articles

img

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

புதுதில்லி,  ஆக. 13- சிறு, குறு நடுத்தர  நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிவரை நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நட ராஜன், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தேவையான வளர்ச்சிக்காக, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டை வழங்கு வதற்காக அரசு ஏதேனும் நடவடிக்கை களை எடுத்திருக்கிறதா என்றும், ஆம்  எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி யில், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கான முதலீடு பற்றி 10-08-2023 அன்று, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரிடம், மக்களவையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்ட கேள்விகளும் அதற்கு ஒன்றிய சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பானு  பிரதாப் சிங் வர்மா கூறியதாவது:

பொது பொறியியல் (General Engineering), உலோக வடிவமைத்தல் & பவுண்டரி (Forging & Foundry), மின்னணு, மின்சாரம், வாசனை மற்றும் சுவை, கண்ணாடி, காலணி மற்றும் விளையாட்டு சாதனங்கள் ஆகிய துறைகளில், வடிவமைப்பு, கருவிகள் உற்பத்தி, துல்லிய மான கூறுகள், மோல்டுகள், டைகள் போன்றவை மூலம், தொழில்நுட்ப ஆதரவை வழங்கக்கூடிய தொழில்நுட்ப மையங்களை சிறு குறு நடுத்தர நிறு வனங்களின் அமைச்சகம் நிறுவியுள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை யில், நவீன தொழில் நுட்பங்களை ஏற்பதற்கான முதலீட்டை வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களுக்கிடையில் நிதி ஆதரவும் உள்ளடங்கும். சிறு குறு நடுத்தர நிறு வனங்களின் சேம்பியன் திட்டம், கடன் உத்தர வாத நிதி நம்பிக்கை திட்டம், பிரதம மந்திரி யின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம், சிறு,குறு நடுத்தர நிறுவனங்களின் கிளஸ்டர்  மேம்பாட்டுத்திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் சில. வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியி யல் இயக்குனரகத்தின் தகவலின் படி, 2022-23ஆம் ஆண்டில் அனைத்திந்திய ஏற்றுமதியில், சிறு குறு நடுத்தர நிறுவனங் களின் ஏற்றுமதி பங்கு 43.6 விழுக்காடாக இரு ந்தது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.