articles

img

தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலம்!

தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 1991ஆம் ஆண்டில் தாராளமயமாக்குதல் கொள்கை அறி முகப்படுத்தப்பட்ட பின்னர் தனி யார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உரு வானபொழுது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் விரைவாக உருவாவதற்கு அடித்தள மாக அமைந்தது. தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்புரட்சிக்கு இத்தொழில் கொள்கை வழிவகுத்தது. தொழில் வளர்ச்சியினை மாநிலத்தில் துரித மாக்கியது, பெருந்தொழில் நிறுவனங்க ளிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. இப்பெருந்திட்டங்களைச் சார்ந்து உதிரி, பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகும் சூழ்நிலை உண்டானது. “உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும்” என்பது அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் நடைமுறை அனுபவங்கள் இதனை உறுதி செய்யவில்லை. போது மான வேலைவாய்ப்புகளை உருவாக்க வில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் ஆலை களில் வேலை வாய்ப்பு  மிகமிக சொற்பமாக உள்ளன.   தமிழ்நாடு அரசு 2024ம் ஆண்டு ஜனவரி 7, 8 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளது. அதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கான இலச்சினை வெளி யீட்டு மாநாட்டிற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். 

“உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப் படும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். நமது மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடையும் என்று மாநில அரசு கூறுகிறது. தொழில்துறை கூட்டமைப்பினர் அனைவரும் தமிழகத்தின்  பிராண்ட் அம்பாசிடர்களாக மாறி, முன்னணி நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயர்தர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழலை தமிழகம் கொண்டுள்ளது. பெருந்தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடம் தமிழகம்தான் ’’ என்று முதலமைச்சர்  கூறியுள்ளார்.

2023ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை மாநில அரசு நிர்ணயித்து அதற்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது. இதையொட்டி மாநிலத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையாக அமைச்சர் கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, முத லீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதற்காக ‘tngim2024.com’ என்ற இணையதளம் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கான இலச்ச னையை அண்மையில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வெளி யிட்டார். தாய்மொழியான தமிழை யும், அனைத்து வகையிலும் தழைத் தேங்கும் மாநிலம் தமிழகம் என்பதை குறிக்கும் ‘த’ என்ற தமிழ் வார்த்தையின் அடையாளமாக இலச்சினையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “ ஒரு அரசாங்கம் நல்ல பெயரைப் பெற்றி ருக்க வேண்டும், நல்ல சட்டம் ஒழுங்கு நிலைமையுடன் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் முதலீட்டாளர்கள் ஒரு மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருவார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில், 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்களுடன் 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 282 புதிய வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது” என்றார்.

எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

அந்நிய முதலீடுகளை ஈர்ப்ப தற்காக ஆட்சியாளர்கள் பெரு நிறு வனங்களுக்கு அதீதமான சலுகை களை வழங்குகின்றனர். குறைந்த விலையில் நிலம், சலுகை கட்ட ணத்தில் மின் கட்டணம்; குடிநீர், வரி விடுமுறை, அடிப்படை வசதி கள் தடைபட்டு உற்பத்தி பாதிக்கப் பட்டால் மாநில அரசே இழப்பீடு வழங்குதல், தொழிற்சங்க சட்டங்க ளில் இருந்து மறைமுக விலக்கு, தொழிலாளர்களுக்கு விரோதமாக  முத லாளிகளுக்கு சாதகமாக செயல்படுதல் என கற்பனைக்கெட்டாத சலுகைகளை அரசு வழங்குகிறது. இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் நிறு வனங்கள் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் வாயிலாக அரசு பெரும் நிறுவனங்களுக்கு என்னென்ன சலு கைகள் வழங்குகிறது, பெருநிறுவ னங்கள் உருவான வேலை வாய்ப்புகள் எவ்வளவு, இந்த நிறு வனங்களால் மாநிலம் அடைந்த நிதி உள்ளிட்ட பயன்கள் என்ன போன்ற அம்சங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சி களும் பல்லாண்டுகாலமாக கோரி வருகின்றன. பன்னாட்டு பெருநிறுவனங்கள் அரசு வழங்கும் அதீதமான சலுகை களை பெற்றுக் கொண்டு, இந்திய தொழிலாளர் சட்டங்களை மதிக்கா மல் செயல்படுகின்றன.  குறைந்தபட்ச கூலி சட்டத்தை கூட முறையாக அமல்படுத்த மறுக்கின்றன. வரிச்சலுகை இருந்தும், பொய்கணக்கு எழுதி அரசை ஏமாற்றுகின்றன. உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சி கொள்ளை லாபம் பார்க்கின்றன. அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாக நட்டகணக்கு காட்டி நிறு வனத்தை மூடுகின்றன அல்லது ஒன்றுக்கும் உதவாத காரணங்களை கூறி வேறுமாநிலங்களுக்கு சென்று விடுகின்றன. இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் சலு கையில் ஒரு பகுதியை அளித்தால் கூட சிறுகுறு தொழில்கள் அதீத வளர்ச்சி பெறும்.

கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும், சிறுகுறு நடுத்தர தொழில்களை அழைப்பதாக நவீன உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கை உள்ளது. ஒன்றிய அரசும், உள்நாட்டு தொழில்களின் முது கெலும்பை முறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, அதனையே மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன. குறிப்பாக, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி முறை, வங்கி களில் கடன் கிடைக்காமை, மின்கட்ட ணம், மூலப்பொருட்களின் கட்டுக்கடாங்காத விலை உயர்வு போன்றவற்றால் சிறுமுதலீட்டாளர்கள் நொடிந்துகிடக்கின்றன. சிறு,குறு நடுத்தர தொழில்கள் வளரும்போது, நீடித்த, நிலையான, பரவலான பொருளாதார வளர்ச்சி நிலவுகிறது, பூவியியல் ரீதியாக உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்படுகிறது. அரசு சட்டங்கள் அமலாக்கப்பட அரசால் நிர்பந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. உழைப்புச் சுரண்டலை ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது. தொழிலாளர் நலன்க ளும் பாதுகாக்கப்படுகிறது. பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை சிறுகுறு நிறுவனங்க ளும் வழங்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் கோரிக்கை யாக உள்ளது.

சிறுகுறு நிறுவனங்களை பாதுகாக்க

மாநிலத்தின் தொழில் வளத்தை பெருக்க தொழிற்தடச்சாலை திட்டம், விரைவு சாலை திட்டம், அதிவிரைவு சாலை திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவை வரவேற்கத்தக்கதுதான். அந்த திட்டங்களை மக்களும், விவ சாயிகளும் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும். அதே சமயம்  கடுமையான தொழில் நெருக்கடி களைச் சந்தித்து வரும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை  பாதுகாத்திட அரசு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். சிறு,குறு, நடுத்தர நிறு வனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன், ஊக்குவிப்பு திட்டங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை செய்யும்போதுதான், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற நிலையை நோக்கி விரைந்து செல்ல முடியும்.