1926 ஜூன் 6 சாரை சாரையாக படையெடுத்த ரசிகர்களால் கிறிஸ்ட்சர்ச் மைதானம் திக்கமுக்காடுகிறது. இந்திய அணி நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்க்கிறது. சோகத்தில் அந்த நாடே இருளில் மூழ்கிறது. மறுபக்கத்தில், நமது மூவர்ண கொடி பட்டொளி வீசியது. தேசிய கீதம் இசைக்கிறது. இதை நமது நாடே கொண்டாடுகிறது. காரணம், பிரிட்டிஷ் வீரர்கள் இல்லாமல் முழுக்க இந்திய வீரர்கள் பங்கேற்ற முதல் சர்வதேச ஹாக்கி போட்டி இதுவாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் (1928) நெதர்லாந்தில் ஒலிம்பிக் போட்டி. ஐரோப்பி யர்கள் அல்லாத இந்தியர்கள் மட்டுமே பங்கேற்கும் அணியை முதன் முறையாக களம் இறக்கினர். ஆஸ்திரியாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்த நமது வீரர்கள் 6 கோல்கள் அடித்து பட்டையை கிளப்பினர். பெல்ஜியத்திடம் 9, டென்மார்க் 5, சுவிட்சர்லாந்து 6 என வரிசை யாக புரட்டி எடுத்தார்கள். எதிரணி வீரர்களை நமது கோல் கம்பத்தை நெருங்க விடாமல் ஏணி படியில் ஏறிக் கொண்டே இருந்தனர். அந்த தொடரின் 11 ஆட்டங்களிலும் மெகா வெற்றியை வசப் படுத்தினர்.
கோப்பைக்கு முத்தம்...
தங்கப்பதக்கம் யாருக்கு? என்ற உச்சகட்ட பரபரப்பு நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரம் முழுவதும் தொற்றிக் கொண்டது. இறுதிப் போட்டிக்கு 85 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். நெதர்லாந்து ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளந்தும் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் பரிதாபமாக தோற்றனர். 3-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு வெற்றி வசமானது. முதல் உலக கோப்பையை வென்று கொடுத்தார் தயான் சந்த். இந்த தொடரின் 5 ஆட்டங்களில் 14 கோல்கள் அடித்து உலகின் தலை சிறந்த வீரர் என்ற பெருமை பெற்றார் தயான் சந்த். ஆனால், அவரது தலைமை யில் புறப்பட்ட இந்திய அணியை வழியனுப்ப வெறும் மூன்றே மூன்று பேர்தான் இருந்தார்கள். தங்கக் கோப்பையுடன் தாயகம் திரும்பி வந்த பொழுது பம்பாய் நகரே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பங்கேற்ற இந்திய அணி ஜப்பானை 11-1 என்று ஊதித் தள்ளி யது. அமெரிக்காவுக்கு எதிராக தயான் சந்த் அவ ரது இளைய சகோதரர் ரூப் சிங் இருவரும் கூட்டணி அமைத்து 18 கோல்கள் அடித்து கதற விட்டனர். மொத்தத்தில் 24 கோல்கள் அடித்து இமாலய சாதனையோடு மீண்டும் தங்கம் வென்று கொடுத்தனர். தயான் சந்த் பந்தை கையாண்ட விதத்தை பார்த்து பலரும் வியந்தனர். ஒரு சிலர், அவரது மட்டையில் காந்தம் ஏதேனும் உள்ளதா? என ஹாக்கி மட்டையை உடைத்தும் பரிசோதனை செய்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்தும், விடுவதாக இல்லை. ஒரு வயதான பெண்ணின் வாக்கிங் ஸ்டிக்கை கொடுத்து விளையாட சொன்னார். அவரது துணிச்சலான ஆட்டத்தை பார்த்து வியந்து போனார்கள். அப்போதும் சந்தேகம் தீரவில்லை. இங்கிலாந்து அரசி தனது குடையை கொடுத்து விளையாட சொன்னார். இதிலும் கோல் மழை பொழிந்து அனைவரது வாயையும் அடைத்தார். மூன்றாவது ஒலிம்பிக் போட்டிக்காக ஜெர்மனி யின் பெர்லின் நகரில் இறங்கிய பயணக் களைப்பு கூட போகவில்லை. அதற்குள்ளாக அந்த நாட்டு அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். முடிவு 4-1 என்ற கணக்கில் நமது அணி தோற்றது.
1939-இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி யது. ஆனால் ஹிட்லரின் நாஜி சர்வாதிகாரம் 1930-களில் தலை தூக்கியது. இதற்கிடையில், 1931 நடந்த வாக்கெடுப்பில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு ஜெர்மனிக்கு கிடைத்தது. 1933 ஜனவரி பிற்பகுதியில் நாஜிக்கள் ஆட்சி அதி காரத்தை கைப்பற்றினர். அவர்கள் தலைமையில் 1936 ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவக்க விழா அணிவகுப்பு. ஹிட்லர், பரி வாரங்கள் வருகை தந்தனர். மரபுப்படி வணக்கம் செய்ய வேண்டும். ஆனால், நாஜிக்களின் யூத இனவெறி, சர்வாதிகாரம், கொடுங்கோன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிட்லருடன் கைகுலுக்க, சல்யூட் அடிக்க சீன, அமெரிக்க வீரர்களுடன் இந்திய ஹாக்கி கேப்டன் தயான் சந்த் மறுத்தது விளையாட்டு உலகில் மட்டுமல்ல அரசியலிலும் புயல் வீசியது. இத்தகைய சூழலில் நடந்த தகுதிச் சுற்றில் ஜப்பானை 9-0, அமெரிக்காவை 7-0 என்று நொறுக்கி அரையிறுதியில் பிரான்சை 10-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்தியா. விளையாட்டு விமர்சனங்கள் உள்ளிட்ட பலரின் கணிப்பின் படி ஜெர்மனியும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் சந்தித்தன. அன்றைக்கு (ஆகஸ்ட் 15, 1936) பெர்லின் மைதானத்தில் இரு அணி வீரர்களும் நேருக்கு நேர் நின்றனர். நடு வரின் விசில் சத்தம் ரசிகர்களின் சத்தத்தை அடக்கியது. அந்த கம்பீரத்தோடு களம் புகுந்தது ஜெர்மனி அணி. நேரில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லர், மைதா னத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
தயான்சந்த் மீது தாக்குதல்
முதல் பாதியில் ஜெர்மனியின் தற்காப்பை இந்திய வீரர்களால் துளைக்க முடியவில்லை. அந்த நேரத்தில், ஜெர்மனி கோல்கீப்பர் தயான் சந்த் மீது மோதினார். அவரது மட்டை தயான் சந்த் முகத்தை பதம் பார்த்தது. அடுத்த வினாடியே மைதானத்தில் சரிந்து விட்டார். இந்த களேபரத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது ஜெர்மனி. ஜெர்மனி வீரர்களின் சதி திட்டம் நிறைவேறி யது. பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. அடி பட்ட பூனை அடங்கிவிடும் என்று நினைத்தார்கள். தனது ஷூவை கழற்றி எறிந்து வெறுங்காலோடு வலம் வந்தார் தயான் சந்த், நாங்கள் பூனை அல்ல, வேங்கை என்பதை நிரூபித்தார். பல்லாயி ரக்கணக்கான ரசிகர்களும் உற்சாகப்படுத்த, சக வீரர்கள் வீறு கொண்டு எழுந்தனர். வியர்வை வழிய மைதானத்தில் மாயாஜாலம் செய்து அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து ஜெர்மனி வீரர்களை கதிகலங்க வைத்தார். அதன் பிறகு இந்திய வீரர்களின் கோல் மழையை ஜெர் மானியால் தடுக்க முடியவில்லை. இறுதியில் 8-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பையை தக்க வைத்தது இந்திய அணி. தயான் சந்த்தின் வெறித்தனமான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி உறுதியானது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல் பாதியிலேயே வெளியேறிய ஹிட்லர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது,“தயான் சந்த் ஜெர்மனிக்கு வந்தால் குடியுரிமை, ராணுவத்தில் உயர் பதவியும் வழங்குகிறோம்” என்றார். ஆனால் அதே மேடையில் ஹிட்லரின் கோரிக்கை யை நிராகரித்து தலை வணங்காமல் நாட்டின் கவுரவத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவர் மேஜர் தயான் சந்த்.
அவருக்கு நிகர் அவரே!
பிரிட்டிஷ் இந்தியாவில் 1905 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் ராணுவ வீரர் குடும்பத்தில் பிறந்தவர் தயான் சந்த். பள்ளிப் படிப்பை முடித்ததும் தனது தந்தை யைப் போன்று 16 வயதில் ராணுவத்தில் சிப்பாய் பணியில் சேர்ந்தார் தயான் சிங். இதுதான் பெற்றோர் வைத்த பெயர். அவருக்கு மல்யுத்தம் என்றால் மிகவும் பிடிக்கும். பிறகு ஹாக்கி விளை யாட்டுக்கு மாறினார். பகல் நேரங்களில் பயிற்சிக்கு செல்ல முடியாத சூழலில், இரவில் நிலவு வெளிச்சத்தில் தான் எப்போதும் பயிற்சி செய்வாராம். அதற்குக் கார ணம் அன்றைய காலகட்டத்தில் மைதானங்களில் ஒளிரும் விளக்குகள் வசதி கிடையாது. அதனால், அவரது பெயர் தயான் ‘சந்த்’ (இந்தியில் சந்திரன் என்று பெயர்) என்று மாறியது. ரயில் தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்துக் கொண்டே சென்று பயிற்சி எடுத்த அவர், 185 சர்வதேச போட்டிகளில் 570 கோல்கள் அடித்திருக்கிறார். உள்ளூர் உட்பட மொத்தம் 1500 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தார். ஹாக்கி உலகின் மந்திரவாதியாக கருதப்பட்ட அவர், 34 வருட சேவைக்கு பிறகு, ராணுவத்தில் இருந்து 1956 ஆம் ஆண்டு பஞ்சாப் படைப்பிரி வின் லெப்டினன்ட் (செயல்திறன் கேப்டனாக ) ஓய்வு பெற்றார். தனது 74 வது வயதில் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி அவர் மரணம டைந்த போதும் அவரை யாரும் கண்டு கொள்ள வில்லை. அந்த காலத்தில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு இல்லை என்றாலும் அவரது, அசாத்தி யமான திறமையால் ஹாக்கி வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த அவரது பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டா டப்படுகிறது. அவரது சொந்த கிராமமான ஜான்சி மலை உச்சியில் வரலாற்று நினைவுச் சின்னமாக சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது பட்டு போன்ற குச்சி மட்டையை கொண்டு செய்த மாயாஜால வித்தைகள் ஒருபோதும் யாரா லும் மறக்க முடியாது.