articles

img

புரட்சி எனும் தொழிலும் லெனின் வழிகாட்டுதலும் - பிரகாஷ் காரத்

மார்க்சிய சித்தாந்தத்தை கடைப் பிடித்து அதை அமல்படுத்து வதற்கு மிக முக்கியமான தேவையாக லெனின் கருதியது ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்க வேண்டும் என்பதுதான். ரஷ்யப் புரட்சி நடந்து கொண்டிருந்த தருணத்தில் லெனின் அவர்கள் தனது ‘புரட்சிகரக் கட்சி’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த கடுமையாகப் போராடினார். “ஜனநாயக மத்தியத்துவம்” அடிப்ப டையில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை அவர் உரு வாக்கியது தான் அவரின் சிறப்பான பங்களிப்பு எனலாம். ஒரு புரட்சிகரக் கொள்கைக்கு அடிப்படைத் தேவை, அமைப்புதான் என லெனின் கூறுகிறார். “என்ன செய்ய வேண்டும்?”என்ற தனதுநூலில் லெனின் அவர்கள், ஒரு புரட்சிகரக் கொள்கை இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடி யாது என அடித்துக் கூறுகிறார் .1902 இல் வெளியிட்ட தனது நூலில் அவர் பொருத்தமான- சரியான அமைப்பு ஒன்றின் மூலம் மட்டுமே புரட்சிகரக் கொள்கையை, புரட்சிகர இயக்கமாக மாற்றிக் காட்ட முடியும் என்று விவரிக்கிறார். லெனினின் கூற்றுப்படி அதிகாரத்தை அடைவதற்காக பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்தில் அதற்கு, அதன் அமைப்பு மட்டுமே  ஆயுதமாக இருக்க முடியுமே தவிர, வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லை என்கிறார்.

ஒரு புரட்சிகரமான கட்சிக்கு தேவையான அமைப்பு முறையை வளர்த்து உருவாக்குவதற்கான போராட்டத்தில், 1900-1906 காலகட்டத்தில் லெனின் அவர்கள் “ரஷ்ய சோசலிச ஜனநாயக தொழிலா ளர் கட்சி”க்குள் இருந்து கொண்டே ஈடுபட்டார். அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனியில் தோன்றி, பின் ஐரோப்பா முழுவதும், உழைக்கும் வர்க்கத்தின் ஒரே அரசியல் கட்சியாக” சோசலிச ஜனநாயக கட்சி” ஒரு உதாரணமாக இருந்தது. ரஷ்ய சோசலிச ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக், மென்ஷ்விக் என்று பிளவுபட்டது. அந்த பிள வுக்கான முக்கியமான காரணமாக இருந்தவை அந்த  கட்சிக்குள் இருந்த உறுப்பினர் மற்றும் அந்த அமைப்பின் குணாம்சங்கள்தான்!

வர்க்க உணர்வு

அமைப்பு பற்றி லெனினின் கருத்துக்களுக்கு போல்ஷ்விக் கட்சியின் அமைப்பில்  செயல்படுத்த வாய்ப்பு இருந்தது. பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்தி வாதிட்டவர்களுக்கு எதிராக ,ரஷ்யாவில் லெனின் அவர்கள் ,உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கு மத்தியில் போராட வேண்டியிருந்தது. கட்சியை கட்டுவதற்கு பொருளாதார கோரிக்கைகளுக் காக மட்டும் தொழிற்சங்க இயக்கம் நடத்துவதே போதுமானது என்று அவர்கள் கருதினார்கள். பொருளாதார கோரிக்கைகளுக்காக உழைக்கும் வர்க்கம் தன்னெழுச்சியாகவே போராடிக் கொள்ளும் என்பதை லெனின் எதிர்த்தார். பொரு ளாதாரத்திற்கான போராட்டம் அதாவது தொழிற் சங்கப் போராட்டம் என்பது உழைப்பாளிகள் சுரண்ட லுக்கும்,தங்களது மோசமான வேலை நிலைக்கும் எதிராக கிளர்ந்தெழுவதில் இருக்க வேண்டும் என கருதினார். இந்த உணர்வு ஒன்றுதான் தொழிற் சங்கம் தன்னிச்சையான போராட்ட உணர்வை வளர்ப்பதற்கு  அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார். எல்லா நாடுகளின் வரலாறுமே” உழைக்கும் வர்க்கத்தின் சொந்த முயற்சியின் காரண மாகவே தொழிற்சங்க உணர்வு வளர்கிறது என்பதை உணர்த்துகிறது” என்றார் லெனின். இந்த உணர்வு  ஒரு ஆரம்பக் கட்ட நிலை என்கிறார். “புரட்சிகரமான வர்களை உள்ளடக்கிய வலுவான அமைப்பு ஒன்று தலைமை ஏற்று வழிநடத்தாமல் நடைபெறும் இத்தகைய தன்னிச்சையான பாட்டாளி மக்களின் போராட்டங்கள் ஒரு நேரிய ‘வர்க்கப் போராட்டமாக’ மாறாது” என்பது லெனின் கருத்தாகும். அமைப்பு இல்லாத ஒன்றிலிருந்து உருவாகும் சோசலிச உணர்வு அல்லது வர்க்க உணர்வு என்பது “உள்ளீடற்ற ஒன்று” என்று லெனின் கூறு கிறார். “கம்யூனிஸ்ட் அறிக்கை” கூறுவதை லெனின் வலியுறுத்தி “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமே” என்கிற மார்க்சியத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகின்ற கட்சி என்பதே அதன் உள்ளடக்கமாகும்; அதுவே வர்க்க உணர்வை உழைப்பாளிகளிடம் ஏற்படுத்தும் என்கிறார்.

முன்னணிப் பங்கு

லெனினைப் பொறுத்தவரை, சோசலிச ஜனநாய கக் கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே யானது; அது எவ்வளவுதான் உணர்வும் ஈடுபாடும் இருந்தாலும் அது எல்லோருக்குமானது அல்ல! (அதாவது உழைப்பவர் மட்டுமே அதில் உறுப்பி னராக இருக்கலாம்) அதாவது கட்சியினை முன் நடத்தும் படையாக- “முன்னணி”யாக தொழிலாளி வர்க்கத்தின் “மேம்பட்ட -பற்றற்றவர்கள்” மட்டுமே விளங்க வேண்டும்! இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால் தொழிலாளி வர்க்கத்தில் போ ராட்டக் குணமும், வர்க்க உணர்வும் மிக்கவர்கள் மட்டுமே கட்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டு, அவர்கள் தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் பொதுவான வெகுஜன அமைப்புகளிலும் பணியாற்ற ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதுதான்! தொழில் திறனும் நேர்த்தியும் மிக்க புரட்சியாளர் கள் ஒரு அமைப்புக்கு தேவை என்கிறார் லெனின்.” புரட்சியாளர்களின் அமைப்பு என்பது புரட்சியை மட்டுமே தங்களது முதலும், முடிவுமான தொழிலா கக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்”! தொழில் திறன் மிக்க புரட்சியாளர்களை உள்ள டக்கிய முன்னணிப் படை.எந்த ஒரு அவசரச் சூழலுக்கும் எதிர்வினையாற்றுவதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் லெனின். 1905 இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, லெனின் ஆயிரக்கணக் கான போராட்ட குணமிக்க-வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களை கட்சிக்கு சேர்ப்பதற்கு வாய்ப்பாக் கியது. சோசலிச ஜனநாயக உணர்வு மிக்க உழைப்பாளிகளை புரட்சி உற்பத்தி செய்ததாக லெனின் அவதானித்தார். அதன் பிறகு உருவான போல்ஷ்விக் கட்சி அதனுடைய மையமாக தொழில் திறன்மிக்க புரட்சியாளர்களை அக்கட்சியின் பல்வேறு மட்டங்களிலும்,அவர்களுடன் முழு நேர ஊழியர்களாக இல்லாத தொழிலாளர் வர்க்க உறுப்பினர்களையும் கட்சியில் கொண்டிருந்தது. கட்சியில் முன்னணிப் படையை உருவாக்குவது என்பது, மேம்பட்ட, பற்றற்ற தொழிலாளர்கள் மூலம் கட்சியைக் கட்டுவது என்பதாகும். மிக முற்போக்கான கொள்கையால் வழி நடத்தப்படும் கட்சி ஒன்றினால் மட்டுமே இந்த “முன்னணிப் படைவீரர் “என்ற பாத்தி ரத்தை நிறைவேற்றமுடியும் என்று லெனின் தெளிவு படுத்துகிறார். 

(தொகுதி 5: பக்கம் 370... ஆங்கிலம்)

“கம்யூனிஸ்ட் அறிக்கை” கம்யூனிஸ்டுகளின் பங்கு- பாத்திரத்தை அருமையாக தெளிவு படுத்து கிறது. “உழைக்கும் வர்க்க இயக்கங்களின் போக்கை யும், நிலைமையையும், அவற்றின் உடனடி பலன் களையும் நன்கு உணர்ந்தவர்களாக இருக்கும் (மிகவும் முன்னேறிய உறுதிமிக்க பிரிவாக இருக்கக் கூடிய)  தொழிலாளர்களே, உழைக்கும் வர்க்க கட்சி களின் முன்னணி வீரர்களாக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் உழைப் பாளி வர்க்கத்தின் மீது ஈர்ப்பு செலுத்த முடிகிறது.” மார்க்சும், ஏங்கல்சும் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அறிக்கை”யில் முன்வைத்த கொள்கையை அமல்படுத்துவது என்பதே...லெனினின் ...முன்ன ணிப் படையை கட்சியில் உருவாக்குவதாகும். உழைக்கும் வர்க்க அரசியல் உணர்வை உள்வாங்கி யவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு ..முன்னணிப்படையாக... இயங்கிக் கொண்டே இருக்கின்ற வழிமுறையைப் பின்பற்றும். உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவு மட்டும் இன்றி, சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட அனைவரையும் இணைத்துக் கொண்டு  இது இயங்கும். இப்படிப்பட்ட முன்னணிப் படை தான், உழைக் கும் வர்க்கத்திலே பல்வேறு பிரிவுகளாக உள்ள  பலதரப்பட்ட உழைப்பாளர்களையும் ஒன்றிணைத்து அவர்களிடம் தொழிலாளர் வர்க்க உணர்வை ஊட்ட முடியும். அது மட்டுமல்ல மற்ற ஆதரவு வர்க்கங்கள் -பிரிவினர் அனைவரையுமே புரட்சிக்கு அணி திரட்ட முடியும். அதிலிருந்து முன்னணிப் படைக்கு புதிய வீரர்களை ஈர்க்க முடியும்.

மையப்படுத்துதல்

முன்னணி கட்சி என்பது மேலிருந்து கீழ் வரை மையப்படுத்தப்பட்டு ஒரே கட்சியாக, மையப்படுத் தப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். ஜார் மன்னனின் அடக்குமுறை ஆட்சியில் தலைமறைவாக கட்சியை நடத்த வேண்டியிருந்ததால் இப்படிப்பட்ட மையப் படுத்துதல் தேவைப்பட்டது என்றாலும் கூட மையப் படுத்தப்பட்ட தலைமை மூலமே, அரசியல்  கொள்கை ரீதியில் ஒன்றுபட்ட கட்சியை வழிநடத்த முடியும். அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுச் செயல்பட, மையப்படுத்தப்பட்ட தலைமை அவசியம். அரசியலாகவும் அமைப்பு ரீதியாகவும் வலுவான, மையமாக கட்சி செயல்பட பல உள்ளூர் கட்சி செய்தித்தாள்களுக்கு பதில் ரஷ்ய மொழியில் மட்டும் ஒரே செய்தித்தாளை வெளியிட லெனின் வலியுறுத்தினார். ஒரு செய்தித்தாள் என்பது கூட்டான செயல்பாடு-பிரச்சாரகர் என்பது மட்டு மின்றி கூட்டான அமைப்பை ஏற்படுத்துவதற்கும் அது உதவும் என்கிறார் லெனின். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மிக்க கட்சி என்பது, பலம் மிக்க முதலாளித்துவ அரசை, தனது வலுவான மைய கட்சி அமைப்பு மூலம் எதிர்கொள்வ தற்கு அவசியம் என்கிறார் லெனின்.

கட்சியின் உள்ளே ஜனநாயகம்

கட்சியின் எல்லா படிநிலைகளிலும் ஜனநாய கத்தை நடைமுறைப்படுத்துவது, கட்சியின் மையப்படுத்தும் கொள்கையுடன் இணைந்ததாகும். “என்ன செய்ய வேண்டும்?”என்ற நூலை  எழுதிய காலத்தில் ,நாடு முழுவதும் அடக்குமுறை  தலைவிரித்தாடியதால் கட்சியின் எல்லா கமிட்டிக ளுக்கும் உட்கட்சித் தேர்தல் நடத்த முடியாததால், மத்தியத்துவக் கொள்கை மேலோங்கியது. 1905 புரட்சிக்குப்பின் அரசியல் சுதந்திரம் இருந்த தால், கட்சியின் எல்லா மட்டங்களிலும் கமிட்டிகளை உருவாக்க தேர்தல் முறையை அமலாக்க லெனின் வலியுறுத்தினார். கட்சியின் கீழ்மட்ட கமிட்டி களுக்கு சுய அதிகாரம் கிடைக்கும் வகையில் மத்திய கமிட்டியின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டன. 1906இல் ரஷ்ய சோசலிச ஜனநாயக தொழி லாளர் கட்சியின் நான்காவது மாநாட்டில் “ஜனநாயக மத்தியத்துவம்” என்ற கொள்கை கட்சி விதிமுறை களில் சேர்க்கப்பட்டது. கட்சிக்குள் விரிவான விவாதம் நடத்தப்பட்டு ஜனநாயக முறைப்படி முடிவெடுத்த பின், பிறகு எடுக்கப்பட்ட முடிவை அனைவரும் ஒற்றுமையுடன் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் ஜனநாயக மத்தியத்துவம் (democratic centralisation) என்பதாகும். லெனினிய கட்சி அமைப்பு கொள்கை என்பது கொள்கை மற்றும் நடைமுறை பற்றிய தீவிரமான விவாதத்தை தவிர்ப்பதற்கு அல்ல; விரிவான, ஆழமான விவாதத்திற்கு பிறகு, அமைப்பு செயல் பாட்டில், தலைமையின் அரசியல் வழிகாட்டலை ஒற்றுமையுடன் அமல்படுத்துவதே ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம்

அமைப்பு பற்றிய லெனினிய கொள்கையின் தெளி வான முடிவே ஜனநாயக மத்தியத்துவம். மத்தியத்து வமும், ஜனநாயகமும் பின்னிப் பிணைந்ததுதான் ஜனநாயக மத்தியத்துவம். இதன் அடிப்படை யில்தான் புரட்சிகரக் கட்சி இயங்கும். ஜனநாயக மத்தியத்துவம் என்பது கட்சியின் அடிப்படை என்பதுடன் கூடவே, கம்யூனிஸ்ட் கட்சி யின் அடிப்படைப் பண்பும் இதுவாகும். சோசலிச ஜனநாயகக் கட்சிகள், முதலாளித்துவ அமைப்பில் இயங்க வேண்டி இருப்பதால் அவைகளுக்கு புரட்சிகர அமைப்பு தேவை இல்லை. எனவே ஜனநாயக மத்தியத்துவம் என்பது அவைகளுக்கு ஒவ்வாத விஷயமாகும். ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு அது முதலாளித்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு, ஆளும் ஆட்சி முறையை மாற்றி, அதற்கு பதில் சோசலிசத்தை அமைப்பதற்கு, அதற்கு புரட்சிகர அமைப்பு முறை தேவை. அதன் மூலமே அது அரசியல் -தத்துவார்த்த -அமைப்புரீதியான போராட்டத்தை, சக்தி மிக்க அரசுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நடத்த முடியும் .இப்ப டிப்பட்ட கட்சி, நாடாளுமன்ற ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிடவும் வேண்டி உள்ளது . இருக்கின்ற ஜனநாயக வாய்ப்புகளை ,அதை இருக்கும் அளவுக்கு பயன்படுத்திட வேண்டும். இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனை என்பது, கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தை அமைப்பு ரீதியாக ஒன்றிணைத்து, புரட்சி கர மக்கள் இயக்கத்தை நடத்திட, போதுமான வலுவு டன் இருக்கிறதா என்பதே கேள்வியாக உள்ளது. லெனின் பார்வையில் கட்சி என்பது மேற்கண்ட வாறு புரட்சிகர மக்கள் இயக்கத்தை கட்டமைத்து நடத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு உழைக்கும் வர்க்கத்தினரில், அரசியல் உணர்வுடன் உள்ளவர் களை- முற்போக்காக உள்ளவர்களை, கட்சிக்கு முன்னணிப் படையாக(Vanguard) சேர்த்திட (recruitment) வேண்டும்.

இப்படிப்பட்ட அமைப்பு என்பது வர்க்கப் போராட் டங்களாலும் (class struggle), வெகுஜன இயக் கங்கள் (mass movement) மூலமாகவும் உருக்கு போன்ற உறுதி மிக்கதாக ஆக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பு” சட்ட ரீதியாக- பாதி சட்ட ரீதியாக -சட்ட விரோதமாக “ என எல்லா நிலைமை களையும் எதிர்கொண்டு செயல்படுவதாக இருக்க வேண்டும். நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வர்க்க, அரசியல் போராட்டத்தில் நெருக்கடிகளை சந்தித்து எதிர்கொள்ளும்  வண்ணம் போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு செயல்படுவதாக இருக்க வேண்டும். இதற்கு மையப்படுத்தப்பட்ட (centralized) கட்சி தேவை. வர்க்கப் போராட்ட உணர்வுடன் செயல்படும் கட்சிக்கு “ஜனநாயக மத்தி யத்துவம்” அமைப்பு ரீதியாக பொருத்தமான வடிவமா கும். வர்க்கப் போராட்டம் என்பது ஒரு கூட்டுச் செயல் பாடு. ஜனநாயக மத்தியத்துவம் கூட்டு முடிவுக்கும் கூட்டுச் செயல்பாடுக்கும் வழி ஏற்படுத்துவது.

இது சுதந்திரமான சிந்தனைக்கும், செயல்பாட்டில் ஒற்று மைக்கும் வாய்ப்பு தருகிறது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல கம்யூ னிஸ்ட் கட்சிகள் புரட்சிக்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை யில் செயல்பட்டன. இதே நிலைதான் 21ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகள் நிலவியது. ஆனாலும் இவற்றில் பல கட்சிகள் இன்றும் தப்பி பிழைத்து செயல்பட ஒரே காரணம் ஜனநாயக மத்தியத்துவமே எனலாம். தத்துவார்த்த -அரசியல் பின்னடைவுகள் ஏற்பட்ட போதும் கட்சிகள் உயிர்ப்புடன் இருக்க காரணம் ஜனநாயக மத்தி யத்துவ முறை ஆகும். இதை கைவிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் அழிந்துவிட்டன அல்லது பிளவுபட்டு விட்டன. 1980 வரை சோசலிச நாடுகளைத் தாண்டி வெளியில் வலுவாக இருந்த இத்தாலிய கம்யூ னிஸ்ட் கட்சி அழிந்ததை இதற்கு உதாரணமாக பார்க்கலாம்.சோவியத் யூனியன் சிதைவுக்கு ஆரம்ப மாக அது முதலில் ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டது; இறுதியில் மார்க்சியத்தை கைவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு புரட்சிகளின் அனுபவங்கள் லெனின் அவர்களின் அமைப்பு பற்றிய கொள்கையையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் நமக்கு அறிவுறுத்துகின்றன. 1964இல் அமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அதனுடைய யுக்திகளை  உள்ள டக்கிய கட்சித் திட்டத்தை ஏற்றது. அத்துடன் ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில் கட்சி அமைப்பை மறுகட்டுமானம் செய்யும் சவாலையும் மேற்கொண்டது. ஒன்றுபட்ட கட்சியில் ஏற்பட்டிருந்த திருத்தல்வாதம் (revisionism) ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை அரித்து இருந்தது. இதை  சரிப்படுத்தும் பணி தொடர்கிறது. தற்போது இந்தியாவில் நிலவும் பிரத்யேகமான பிரச்சனை கள்- சூழ்நிலைகளில் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்சியை கட்டுவ தற்கு, தொடர்ந்து சமரசம் இன்றி நாம் போராட வேண்டும்.

தமிழில் : மன்னை இரா.இயேசுதாஸ்