கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட சித்தூர் அருகே, வால்முட்டி காலனி என்ற கிராமத்தை ‘பாட்டுக் கிராமம்’ என சமீபத்தில் சித்தூர் – தத்தமங்கலம் நகராட்சி அறிவித்திருந்தது. ‘பாட்டுக் கிராமம்’ என்று ஒரு கிராமத்தை அறிவித்து, அங்குள்ள இசைக்கலைஞர்களை பெருமைப்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவே முதல்முறை. அந்த ஊரில் பல தலைமுறைகளாக எல்லோருமே இசைக்கலைஞர்களாக உள்ளனர். ஓணம், கேரள உத்சவம் பண்டிகைகளுக்கு பல ஊர்களுக்குச்சென்று, துடி மற்றும் செண்டை மேளம் இசைத்து சிவன், கிருஷ்ணன் குறித்தான ‘துயிலுணர்த்த’ பாட்டுக்களை பாடி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தான் கிராம மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். தங்கள் முன்னோர்களை பார்த்து தங்களுக்கும் ஆர்வம் வந்ததால், கிராமத்தில் இருக்கும் எல்லோரும் பாட்டுப்பாடி, இசைக்கருவிகள் இசைத்து பழகி வருகின்றனர். அந்த கிராமத்தில் நுழைந்தால், திரும்பும் திசை எல்லாம், ஏதாவது ஒரு வகையான இசை, பாடல் பயிற்சி, இசைக் கருவிகள் வாசிப்பு கேட்டுக் கொண்டிருப்பதை பிபிசி குழு காட்சிப்படுத்தியுள்ளது.
சிறு துளிகளின் சக்தி...
ராமுவும் சோமுவும் நண்பர்கள். இரு வரும் ஆம்பூர் அரசு பள்ளியில் ஒன் னாம் வகுப்பு படித்து வருகிறார்கள். ராமுவின் பக்கத்து வீட்டில் இருக்கும் கமலும் அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கமல் எப்போது ராமுவை பள்ளியில் பார்த்தா லும் கூப்பிட்டு தொப்புகரணம் போட சொல்வான். சோமுவுடன் இருக்கும் போது அழைக்க மாட்டான். ராமுவிற்கு சோமுவிடம் சொல்ல தயக்க மாக இருந்தது. ஒரு நாள் கமல் ராமுவை தொப்பு கரணம் போட சொல்லி தனது நண்பன் அழதுக் கொண்டே இருப்பதை பார்த்தான், சோமு. உடனே சோமு ஒடி போய் ,” கமல் அண்ணா எதற்காக இப்படி ராமுவை தொப்புகரணம் போடச் சொல்லிறங்க? என கேட்டதற்கு. “நீ போடா” என மிரட்டி அனுப்பி விட்டான். ஆனால் சோமு போகவில்லை. அழதுக் கொண்டு இருக்கும் ராமுவை பார்த்து சோமு, இங்க பாருடா... அழாதே என ஆறுதல் சொன்னான். அந்த பக்கம் ஆசிரியர் வர கமல் சென்று விட்டான். சோமு ராமுவிடம், “நான் எங்க பாட்டி சொன்ன ஒரு கதை சொல்கிறேன் கேள் என ஒரு குட்டி கதை சொல்ல ஆரம்பித்தான்” ஒரு ஊரில் ஒரு குளம் இருந்ததாம். அதில் ஒரு பெரிய மீன் சுற்றி திரிந்து வாழ்ந்துக் கொண்டு இருந்ததாம். ஒரு நாள் அதே குளத்தில் அக்கரையில் இருக்கும் ஒரு சிறிய மீன் வழி தவறி பெரிய மீன் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டதாம் அப்புறம்...என ராமு கண்களை துடைத்தக் கொண்டு கதையை ஆவலாக கேட்க ஆரம்பித்தான். பெரிய மீன் சிறிய மீனை பார்த்து விட்டது சிறிய மீன் ஓடுகிறது. தப்பிக்க முடியவில்லை. சிறிய மீன் பெரிய மீனிடம் சொல்கிறது, “ஒரு நிமிடம் நான் சொல்வதை கேள்” என்றதாம். பெரிய மீன்..சிரித்துக் கொண்டே எப்படியும் நீ எனக்கு இரையாக போகிறாய். உன் கடைசி ஆசை என்னவென்று சொல் கேட்கலாம் என்றதாம் சிறிய மீன் படபடப்புடன் “நீயோ பெரிய மீன். நானோ சிறிய மீன்”. என்னை சாப்பிட்டால் உன் பசி அடங்க போவதில்லை ஆகவே என்னை விட்டு விடு என்றதாம் அதற்கு பெரிய மீன், “சரி அப்போது நீ என்னை சாப்பிடு என்ற தாம்”. சிறுமீன் எப்படி அந்த பெரிய மீனை சாப்பிட முடியும்.
சிறுமீன் யோசித்ததாம். சரி நான் உன்னை சாப்பிட வேண்டும் என்றால் எனக்காக நீ மற்றொரு உதவி செய்ய வேண்டும் என்றதாம். ஆணவத்தோடு பெரிய மீன் சொல் என்றதாம். நான் சொல்லும் இடத்திற்கு வந்தால் உன்னை சாப்பிடுகிறேன் என்றதாம் சிறிய மீன் பெரிய மீனுக்கு ஆணவம். இவ்வளவு சிறிய மீன் எப்படி நம்மை சாப்பிடும் என நினைத்து. சரி வா போகலாம் என்றதாம். சிறுமீன் பெரிய மீனை அக்கரை க்கு தங்க ளது இருப்பிடத்திற்கு அழைத்து சென்றதாம். தண்ணீரே தெரியாத வண்ணம் லட்ச கணக்கில் சிறுமீன் கூட்டம். பெரிய மீன் ஒரு கணம் சிந்திப்பதற்குள் சிறுமீன் ஒன்று சேர்ந்து பெரிய மீனை சாப்பிட்டு விட்டதாம்... என்று சோமு கதை சொல்ல சொல்ல ராமு விற்கு மகிழ்ச்சியாகி விட்டது. ராமுவிற்கு நாளை கமலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற திட்டம் புரிந்தது. முகத்தில் புன்னகையோடு நண்பனை கட்டி அணைத்துக் கொண்டு “Don’t underestimate the power of common people” என்று சொன்னவுடன், இருவரும் வாய்விட்டு சிரித்து மகிழ்ச்சியாக வீட்டுக்கு கிளம்பினார்கள்.