articles

img

ரயில் விபத்திலும் மத கலவரத்தை தூண்டும் இந்துத்வா கும்பல்

ரயில் விபத்திலும் மத கலவரத்தை தூண்டும் இந்துத்வா கும்பல்

ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்  கும் முன் அதை வைத்து ஒரு கும்பல்  மத கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் இந்துத்வா கும்பல் இறங்கி உள்ளன. அதன்  படி தி ரேண்டம் இந்தியன் (The Random Indian) என்ற டுவிட்டர் கணக்கில்,”இந்த ரயில் விபத்து வெள்ளிக்கிழமை நடந்து உள் ளது. அருகிலேயே பாருங்கள், மசூதி  உள்ளது” என்று போஸ்ட் செய்யப்பட்டுள் ளது. மேலும் பல்வேறு இந்துத்துவ கும்பல்  கள் ஒடிசா விபத்தை வைத்து எப்படியா வது  இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த முடியாதா, கலவரத்தை உருவாக்க முடி யாதா என்று ஆதாயம் தேட முயன்று வரு கின்றனர். இந்நிலையில் போலிச்செய்திகளை கண்டறியும் ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் முக மது ஜூபைர், “விபத்து நடந்த இடத்தில் இருப்பது மசூதி கிடையாது. அது ஜெயின்  கோவில். வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று அந்த புகைப்  படத்தை வெட்டி இப்படி பரப்பி வருகின்ற னர். அது ஒரு இஸ்கான் கோவில்” என்று  ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ளார். இதேபோல் ரயில்வே சிக்னலை தவறாக  கொடுத்தது ஷாரிப் என்ற இஸ்லாமிய இளை ஞர் என்றும் கூட பொய்யான தகவல்களை சில வன்முறை விரும்பிகள் இணையத்தில் பொய்யாக பரப்பி வருகின்றனர்.

உடல்களை  எண்ணுவதிலும் அலட்சியம்

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 88 உடல்கள் மட் டுமே அடையாளம் காணப்படடுள்ளன. 288 பேர்  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு பல உடல்  கள் இரண்டு முறை எண்ணப்பட்டதே காரணம் ஆகும். காயமடைந்த 1,175 பேரில், 793 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் என ஒடிசா  தலைமை செயலர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வ மாக அறிவித்தார்.

167 உடல்கள்

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உரிமை கோரப்படாமல் பிணவறைகளில் உள்ள 167 உடல்களின் புகைப்படங்களை வெளி யிட்டது ஒடிசா அரசு. அடையாளம் காண மற்றும் தகவல் பெற http://ser.indianrailways.gov.in  என்ற இணையதள திட்டத்தை இந்திய ரயில்வே  செயல்படுத்தியுள்ளது.

8 தமிழர்களை காணவில்லை

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நார கணிகோபி (ஆண் வயது – 34), கார்த்திக் (ஆண்  வயது -19), ரகுநாத் (ஆண் வயது – 21), மீனா  (பெண் வயது – 66), ஜெகதீசன் (ஆண் வயது – 47),  கமல் (ஆண் வயது – 26), கல்பனா (பெண் வயது –  19), அருண் (ஆண் வயது -21) ஆகிய 8 பேரை  தொடர்புகொள்ள முடியவில்லை. பட்டியலில் உள்ளவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையை அணுகவும் என்று கூறி  தமிழ்நாடு அரசு அவசர எண்களை அறிவித்துள்  ளது. தொடர்புக்கு : மாநில அவசரகால செயல் பாட்டு மைய உதவி எண்கள் கட்டணமில்லா தொலைபேசி – 1070 செல்பேசி – 9445869843 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்ற நீதிபதி, ரயில்வே நிபு ணர்கள் அடங்கிய குழு ஒடிசா ரயில்  விபத்து தொடர்பாக ஆய்வு செய்யக் கோரி  வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரயில் பயணங் களை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் உரிய ஆலோசனை வழங்கி ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்  டுள்ளனர்.

இயல்புநிலைக்கு திரும்பும் பஹானாகா ரயில் நிலையம்

விபத்துக்குள்ளான ரயில்களின் பெட்டி கள், கிரேன் மற்றும் ராட்சத இழுவை தூக்கியின் உதவியுடன் அகற்றப்பட்ட நிலையில், விபத்து நடந்த பகுதி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தண்டவாளம் சீர மைத்த பின் 2 ரயில் பாதைகளில், அடுத்த 2 நாட்க ளில் மெதுவாக ரயில் இயக்கப்படும் என ரயில்வே  வாரியத் தலைவர் ஜெயம் வர்மா தகவல் தெரி வித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஏராள மான ரயில்கள் ரத்தானதால் கொல்கத்தா வுக்கு கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். ஒடிசா வில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களி லிருந்து பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை  சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந் தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறி வித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிசா ரயில் விபத்தின் பெரும் சோகத்தை  வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை.லால் பகதூர் சாஸ்திரி, மாதவ ராவ் சிந்தியா, நிதிஷ் குமார் ஆகியோர் தார்மீக  அடிப்படையில் பதவி விலகினர். அதே போல இந்த விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என  காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார். 

ராஜினாமா செய்ய முடியாது: ரயில்வே அமைச்சர்

‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்’ மாற்றத்தா லேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது  என்று கூறிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,”ரயில் விபத்துக்கு பொறுபேற்று ராஜினாமா செய்ய முடியாது. இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல.  மீட்பு, மறு சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய  தருணம் இது. அனைத்திலும் வெளிப்படைத் தன்மை என்பது தேவை. நாங்கள் அதனையே கடைபிடிக்கிறோம். ராட்சத கிரேன் மூலம் ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளங்களை சீர மைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்துக்கான காரணமும்,   காரணமானவர்களையும் கண்டறிந்  துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத் தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது”எனக் கூறி யுள்ளார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்: ஆந்திர அரசு

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி யுதவியினை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம்  அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசின் உத வித்தொகையுடன் கூடுதலாக இழப்பீடு வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்த ரவு பிறப்பித்துள்ளார். 

சரக்கு ரயிலில் இருந்த இரும்புத் தாதுவால்தான் உயிரிழப்பு அதிகம்

சரக்கு ரயில் தடம் புரளவில்லை என்றா லும், சரக்கு ரயிலில் இருந்த இரும்புத் தாது (அதிக எடை கொண்டது), மோதிய வேகத் தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து பலமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரும்பு  தாதுக்கள் விழுந்ததில்தான் பெரும்பாலானோர் உயிரிழந்ததாக ரயில்வே மேம்பாட்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா கூறியுள்ளார்.

‘கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஓட்டுநர் விதிமீறவில்லை’

கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஓட்டுநர் எந்த  சிக்னலையும் தாண்டவில்லை. அவர் அதிவேக மாக ஓட்டவில்லை. ‘கிரீன் சிக்னல்’ கிடைத்த பின்னரே ரயில் முன்னோக்கி நகர்ந்தது, இது ரயில்  பதிவுகளாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோர மண்டல் எக்ஸ்பிரஸின் ஓட்டுநர் சாரதிக்கும் பலத்த  காயம் ஏற்பட்டுள்ளதாக  ரயில்வே மேம்பாட்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தகவல் தெரி வித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாத வருமானம் வழங்க கோரிக்கை

“ரயில் விபத்து தொடர்பாக டுவீட் செய்கி றோம், வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம், குறிப்பிட்ட பணம் அளிக்கிறோம். அதன்பிறகு அவ்வளவுதான். பணம் அளித்தாலும் பல குடும் பங்கள் மறைந்துவிட்டன. இதனால் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்  பங்களுக்கு நிலையான மாத வருமானம் வழங்கு மாறு” ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளார் நடிகர் சோனு சூட்.

‘தனியார்மய உள்நோக்கத்தின் செயல்பாடே ஒடிசா விபத்து’

தனியார்மய உள்நோக்கத்தின் செயல்  பாடே ஒடிசா ரயில் விபத்து என விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். “ஒடிசா ரயில் விபத்து மிகவும் வருத்தத்திற்குரி யது. வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு  காரணம் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் சரி யாக இயங்காததுதான். இது இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து விசா ரிக்க வேண்டும்.  தற்போதைய ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்தால், விசாரணைக்கு இடை யூறாக இருக்கும் என்பதால் இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ராஜி னாமா செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ரயில்வே  துறை, விமானத்துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வாக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் தான் சரியான முறையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை பராமரிக்கவில்லை” என அவர் கூறினார்.

ஒடிசா காவல்துறை எச்சரிக்கை

முகமது ஜூபைர் இது தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்  படும் என்று ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ஒடிசா போலீசார் செய்துள்ள பதிவில், “பாலசோரில் நடந்த சோகமான ரயில்  விபத்துக்கு சில சமூக ஊடக பயன்பாட்டா ளர்கள் வகுப்புவாத வண்ணம் கொடுக்க முயன்று  வருகின்றனர். இது மிகவும் தவறானது, துர திருஷ்டவசமானது. விபத்துக்கான காரணம்  மற்றும் பிற அனைத்து விதமான விசாரணை களும் ஒடிசாவின் ஜிஆர்பி மூலம் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.  தவறான கருத்துள்ள மற்றும்  தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை  தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். வதந்திகளை பரப்பி  மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சிப்ப வர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்” என்று ஒடிசா போலீசார் எச்சரித்துள்ளார்.



 

;