articles

img

மனித வளக் குறியீட்டின் அடையாளம் தொழிலாளர்கள்!

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசியதாவது:- சிஐடியு நடத்தியுள்ள நடை பயணம்-பேரணி தமிழகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழி லாளர் விரோதச் சட்டங்களை அமல் படுத்தும் மோடி அரசிற்கு எதிராகவும் அவரது கொள்கையை அப்படியே கடைப்பிடிக்கும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் இந்த நடைபயணம் நடை பெற்றுள்ளது. எட்டு மணி நேர வேலை தொழிலா ளர்களின் வியர்வையால், ரத்தத்தால் கிடைக்கப்பெற்ற உரிமை. சட்டம் வகுத்த பின் தொழிலாளர்கள் வரவில்லை. தொழிலாளர்க ளுக்காகத்தான் சட்டங்கள் உரு வானது என்பதை உலகத் தொழி லாளி வர்க்கம் நிரூபித்து வருகிறது. தமிழகத்தில் எட்டு மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்ட  முன்வடிவை தொழிலாளர்கள் தின மான மே முதல்தேதி தமிழக முதல்வர் திரும்பப்பெற்றுள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஆறு  நிறுவனங்களுடன் ரூ.819.90 முத லீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் களை மேற்கொண்டுள்ளார். தமிழகத் திற்கு தொழில்கள் வர வேண்டும். வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இளைஞர்கள் பலனடைய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளில் இது  ஒன்று. அதே நேரத்தில் தொழிலா ளர்கள் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை, எட்டு மணி நேர வேலை என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். இவற்றை வெளிநாட்டு முத லீட்டாளர்கள் ஏற்பதை உறுதிப்படுத்த வேண்டும். மோடி அரசு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திருத்தம் செய் வதை தமிழக அரசு ஏற்கக் கூடாது. மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை தமிழகத்தில் அமல் படுத்தக் கூடாது. யமாஹா, ஹூண்டாய், பாக்ஸ் கான் போன்ற நிறுவனங்களில் சங்கம் அமைக்க வேண்டும் என்பதற்காக போராடிய ஒரே அமைப்பு சிஐடியு  தான். இன்றைக்கும் ஸ்விகி தொழிலா ளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களது கோ ரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சங்கம் அமைப்பது ஒரு தொழிலாளிக்கு வாழ்வு, கேடயம், ஆயுதம் போன்றது. இதில் எப்போதும் சிஐடியு சமரசம் செய்து கொள்ளாது

சென்னை-பெங்களூரு சாலையில் எந்த தொழிற்சங்கத்திற்கும் இட மில்லை; எந்தக் கொடியும் பறக்காது எனக் கூறிய ஆட்சியாளர்களும் இருந்த னர். அவர்களையும் மீறி இன்று அந்தச் சாலையில் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. தொழிலாளியின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என்பதை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறைகள் இல்லை என்றால் நாடு இல்லை. இந்தச் சொத்துக் களை மோடி விற்கிறார். விற்பதற்கு  இவர் யார்?.  இந்தியா வல்லரசாகி விட்ட தாக மோடி கூறுகிறார். வல்லரசு என்பது ஆயுதங்களால் வந்து விடாது. அது தேசத்தின் வளர்ச்சியால் வர வேண்டும்.  தமிழகத்தில் மனித வளக் குறி யீட்டின் அடையாளங்களாகத் திகழும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள்-உதவியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும்.

திமுக அரசு இன்றைக்கு மதவாத கொள்கைகளை எதிர்ப்பதில், மோடி அரசை வீழ்த்துவதில் உறுதியாக உள்ளது. நாமும் அதில் உறுதியாக உள்ளோம். மோடி அரசை இணைந்து வீழ்த்துவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

ஜி.சுகுமாறன்

மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில், “மக்க ளைத் திரட்டுவோம். போராடுவோம்” என்பதன் அடையாளம் தான் சிஐடியு நடத்திய நடைபயணம்.  கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைச்  சேவகம் செய்கிறார் மோடி. அவர்க ளுக்கு லாபம் தான் பிரதானம். ஒப்பந்தத் தொழிலாளர் முறை, தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை அமல் படுத்தி கார்ப்பரேட்டுகளின் கொத்தடி மைகளாக தொழிலாளர்கள் மாற்றப் படுகின்றனர்.  இதற்கெதிரான போராட்டத்தின் ஒரு வடிவம் தான் நடைபயணம். அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்கு மட்டுமல்ல. அங்கீகரிக்கப் படாத தொழில்களில் உள்ள தொழி லாளர்களுக்காகவும் போராடி வரு கிறோம் என்றார். அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா தொழிலாளர்கள், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
 

;