ஹவானா: சமத்துவத்தின் சாலைகள்... ஒரு சோசலிச கனவின் தேடல்
2025 மார்ச் 15 ஆம் தேதி, ஹவானாவின் பரந்து விரிந்த சாலைகளில்வழியே பேருந்து சென்று கொண்டு இருந்தது. ஆனால் சாலைகளில் இருந்த போக்குவரத்து விளக்குகள் எரியவில்லை. காரணம் கேட்ட போது மின்சாரம் இல்லை என்றனர். காவலர்கள் சில இடங்களில் மட்டுமே நின்றனர்.ஆனால் எந்த ஒரு சந்திப்பிலும் முட்டல் மோதல் இல்லை. வாகன ஓட்டிகள் உணர்வுகளால் சிக்னல்களைப் பெற்றவர்கள் போன்று நின்று நிதானமாக சென்றனர்.இது வெறும் போக்குவரத்து ஒழுங்கு அல்ல - இது கியூப சமுதாயத்தின் ஆழமான கூட்டுணர்வின் வெளிப்பாடு.
“புரட்சி என்பது மக்களின் உள்ளங்களில் நடக்கும் மாற்றம்.” என்பது கிரீன் சிக்னல் விழுந்தது போன்று மனதில் பளிச்சென வந்து நின்றது. இங்கு பகல் நேரங்களில் மனித உள்ளங்களில் எரியும் சமத்துவ விளக்குகள் போதுமானதாக இருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றியது. அடுத்த வினாடியே அழைத்துச்சென்றவர்கள் மின் தடையின் பின்னணி அரசியலை கூறிய போது, கியூபா வின் சோசலிசம் அமெரிக்காவின் சுரண்டல் நாக்கில் விழுந்த நஞ்சுத்துளியாய் இன்றளவும் எப்படி இருந்து வருகிறது என்பதை உணர முடிந்தது. பழமையான அமெரிக்க கார்களும், சைக்கிள் களும், குதிரை வண்டிகளும் ஒன்றாக ஓரே சாலையில் பயணிப்பதை பார்க்க முடிந்தது. ஏன் இன்னும் குதிரை வண்டிகளும், சைக்கிளும் என யோசித்த போதோ, அமெரிக்காவின் தடையால் மின்சாரம் மட்டுமல்ல, எரி பொருள் கிடைப்பதிலும் தடைகள் தீவிரமாகி யிருப்பதை உடன் வந்தவர் விளக்கினார்.ஆனாலும் கியூபாவின் தனித்துவமான சமூக அமைப்பு அதனை எப்படியெல்லாம் எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கிறது என்பதும், கியூப மக்களிடம் சோசலிசம் எப்படி நங்கூர மிட்டிருக்கிறது என்பதையும்உணர முடிந்தது.
பாரம்பரியத்தின் கல்வெட்டுகள்
எங்கு நோக்கினும் திடமான பழமையான பாரம்பரிய கலை நயத்துடன் கூடிய கட்டடங்கள் வரவேற்றன. ஒவ்வொரு கட்டடமும் காலனித்துவ காலத்தின் வேத னையையும், புரட்சியின் பெருமையையும் சொல்லும் சாட்சியங்களாக இருந்தன. அவை வெறும் சுவர்கள் அல்ல - இவை வரலாற்றின் பக்கங்களாக காட்சி யளித்தன. கரீபியன் கடலின் அலைகள் தொட்டுச் செல்லும் மலேக்கோன் கடற்கரையில், ஸ்பானிய காலனித்துவ காலத்தின் பிரம்மாண்டமான கட்டடங்கள் வண்ணமய மான கனவுகளைப் போல விரிந்து கிடக்கின்றன. பழைய ஹவானாவின் (ஹபானா வியேஹா) கல் லறைகளில் 16ஆம் நூற்றாண்டின் கதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. பரோக் மற்றும் நியோகிளா சிக்கல் கட்டிடக்கலையின் அற்புதமான கலவையில், ஒவ்வொரு அரண்மனையும் தனது சொந்த வர லாற்றை நம்மிடம் கிசுகிசுக்கிறது. கத்தீட்ரல் சதுக்கத்தில் நிற்கும் ஹவானா கதீட்ரல், அதன் பரோக் முகப்பில் கோரல் கற்களின் நுண்ணிய செதுக்கல்களுடன், பழைய கலையின் மகிமையைப் பிரகடனம் செய் கிறது. வண்ணமயமான பால்கனிகள் மலர்களின் மாலை களைப் போல தொங்கி, ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி குணங்களைக் கொண்டு வந்துள்ளன. நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு - இந்த நிறங்கள் வெப்பமண்டல சூரி யனின் முத்தத்தில் மிளிர்கின்றன. நேரம் இங்கு வேறு வேகத்தில் நகர்கிறது. பழைமை யான கார்கள் அவற்றின் பளபளப்பான முகத்துடன் கட்டடங்களின் அழகுக்கு பூரகமாக இருக்கின்றன. இரவு களில் சல்சா இசை காற்றில் கலந்து, கட்டடங்களின் சுவர்களில் இருந்து எதிரொலிக்கும் போது, ஹவானா ஒரு உயிருள்ள கவிதையாக மாறுகிறது. இவ்வாறு ஹவானா, கட்டடக்கலை, வரலாறு மற்றும் கலாச்சாரம் என்ற மூன்று நூல்களால் பின்னப் பட்ட அழகான கலைப்பொருளாக நமக்கு முன்னால் நிற்கிறது. கியூபா இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது. மின்சாரத் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம் என ஒரு சேர நெருக்குகிறது. ஆனால் கியூப நெருக்கடியை எதிர் கொள்ள இன்று சிலர் தங்களின் கல்வியறிவை பயன் படுத்தி வெளிநாடுகளில் பணிபுரிந்து தங்கள் வரு வாயை டாலராக கியூபாவிற்கு அனுப்பி வருகின்றனர். அந்த குடும்பத்தினரின் நிலை உயர்ந்திருப்பதாக பார்க்கும் போது மற்றவர்களுக்கும் அது போன்ற கனவு கள் வரவேண்டும். அதன் மூலம் சோசலிசம் என்கிற கோட்டைக்குள் குண்டூசியை கொண்டு ஓட்டை போட முடியும் என்ற உத்தியையும் பயன்படுத்தி முதலா ளித்துவ நாடுகள் திட்டமிடுகின்றன. ஆனால் அதனை யும் கியூப மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி சகமனிதர் களாக, சமத்துவமாக பாவிப்பதை அவர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் உணர முடிந்தது. நடத்தை யில் மட்டுமல்ல, உடையிலும் இந்த சமத்துவம் பிரதி பலித்தது. மார்க்ஸ் சொன்ன “வர்க்கமற்ற சமுதாயம்” என்பது இங்கு கோட்பாடு அல்ல - நடைமுறை உண்மை என்பது உரைத்தது.
கல்லில் பொறித்த வரலாறு
வாகனம் நேசியனல் டி கியூபா என்ற ஹோட்டல் முன்பு நின்றது. அது பார்க்கவே அரண்மனை போல் இருந்தது. இது வெறும் ஹோட்டல் அல்ல - அது கியூபா வின் உள்ளம் என்றார்கள். 1930 இல் நியோகிளா சிக்கல் கட்டடக்கலையில் எழுந்த இந்த கட்டடம், ஸ்பா னிஷ் கோட்டையின் வேரிலிருந்து சோசலிச கியூபா வின் சின்னமாக உருமாறிய கதையை விவரித்தனர்.
பீரங்கிகளிலிருந்து பாடல்களுக்கு...
18-19 நூற்றாண்டுகளில் இங்கு நின்ற “பட்டேரியா டி சாண்டா கிளாரா” - ஸ்பானிஷ் காலனிய பீரங்கி கோட்டை. ஹவானாவை பிரிட்டிஷ், பிரெஞ்சு படை யெடுப்புகளிலிருந்து பாதுகாக்க கட்டப்பட்ட இந்த கோட்டை, 1898 இல் அமெரிக்க-ஸ்பானிஷ் போருக்குப் பிறகு கைவிடப்பட்டது. காற்றும் காலமும் அதன் பீரங்கி அடிப்பட்டைகளை அரித்தபோது, வரலாற்றின் புதிய அத்தியாயம் துவங்கியது. 1929 இல் அமெரிக்க “புரொஹிபிஷன்” காலம் - மது தடை. கியூபா அமெரிக்கர்களின் பொழுதுபோக்கு தலமாக மாறியது. மெக்கிம், மீட்&வைட் என்ற நியூ யார்க் நிறுவனம் வடிவமைத்த இந்த ஹோட்டல் 1930 டிசம்பர் 30 இல் திறக்கப்பட்டது. அப்போதைய கியூப அதிபர் ஜெரார்டோ மச்சாடோ திறந்து வைத்தார்.
மாஃபியாவிலிருந்து மக்களுக்கு
1950-களில் இங்கு மாஃபியா தலைவர்கள் கூடும் இடமாக இருந்தது. மியர் லான்ஸ்கி, மர்லின் மன்றோ, வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பணக்காரர்களின் சொர்க்க மாக திகழ்ந்து வந்தது. “காபரே பாரிஸியன்” நைட் கிளப்பில் சொகுசு நிகழ்ச்சிகள். அப்போது சாதாரண கியூப மக்களுக்கு இந்த இடம் எண்ண இயலாத கன வாக இருந்தது. 1959 - புரட்சியின் காலம். பிடல் காஸ்ட்ரோ இதை “தேசிய நினைவுச்சின்னம்” என அறிவித்தார். முதலா ளித்துவ சொர்க்கம் சோசலிச மக்களின் பொதுச்சொத் தாக மாறியது. இந்த நெருக்கடி காலத்திலும் கியூபாவின் அந்நியச் செலாவணி வருமானத்தில் முக்கிய பங்கினை வகிக்கி றது. ஒரு நாளைக்கு தங்குவதற்கான வாடகை 625 அமெரிக்க டாலர்கள். இங்கு பண பரிவர்த்தனை என்பது முழுக்க டாலர் மற்றும் யூரோக்கள் மட்டுமே. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 148 பில்லியன் டாலர்களை வருவாயாகப் பெற்றிருக்கிறது. இன்று ஹோட்டல் நேசியனல் கியூபாவின் சோச லிசக் கொள்கைகளின் உயிர் சாட்சியம். 90ஆண்டு களுக்கும் மேலான பழமையான இந்த கட்டடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பாதுகாக்கப்படு கிறது. சுண்ணாம்புக் கல் சுவர்கள், மர வேலைப்பாடு கள் - எல்லாம் அசல் பொருட்களுடன் பழுதுபார்க்கப்படு கிறது. அமெரிக்க பொருளாதாரத் தடை இருந்த போதி லும், ஐரோப்பிய நிபுணர்களின் உதவியுடன் பராம ரிக்கப்படுகிறது. ஹோட்டலின் பூங்காவில் இன்றும் பழைய ஸ்பா னிஷ் பீரங்கி தளங்கள் இருக்கின்றன என அதனை சுட்டிக் காட்டினர். ஜெர்மனியில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட கம்பிகளுடன். 1930 இல் நிறுவப்பட்ட லிப்ட் இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது. நவீன லிப்ட்கள் செல்லும் அதே வேகம் பராமரிக்கப்படுகிறது.
நிறங்களின் மொழி பேசும் கலை...
ஹோட்டல் அறைகள் மட்டுமின்றி ஹோட்டல் முழு வதும் அழகிய ஓவியங்கள்.. அந்த ஓவியம் என்பது வெறும் கோடுகளும் வண்ணங்களும் அல்ல; அது மனதின் ஆழத்தில் உதிக்கும் எண்ணங்களையும், உணர்வுகளையும், கனவுகளையும் ஒருமித்து உயிர்ப்பிக்கும் அற்புதக் கலை. ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது, நாம் வெறும் படத்தைப் பார்ப்பதில்லை. ஓவியனின் ஆழ்மனதின் அலைபாயும் எண்ணங்களையும், அவன் கண்ட காட்சி களையும், உணர்ந்த உணர்வுகளையும் அங்கே நாம் காண்கிறோம். ஒவ்வொரு வண்ணமும் ஒரு கதை சொல்கிறது; ஒவ்வொரு தூரிகையின் அசைவும் ஒரு கவிதையை பேசுவதாக இருக்கிறது.
கலாச்சார டைம் மெஷின்
“பியூனா விஸ்டா சோஷியல் கிளப்” இசைக்குழு இங்கு நிகழ்ச்சி நடத்தியது. அப்போது உலகம் கியூப இசையின் ஆழத்தை அறிந்தது. இது வெறும் பொழுது போக்கு அல்ல - கலாச்சார சுதந்திரம். மக்களின் கலை, மக்களுக்கான கலை. இன்றளவும் தினமும் இசைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. உணவருந்தும் அறைகளிலும் இசைக்குழுவினரின் மெல்லிய இசைநாதம் நம் உணர்வுகளை உள்ளி ழுத்துக் செல்வதை அனுபவிக்க முடிந்தது ஆண்டுக்கு 1 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இவர்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் அல்ல - புரட்சியின் சாட்சிகளாக இருக்கின்ற னர். ஹோட்டல் நேசியனல் அவர்களுக்கு “புரட்சி எதிர் பாரம்பரியம்” என்ற இருமுனைகளின் இசைவைக் காட்டுகிறது.
நூறு வருடங்களின் நினைவுகள்
மாஃபியா உதவியுடன் கட்டப்பட்ட ஹோட்டல் இன்று சோசலிசக் கொள்கைகளின் கோட்டை. உப்புக் காற்றும் காலமும் சுவர்களை அரித்தாலும், அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களின் சோசலிசக் கொள்கைகள் மீதான காதல் அழியாத சித்திரமாக நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அமெரிக்கத் தடை காரணமாக பழுதுபார்க்க பொருட்கள் கிடைப்பது கடி னம். ஆனால் கியூப மக்கள் அந்த சவால்களை எதிர்கொண்டு பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறார்கள். இந்த ஹோட்டல் ஹவானாவின் “கலாச்சார டைம் மெஷின்”. ஸ்பானிஷ் கோட்டையின் வேரிலிருந்து சோச லிச கியூபாவின் சின்னமாக உருமாறிய கதையை சொல்லி வருகிறது. கல்லில் பொறித்த சோசலிசமும் இங்கு உயிர் பெறுகிறது.