articles

பின்னலாடைத் தொழில் வளர்ச்சி பெற விலைவாசி சீராக இருப்பது அவசியம்

சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் பேட்டி

ஒட்டுமொத்தமாக சொல்வதென்றால், அனைவருக்குமே மிகவும் அடிப்படையான தேவை உணவும், உடையும் தான். எனவே இந்த அடிப்படை மூலப்பொருட்களின் விலைவாசி சீராக இருக்க வேண்டும்.

பனியன் தொழிலுக்கு மூலப் பொருளாக இருக்கும் பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை சீராக இருந்தால்தான் தொழில் ஆரோக்கியமாக நடைபெறும். பருத்தி விளைவிக்கும் விவ சாயிகளுக்கு அவர்கள் கேட்கக்கூடிய நியா யமான விலையை கொடுத்து பருத்தி கொள் முதல் செய்ய வேண்டும். அதிலிருந்து நியா யமான விலையில் தொழில்துறையினருக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு சீரான, நிலை யான விலையில் பருத்தி நூல் தொழில்துறை யினருக்கு கிடைக்கும். பின்னலாடை தொழிலும் சீராக நடைபெறும். நான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, தொழில் செய்வோர், தொழிலாளர்கள், விவ சாயிகள் என அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு விலைவாசி சீராக இருப்பது மிகவும் அவசியமாகும். அண்டை நாடான சீனாவில் விலைவாசி சீராக இருக் கிறது. அதுபோல் இங்கும் இருந்தால் தொழி லும், மக்களும் நன்றாக இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் பனியன் தொழிலை பொறுத்த வரை நூல் விலை  ஏற்ற இறக்கமாக இருப்பதால், தொழில்துறை யினர் நூல் கொள்முதல் செய்வதற்கு பயந்து கொண்டு இருக்கும் நிலை உள்ளது. நூல் விலை குறையும் என்று எதிர்பார்ப்பில் இருக் கும் பொழுது திடீரென உயர்கிறது. பின்பு விலை அடுத்தடுத்து குறைகிறது, மேலும் குறையும் என்று எதிர்பார்த்தால் மீண்டும் உயர்கிறது. இந்த நிச்சயமற்ற தான்மைதான் தொழில்துறையினர் அச்சப்படும் நிலையை ஏற்படுத்துகிறது. மாதத்திற்கு நான்கு முறை விலை மாறிக்கொண்டே இருந்தால் எப்படி தொழில் செய்வது? எனது 65 ஆண்டு கால பனியன் தொழில் அனுபவத்தில் பார்க்கும் பொழுது, ஆரம்ப காலத்தில் சிரமப்பட்டு வலுவாக அடித்தளம் அமைத்திருக்கிறோம். ஆனால் இப்போதைய சூழ்நிலை மிகவும் சிக்கலாக இருக்கிறது. வங்கிகளில் வட்டி விகிதத்தை அதிகப்ப டுத்தி விட்டார்கள். மூலப் பொருள் விலைவாசி உயர்வுடன் அதுவும் சேர்ந்து கொண்டு சிர மத்தை அதிகரிக்கிறது. வங்கி வைப்பு நிதிக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி தருவது போல, வங்கி கொடுக்கக் கூடிய கடனுக்கும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிர்ண யிக்கப்பட்ட வட்டி விகிதம் இருக்க வேண் டும். உள்நாட்டு சந்தையை பொறுத்த வரை, வங்கதேசத்துடன் கடந்த 2010 ஆம் ஆண்டு வாக்கில் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனால் விலை குறை வான ஆடைகள் அங்கிருந்து இங்கு விற்ப னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்திய ஆடை நிறுவனங்களே கூட வங்கதேசத்தில் கொள்முதல் செய்து இங்கே விற்பனை செய் கின்றனர். அங்கிருந்து துணியாகவும், ஆயத்த ஆடையாகவும் இங்கு வருகிறது. திருப்பூர் மட் டுமன்றி கொல்கத்தா, அகமதாபாத், லூதி யானா என்று எல்லா பகுதிகளுக்கும் கொண்டு வரப்படுகிறது. இங்கு நாம் முழுமையான மறுசுழற்சி தொழில்நுட்பத்தின் மூலம் சாயம் ஏற்றும் தொழிலை செய்கிறோம். வங்கதேசத்தில் அப் படி இல்லை. இதனால் உற்பத்தி செலவு குறை வதுடன் ஆடை விலையும் 15 முதல் 20 சதவீதம் குறைவாக இங்கு கொண்டு வந்து விற்கப்படு கிறது.

இதனால் குறிப்பாக நிட்டிங் தொழி லுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப் பிரச்சனையில் கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய அரசின் கவ னத்திற்கும் நாங்கள் தெரியப்படுத்தி இருக் கிறோம். ஜிஎஸ்டி வரி பிரச்சனையை பொருத்த வரை, அதன் நடைமுறைகளை, உடனே அம லாக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. அதேபோல் ஜாப் ஒர்க் நிறு வனங்களையும் வரி கட்ட வேண்டும் என்று சொல்லுவது சரியல்ல. விவசாயத் தோட்ட பகுதிகளில் கணவன், மனைவி, குடும்பத்தார் என சில தையல் இயந்திரங்களை வைத்து பனியன் கம்பெனிகளில் துணிகளை வெட்டி வாங்கி சென்று கூலிக்கு தைத்து தருகின்ற னர். இதன் மூலம் அந்த குடும்பம் வேலை  வாய்ப்பு, வருமானம் பெறுகிறது. அவர்களிடம் ஜிஎஸ்டி வரி கட்டச் சொல்லக் கூடாது. திருப்பூர் தொழிலின் எதிர்காலத்தை பொருத்தவரை, ஆடை என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்பதால் இதற்கு அழிவு இருக்காது. அதேசமயம் இந்த தொழிலுக்கு என்ன தேவை, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று அரசு கொஞ்சம் கவனிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும். இத்தகைய ஒத்துழைப்பு இருந்தால் திருப் பூர் பின்னலாடைத் தொழில் எந்த சிரமத்தை யும் சந்தித்து முன்னேறும் என நாங்கள் உறுதி யாக நம்புகிறோம்.

;