமே கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியாகும் என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். பழைய பாசிச அரசுப் பாணியில் தற்போ தைய நெருக்கடியிலிருந்து முதலாளித்து வத்தை மீட்க முடியாது என்பதால், பல்வேறு முகமூடி அணிந்த நடவடிக்கை களை எடுத்து வருகிறது என்கிறார். இதற்கு சரியான மாற்று இடதுசாரி கள் பலமடைவதுதான் என்று குறிப்பி டும் அவர், “இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லை என்பது தவறு. இடதுசாரிகள் இல்லாமல் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை” என்று உறுதியுடன் வெளிப்படுத்துகிறார். நூலின் செறிவான உள்ளடக்கம் ஒவ்வொரு கட்டுரையும் மிகுந்த செறி வான உள்ளடக்கத்தைக் கொண்டுள் ளது. மார்க்சிய தத்துவார்த்த பலத்தை அதன் அடித்தளமான பொருளாதாரப் பின்புலத்திலிருந்து கட்டுரையின் ஒவ் வொரு வார்த்தையும் எழுந்து நிற்கிறது. செயற்கை நுண்ணறிவு தொடங்கி, ஏகாதிபத்தியத் தலையீட்டின் புதிய வடிவ மான பொருளாதாரத் தடை வரை இந்நூல் ஆழமாக விவாதிக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கம், சிறு உற்பத்தியாளர்களை நசுக்குவது, விவசாயிகளைக் கார்ப்பரேட் வலைக்குள் சிக்கவைப்பது என ஒவ்வொரு கட்டுரை யும் கருத்தியல் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. நிதி மூலதனத்தின் தீவிரமான அம லாக்க காலத்தில், அரசுகளின் பங்கு எப்படி ஒவ்வொரு கட்டத்திலும் முதலா ளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற முறையில் கொள்கைகளையும் செயல் பாடுகளையும் வடிவமைக்கிறது என்பதை விளக்குகிறார். பெரு முதலாளிகளைப் பாதுகாக்கும் வரி சீரமைப்பு மற்றும் வரிச் சலுகைகளை வாசிக்கும்போது, உழைப்பாளி மக்களின் துன்பத் துய ரங்களுக்கான உண்மையான கார ணங்களை அறிய முடிகிறது. போராட்டங்களின் புதிய கண்ணோட்டம் நாம் நேரில் சந்திக்கக்கூடிய ஏராள மான பிரச்சனைகளுக்கு எவ்வளவு ஆழமான தத்துவார்த்த அம்சங்கள் உள்ளன என்பதையும், அதற்கு எதிரான போராட்டம் இம்மண்ணில் எப்படி நடைபெறுகிறது என்பதையும் எடுத்துரை க்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம் போன்ற வளர்ந்துவரும் போராட்டங்களையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்ப தற்கான கருத்தியல் விதையை விதைக்கிறது. மக்களின் வர்க்க விடுதலைக்காகப் போராடும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. இத்தகைய செழு மையான கட்டுரைகளை தமிழில் தந்துள்ள தோழர்கள் பாராட்டுக்குரி யவர்கள். பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை ஆசிரியர்: பிரபாத் பட்நாயக் விலை:ரூ.120/பக்கங்கள்:120 வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்பு: 944-496-0935