பொய்ய சொல்லி ஓட்டு கேட்ட
பிஜேபி அண்ணாச்சி
இரண்டு கோடி இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பு என்ன ஆச்சு
(பொய்ய...)
15 லட்சம் ரூபாய் வங்கியில
சேர்ப்போமுன்னு
வீராப்பாக சொன்னீங்களே...
அந்த பணம் என்ன ஆச்சு
கருப்பு பணத்தை ஒழிப்போமுன்னு
வாய்கிழிய பேசுனீங்க
ஆயிரம் ஐநூறெல்லாம்
செல்லாதுன்னு சொன்னீங்களே
உண்மை பேச வார்த்தை இல்லையா
உருப்படாத சங்கிகளே
உதவாத திட்டங்களைய்
முன்மொழியும் காவிகளே
(பொய்ய...)
கட்ட வண்டி பயணம் போகும்
காலம் திரும்பி வருகுது – அண்ணே
கால்நடையா நடந்து செல்லும்
நாளும் கிட்ட நெருங்குது – அண்ணே
பெட்ரோல் டீசல் விலையை கேட்டால்
வயிறு பற்றி எரியுது – அண்ணே
வாய்க்கரிசி போடக்கூட
அரிசி விலையும் உயருது – அண்ணே
சங்கி மங்கி ஆட்சியில
மக்களெல்லாம் வறுமையில
கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கும்
காவி கூட்டம் கோட்டையிலே
– எம்.ரமேஷ்
தியாகி என்வி கலைக்குழு