தேநீர்
நண்பர்கள் சந்திப்பின் பாலம்..!
தேநீர்
உறவுகள் கூட்டத்தின் சாளரம்..!
தேநீர்
வாசிப்பு நேசத்தின் பூபாளம்..!
தேநீர்
தேசத்தின் நேயர் விருப்பம்...!
தேநீர்
வழிப்பயண நிறுத்தங்களின் தோழன்...!
தேநீர்
நெடுந்தூரப் பயணத்தின் தேடல்..!
தேநீர்
காலனி ஆதிக்கத்தின் கஜானா..!
தேநீர்
வைகறை பொழுதின் குறியீடு..!
தேநீர்
ஆண்களின் பகல் நேர சாப்பாடு...!
தேநீர்
அந்தி வேளையின் நிறுத்தற்குறி...!
தேநீர்
பன்னாட்டு வணிகத்தின் நீர்ம தங்கம்..!
தேநீர்
எந்திர வாழ்வின் கடிகார முள்..!
தேநீர்
நீண்ட உழைப்பின் இளைப்பாறல்...!
தேநீர்
தோட்ட தொழிலாளர்களின் பச்சை ரத்தம்...!
அப்துல் சத்தார்
மே21 சர்வதேச தேநீர் தினம்