articles

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம் - பாண்டியராஜன்

எவன்டா இந்த கணக்க கண்டுபிடிச்சது? அவன் கையில சிக்கினான் என்று நம்ம பலரும் பேசுவோமுள்ள, அதற்கு என்ன காரணம்? நமக்கு கணக்கு மேல இருக்கிற வெறுப்புதானே. உண்மையில அந்த அளவுக்கு வெறுப்பு வரக் காரணம் என்ன? அன்றாட நம் வாழ்க்கை தொடங்குவதே கணிதத்தோடுதான் என்பதை நாம் உணராததுதான். உண்மையில் கணக்கு என்பது ஒரு பயிற்சி தான். வேறு ஒன்றுமில்லை. நாம் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் வாழ முடியாது தானே. காலையில் எழுந்தவுடன் அம்மா சின்ன வயசுல இருந்தே பல் தேய்க்க சொல்லித்தருவாங்க இல்லையா? முதலில் அவங்க பல்லு தேச்சி விடுவாங்க. கொஞ்ச நாள் கழிச்சு நம்மக்கிட்ட ஒரு பிரஷ கொடுத்து தேய்க்கச் சொல்லுவாங்க. பின்ன ஒரு குறிப்பிட்ட வயசுக்கு பின்னாடி யாரும் எதுவும் சொல்லாமலே நாம் காலையில் எழுந்தவுடன் பிரஷ் பண்ணும் தானே. அதுதான் கணக்கு. கணக்க கண்டுபிடிச்சது யாரு என்ற கேள்விக்கு பதிலே இல்லையே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அதைத்தான் இந்த தொடர் முழுவதும் பார்க்கப் போறோம். அது மட்டுமல்ல, சின்னச் சின்ன விளையாட்டுகள் மூலமாகவும் கணக்கை பயிற்சி எடுக்க போறோம். பயிற்சி என்றாலே ஒரு நாளில் நடப்பது இல்லை என்பதுதானே. இப்ப நீங்க ஒரு கால்பந்து வீரராக வேண்டும் என்றால் பயிற்சிக்கு எடுப்பீங்கள்ல. ஒரு நாள் கிரவுண்டுக்கு போயிட்டு வந்தா போதுமா?

இல்லையில. தொடர்ந்து போகணும் தானே. தொடக்கத்துல நீங்க கால்பந்த வீரராக பல மணி நேரம் தொடர்ந்து பயிற்சி எடுப்பிங்க. பின்னால ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது பயிற்சி செய்யணும் தானே. பயிற்சியை விட்டுவிடக் கூடாதுதானே. இது கால்பந்துக்கு மட்டுமல்ல கிரிக்கெட்டு. ஹாக்கி, கபடிக்குன்னு எல்லா விளையாட்டுக்கும் பொருந்தும். அப்படிதான் கணக்குக்கும். நாம் இங்க இந்த பயிற்சியிலதான் கொஞ்சம் விலகிவிடுறோம். அதனாலதான் நமக்கு இந்த மாதிரி தெரிகிறது. இந்த தொடரில் நாம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி தொடர்ந்த பயிற்சியில் ஈடுபட்டு கையில் கணக்கை பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் உலா செல்லலாம், வாருங்கள்.  சரி ஒரு சின்ன பயிற்சி. நாம் அன்றாடம் பல் தேய்க்கும் பொது எடுத்துக்கொள்ளும் பற்பசையின் அளவை யாரேனும் நமக்கு கற்றுக்கொடுத்தார் களா? நமக்கு எப்படி இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று தெரிந்தது. நாம் தினந்தோறும் எடுத்த பயிற்சியின் விளைவுதானே. அது தானே கணக்கு. பற்பசை விளம்பரத்தில் காட்டுவது போல யாரேனும் பற்பசை எடுப்பது உண்டா? உங்கள் அனுபவத்தை எழுதுங்கள். நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பற்பசையை பிரஷில் எடுத்துக் கொள்கிறோம்? அதன் எடை குறித்து தோராயமாக மதிப்பிட்டு எனக்கு ஒரு தபால் அட்டையில் போடுங்க. தொடர்ந்து பேசுவோம்…