articles

img

கம்யூனிஸ்டுகள் கூறியது இலங்கையில் நடக்கிறது - சுஜித் அச்சுக்குட்டன்

கோத்தபய மஹிந்த - பசில் ராஜபக்சே கும்பலுக்கும் இவர்களுடன் சேர்ந்து கொண்ட ரணிலுக்கும் எதிரான  இலங்கை மக்களின்  பேரெழுச்சியில் தமிழர் - சிங்களர் - முஸ்லிம் இன  மக்கள்  சேர்ந்து நிற்பதும் கூட்டு அரசு அமைக்கப்பட  வேண்டும்  என்ற கோரிக்கை வலுவடைந்து இருப்பதும்  உலக அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள் ளது. இலங்கையில் இப்போது நடைபெறும்  சம்ப வங்கள்  1983 ஆம் ஆண்டில்  இந்தியாவில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட  மிகச் சரியான  கொள்கை நிலையை மீண்டும்  நமக்கு உறுதிப்படுத்து கிறது. 1983-ஜூலையில் வெடித்த இன வன்முறை களுக்குப் பின்னர்   வெளியிடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் தமிழின பிரச்சனைகளுக்கான வழிகாட்டுதலுடன் கூடிய  ஒரு அழைப்பை விடுத்திருந்தது. மார்க்சிய -  லெனினியக் கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்ட - சுயாட்சி - சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையானது, இந்து மாக்கடலில் அமெரிக்காவின்  தொலைநோக்கு  சதிகள் மற்றும்  இலங்கையின் ஆட்சி அதி காரத்தில் இருந்த இனவெறி முதலாளித்துவ நிலப் பிரபுத்துவத்திற்கு   எதிராகவும் ஒரே இலங்கை என்னும்  தீர்மானகரமான கோட்பாட்டிற்குள் தீர்க்கப்பட  வேண்டும் என  அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. 

தமிழ்  வம்சாவளியினர் வாழும் இலங்கையில் வடக்கு  மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அந்தஸ்து அடிப்படையில் தமிழர்களின் நியாயமான ஏக்கங்கள் - எதிர்பார்ப்புகள் -தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்  என்பதை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த  அறிக்கை வரையறுத்து இருந்தது. இதே நிலையை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும்  எடுத்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த அறிக்கை யில், “சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மை யினரைத் தூண்டுவதைத் தவிர, சிறுபான்மைப் பிரச்ச னையைக் கையாள்வதற்கு முதலாளித்துவ-நிலப் பிரபுத்துவ அரசுகளுக்கு வேறு வழி தெரியாது. அதே  நடைமுறை இலங்கையிலும் நடைபெறுகிறது. சிறுபான்மையினரின் நீதிக்கான போராட்டமானது, பொருளாதார விடுதலை மற்றும் ஜனநாயக உரிமை களுக்கான மக்களின் போராட்டத்தின் ஒருங்கிணைந்த  பகுதியாகும். இலங்கையிலுள்ள அனைத்து ஜன நாயக சக்திகளும், அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், சிறுபான்மையினருக்கு நீதி வழங்குவதற்கும், மக்களின் முன்னேற்றத்தை உறுதிப் படுத்துவதற்கும் ஒன்றிணைய வேண்டும்” என்று தீர்க்க தரிசனத்தோடு அந்த அறிக்கை  கூறியது. 

கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த இந்த கொள்கை நிலையின்படி  இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப் பட்டு இருந்தால் இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சண்டையும் மிகப்பெரும் உயிர்ச் சேதத்தையும் தவிர்த்திருக்க முடியும்.  பல லட்சக் கணக்கான தமிழ் மக்களின் வாழ்க்கை சிதறிப் போவதி லிருந்தும் பாதுகாத்திருக்க முடியும். இலங்கையில் ஜூலை 1987 லிருந்து மார்ச் 1990  வரை நீடித்த இந்திய அமைதிப் படையின் கட்டளை  அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சையது அடா  ஹன்சைன் எழுதினார். “உண்மையில் எங்களுக்கு  எதிராக எந்த உரசலும்  இல்லாத விடுதலைப் புலி களுக்கு நாங்கள் எதிரியாக இருந்தோம். விடுதலைப் புலிகளை அழிப்பதில் எங்களின் தயக்கம் காரணமாக சிங்களர்களையும் கோபப்படுத்தியிருந்தோம். தெளி வான குறிக்கோளில்லாமல்  தேவையின்றி 1200 இந்திய  வீரர்களின்  மரணத்தையும்  சுமார்  3000 இந்திய வீரர்களின் ஊனத்தையும் அது  கொண்டு வந்தது” .  (லெப்.ஜெனரல் ஹன்சைன் ட்வீட்டர் பக்கம்  29.7.2021-  நியூஸ் 18 29.7.2021) 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன் வைத்த நீடித்த  நிலையான தீர்வுகள்  இரு தரப்பிலும் விசிறிவிடப்பட்ட   இனவாத தீயின் வெப்பத்தில்  ஆவியாயின.   அதன்படி  நடைபெற்றிருந்தால் சிங்கள - தமிழ் மக்களின்  சிந்த னையை ஒன்றுபட்ட இலங்கையின் அமைதியான அரசியல் நீரோட்டத்திலும் பொருளாதார தொழில்துறை  வளர்ச்சியிலும்  இணைத்திருக்க முடியும். இத்தனை  ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் சீரழிவை  ஏற்படுத்திய கும்பலை இன்றைக்கு ஓட ஓட விரட்டி யுள்ள இலங்கை மக்களின்  ஒன்றுபட்ட போராட்டம் 1983  ஆம் ஆண்டில் வெளிவந்த கம்யூனிஸ்டுகளின் அரசியல் தீர்வை மெய்ப்பித்துள்ளது.  

வரலாற்றில் இதுவே முதன்முறை 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த  அறிக்கை யில்  கூறப்பட்ட வாதங்களின்   உண்மையை இன்று இலங்கையில் நடைபெறும் அனைத்துப் போராட்டங் களிலும்  பார்க்கிறோம். 19.5.2022 அன்று இலங்கை  அரசை எதிர்த்து கொழும்பு நகரில் நடைபெற்ற போராட் டங்களின் ஒரு பகுதியாக, 2009 வரை  26 ஆண்டு காலம் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரில்  பலி யான தமிழ்ப் போராளிகள், பொதுமக்கள், சிங்கள ராணுவத்தினர் என அனைவருக்கும்  கூட்டாக அஞ்சலி  செலுத்தப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் முதல்  முறையாகும். “நான் பிறப்பால் சிங்களவன். அரச  பயங்கரவாதம் மற்றும் அரசு சார்பற்ற குழுக்களின் பயங்கரவாதத்தின் விளைவாக 13 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம்,  இந்து  அனைவருக்கும் இன்று நாங்கள்  நினை வேந்தலை நடத்தினோம் அந்த  நிகழ்வுகளால் துக்கப் படுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள், ஒரு சிங்கள வன் என்ற முறையில் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ள எனக்கு உரிமை உள்ளது, ஏனென்றால் நான்  மற்றவற்றை விட மனிதநேய மதத்தை நம்புகிறேன்.”   என்று சமூக ஊடக ஆர்வலர்  சுமீர குணசேகர தெரி வித்தார். (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 19.5.2022) 

பொருளாதாரச் சீரழிவிற்கான  அடிப்படைக் காரணிகள்

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 50 பில்லியன் அமெரிக்க டாலராக திகைக்கவைக்கும்  அளவு இன்று  அதிகரித்துள்ளது. அன்னியச் செலாவணி இருப்பு சரிந்து விட்டதால் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கான இறக்குமதியை செய்ய முடியவில்லை. எனவே  இவைகளின் விலை வாசி கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள்  பற்றாக்குறையால் வாகனங்களை இயக்கமுடியாம லும் மின்வெட்டு 12 மணி நேரத்தை தாண்டிவிட்டது. இலங்கையின் குழப்பமான இன்றைய நிலைக்கு நான்கு அடிப்படைக் காரணிகளை கூறலாம். முதன்மையாக, 1983 ஜூலையில் துவங்கிய இன மோதல்கள், அதைக் கையாண்ட  இலங்கையின் முதலாளித்துவ  நிலப்பிரபுத்துவ அரசுகளின் சுயநல  துரோகங்களும் தவறுகளும் அதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் அழிவுகளும் ராணுவத் தளவாட கொள்முதல் செலவுகளும்தான் முக்கிய கார ணமாகும்.  இலங்கை உள்நாட்டு போரின்  அழிவுகள்   இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது; மக்களின் வளர்ச்சி சிந்தனையை சிதறடித்தது. இலங்கை ராணுவத்திற்காக செலவழித்த 1385 பில்லி யன்  இலங்கை ரூபாய் (78.90 பில்லியன் அமெரிக்க டாலர்) (ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவன அறிக்கை) மிகப்பெரும் தொகை என்பது மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், பாட சாலைகள், நகரங்கள், நெடுஞ்சாலைகள், சிறு-குறு தொழிலகங்கள், மனித வளங்கள் அழிந்துபோயின. இன்று இலங்கை சந்தித்துக் கொண்டிருக்கும் பொரு ளாதார திவால் நிலை இதிலிருந்து தான் துவங்கியது  என்பதை இயக்கவியல் ரீதியில் நாம் புரிந்துகொள்ள முடியும். 

இரண்டாவதாக, இந்திய பெருங்கடல்  நாடுகளில் மடகாஸ்கருக்கு அடுத்து இலங்கை மட்டுமே 2.16 (2022) கோடி மக்கட் தொகையை கொண்ட பெரிய நாடாகும். இலங்கைப்   பொருளாதாரத்தின் ஆதாரம் சுற்றுலா, தேயிலை, ரப்பர், மீன்பிடி, நெல் மற்றும் பிற விவசாய உற்பத்தி மட்டுமே. இலங்கையை போலவே வடக்கு கரீபியன் கடல், அட்லாண்டிக் பெருங்கடல் தீவு நாடான கியூபா, இலங்கையின் கிட்டத்தட்ட பாதி மக்கட்தொகை - அதாவது  1.13 கோடி  கொண்ட மிகச்சிறிய நாடாகும். இந்நாட்டின்  பெட்ரோலியம், நிக்கல், கோபால்ட், மருந்து உற்பத்தி, கட்டுமான பொருட்களான சிமெண்ட், ஸ்டீல்,  வேளாண் இயந்திர உற்பத்தி, சர்க்கரை உற்பத்தி,  இதர விவசாயம் போன்ற அடிப்படைத் தொழில்கள்  கியூப சோஷலிச  அரசின் வசம் இருந்தன. இதுபோன்ற  அடிப்படைக் கட்டுமான தொழில்துறையும் அரசியல் பொருளாதாரமும்  இலங்கையில் இல்லை. மருந்து  எரிபொருள் உணவு பொருட்கள் போன்ற முக்கிய  அடிப்படைத் தேவைகள் மற்றும் ராணுவ தளவாடங் களுக்கு கூட உள்நாட்டு உற்பத்திக்கு பதில் இறக்குமதி யையே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. மூன்றாவதாக,  இலங்கையின் பெரும்பான்மை யாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஐக்கிய தேசியக்  கட்சி (யுஎன்பி)  மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி  (எஸ்எல்எப்பி) இரண்டும் சிங்கள கலாச்சாரம் மற்றும்  இன தேசியவாதம் ஆகியவற்றின் மீது மட்டும் கவனம்  செலுத்தும்   தேசியவெறியைக் கொண்டிருந்தன. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, பெரும் பாலான காலங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடு களாக இருந்த ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லா வியா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய சோசலிஷ நாடு கள், சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் என கம்யூனிச  முகாம்களோடும் நெருக்கமாக இருந்தது. ஆனால்  உள்நாட்டில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ தேசிய வெறிப் போக்கை கொண்டிருந்தது. வெளிநாட்டுக் கொள்கை-  உள்நாட்டுக்  கொள்கைகளில்  இரண்டு தனித்தனியான சிந்தனைகளைப் பின்பற்றுவது போல தவறானதாகவோ அல்லது தீங்கு விளை விப்பதாகவோ வேறு எந்த யோசனையும் இருக்க முடியாது என்ற மாமேதை லெனின்  கூற்று இலங்கை அரசியல் பொருளாதாரத்தில்  எந்த அளவிற்கு  பாதிப்பை  ஏற்படுத்தியது என்பதற்கு  சான்றாக உள்ளது. 

இலங்கை அரசுகள், பழமைவாதத்தையும் குழப்ப மான மத்திய இடது மற்றும் மத்திய  வலதுசாரி- கம்யூ னிச எதிர்ப்பு அரசியலைக் கொண்டிருந்தன. இவை  பின்பற்றிய பொருளாதார, தாராளமயக் கொள்கைகள் காரணமாக அடிப்படையான  சுயசார்புள்ள சொந்த தொழில்துறை பொருளாதார வளர்ச்சியைப் பற்றியோ  அக்கறையின்றி இருந்தன. சிங்களப் பெரும்பான் மையை பயன்படுத்திக் கொண்டே சிறுபான்மை - தமி ழர்கள் மற்றும் முஸ்லீம்களின் உரிமைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டன.   இது  சமூக பதற்றத்தையம் மோதல்களையும் உருவாக்கி யது. இவைதான்  இன்றைய இலங்கையின்  பொருளா தார சீரழிவுகளுக்கான நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்ட அடிப்படைக்  காரணங்களாகும். 

நான்காவதாக, 2018 வரை இலங்கையின் பொருளா தாரத்தில் நிலையான வருவாய் பங்களிப்பாக சுற்றுலா  மட்டுமே இருந்தது. 255-க்கும் மேற்பட்ட மக்களை பலி கொண்ட - 21.4.2019 ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கை  தேவாலயங்கள், விடுதிகளில் நடைபெற்ற  வெடி குண்டு  தாக்குதல்களைத் தொடர்ந்து - வெளிநாட்டு  சுற்றுலா வருவாயில் கடுமையான  சரிவு ஏற்பட்டது. 2020இல் கொரோனா பெருந்தொற்றும் தீவின் பொரு ளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.   ஆனால் சர்வதேச கார்ப்பரேட் ஊடகங்கள்  மேலே  கூறப்பட்ட நான்காவது காரணத்தை மட்டும் அவை காலப்போக்கில் மீளத்தக்கது எனத் தெரிந்தும் முதன்மைப்படுத்துகின்றன.  முதல் மூன்று அடிப் படைக் காரணிகளை வசதியாக மறைத்து விடு கின்றன. இதே பத்திரிக்கைகள்  ஊடகங்கள் போகிற  போக்கில் மக்கள் சீனத்தின் கடன் வலையில் இலங்கை  சிக்கிக்கொண்டது என்றும்  கூறுகின்றன. 

சீனாவின் கடன் வலை என்ற  பிரச்சாரம் உண்மையா?

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 47  சதவீதம், ‘திருப்பிச் செலுத்தத்தக்க சர்வதேச கடன்  பத்திரங்கள்’ மூலம் மூலதனச் சந்தையில் பெற்ற தாகும். இலங்கையின் மொத்த கடனில்  சீனத்தின் பங்கு   10சதவீதம் ஆகவும் ஜப்பானின் பங்கு 10 சதவீதம்  ஆகவும்  உள்ளன. பிற கடன்கள் 9சதவீதம் ஆக உள்ளன. இந்தியா 2சதவீதம்  ஆக உள்ளது. உலக வங்கி  மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள்தான் இலங்கைக்கு மிக அதிகம் கடன் - அதாவது 22 சதவீதம் வழங்கி யுள்ளன. (Source  Deutsche Welle-Bonn Germany April 2021) 1966ஆம் ஆண்டு  துவக்கப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர்கள்  அனைவரும் துவக்கத்திலிருந்தே ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.  ஜி.7 நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதன்  ஆளுநர்களாக உள்ளனர். உலக  வங்கி, ஜி7 நாடுகளின் நிதிப் பாவையாக உள்ளது  என்பதில் சர்வதேச சந்தையில் புலமை உள்ள எவருக் கும் சந்தேகமிருக்க முடியாது. இந்நிலையில் சீனா வின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கியுள்ளது என்பது  நாய்த் தோலில் வடிகட்டிய பொய்யாகும். மாறாக  சீனா 10 பில்லியன் யுவான்  புதி்ய கடனல்லாத பரி மாற்றத்தை (Swap) வழங்குவதன் மூலம் இலங் கைக்கு நிவாரணம் வழங்கியது. இந்த நிதி பரி மாற்றம்  கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.  இது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில்  பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. (Source: Deutsche Welle-Bonn Germany July 2022 ) 

இலங்கையின் ‘வெரிடே ரிசர்ச்’ நிர்வாக இயக்குந ரும் ஆராய்ச்சித் தலைவருமான நிஷான் டி மெல்  கருத்துப்படி, சர்வதேச நிதி மற்றும் பத்திர சந்தைகளுக் கான கடன் விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக மாக உள்ளது. இதுதான் இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் கடன் பொறியாகும். சீனா அல்ல. இலங்கை யின் சோகத்தில்  சீனாவின் மீது பழிபோடுவது அப்பட்ட மான சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகும்.  இது துன்பப்படும் இலங்கை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல;  தீர்வை நோக்கிய கவனத்தை திசை திருப்பும் நாசவேலையை உள்ளடக்கியது என்பதை யும், சீனத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டி ருக்கும் ஜி.7  (அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா,  ஜெர்மனி,  ஜப்பான், இத்தாலி ஆகிய எழுவர் கூட்டணி)  நாடுகளுக்கு துணைபோகும்  என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கை போராட்டங்கள் ஒரு விடிவை நோக்கி செல்வதாக தெரிந்தாலும் இப்போராட்டங்களின் தலை மைப் பாத்திரம் எது என்பதும் அதன் வர்க்கப் பின்ன ணியைப் பற்றி இன்றளவும் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. சர்வதேச சோசலிச முகாம்  மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி  உட்பட  சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்கள்,  போராடும் இலங்கை மக்களுக்கு வழிகாட்டும் ஆதரவான இயக்கங்களை தத்தம் நாடுகளில் மேற்கொள்ள  வேண்டும். இது ஒன்றே வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு  ஒற்று மையுடன் போராடும் இலங்கை மக்களுக்கு நம்பிக்கை யளிக்கும். இடதுசாரி சிந்தனையின் பக்கம் அவர்களது  கவனத்தை ஈர்க்கும்.