articles

img

தனியார் கண்ணில் வெண்ணெய்; பொதுத்துறை கண்ணில் சுண்ணாம்பு - க.சுவாமிநாதன்

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நான்கையும் இணைத்து ஒரே கழகமாக ஆக்கு (Merger) என்ற கோரிக்கையின் முக்கியத்துவம் என்ன? அரசு அதை ஏற்க மறுப்பது ஏன்? அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு ஜீவ மரணப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஜீவன் எது எனில் அந்த நிறுவனங்களின் உயிர் என்பது அல்ல. ஜீவன் என்பது மக்களுக்கான காப்பீடு. மக்க ளுக்கான கடப்பாடு. இதுவே பொதுத் துறைக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.  தனியார்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்காது. சமூக அக்கறை என்பதை விட லாப வேட்டைதான் அவர்களுக்கு இலக்கு. 

அவிழும் முகமூடி 

2013 கம்பெனிகள் சட்டம்    பிரிவு 135, “கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு” (CSR) பற்றி பேசுவதே இதற்கு சாட்சி யம். தனியார்களின் முகத்தில் கருணை இருக்காது. மனித நேயம் தவழாது. ஆகவே முகமூடி அணிகிற சூட்சுமம்தான் இந்த 135 ஆவது பிரிவு. ஆனால் உண்மையில் அந்த முகமூடியை கூட தனியார்கள் விரும்புவதில்லை. “தொழில் நடத்துகிற சுதந்திரம்” என்றால் “லாபத்தை ஈட்டுகிற சுதந்திரம்” என்றே அர்த்தம். ஆகையால் சி.எஸ்.ஆர் நெறிகளை கூட தனியார்கள் மீறுகிறார்கள். சி.எஸ்.ஆர் நிதியில் செல விடப்படாத தொகைக்கு பரிகாரம் என்ன தெரியுமா? பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்தால் போதும்! இப்படி எல்லாம் இருந்தும் பிரதமர் நிவாரண நிதியில் 2022 இல் சேர்ந்த ரூ. 4910 கோடிகளில் 59.3 சதவீதம் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வந்தவையே. அதிலும் ஐந்து பொதுத் துறை நிறுவனங்கள் கொடுத்தது மட்டுமே ரூ. 1462 கோடி. ஆகவே சி.எஸ். ஆர் நிதியிலும் அவர்கள் நாட்டம் காண்பிப்பதில்லை. அவிழும் முகமூடிக்கு பின்னால், லாப வெறி கொப்ப ளிக்கும் தனியார் முகங்களை காண முடியும்! ஆகவே சமூகப் பொறுப்பு என்பது பொதுத் துறை யின் மரபணுவிலேயே இருப்பது. ஆகவேதான் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இருப்பு மக்களுக்கு முக்கியமாகிறது. அவை வலுப்படுவதற்கு நான்கு அரசு நிறுவனங்களின் - நியூ இந்தியா, ஓரியண்டல், நேஷனல், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்- இணைப்பும் அவசியமாகிறது. 

ஏன் இணைப்பு தேவை?

2022 - 23 இல் அரசு பொதுத் துறை நிறு வனங்கள் ஈட்டிய பிரீமியம் ரூ.82895 கோடி. 23 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய பிரீமியம் ரூ. 1,58,182 கோடி. அரசு நிறுவனங்களின் சந்தைப் பங்கு 32 சதவீதம் மட்டுமே. முதல் ஐந்து நிறுவனங்கள் எனும் போது அதில் இரண்டு தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் - ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்டு, எச்.டி.எப்.சி எர்கோ வந்து விட்டன. ஆகவே அரசு பொது இன் சூரன்ஸ் நிறுவனங்களை பலப்படுத்த “இணைப்பு” அவசியமாகிறது. 245 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 1956 இல் தேசிய மயம் ஆக்கப்பட்ட போது ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி உருவானது. ஆனால் 1972 இல் 107 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயம் ஆன போது ஒரே நிறுவனமாக உருவாக வில்லை. நான்கு அரசு நிறுவனங்களாக உருப்பெற்றன.  பொதுத் துறை நிறுவனங்கள் தாக்கப்படும் காலம் இது. நேரடியாக தனியார் மயம் என்ற தாக்குதல். கிளை மூடல், புதிய நடைமுறைகளை திணித்தல் என்ற பெயரில் பலவீனப்படுத்தல், தனியார் நிறுவனங்கள் பயன் அடைகிற வகையில் ‘ விளையாட்டு ‘ விதிகளை மாற்றுதல் ஆகியன அரங்கேறுகின்றன. அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்தால் இப்போது தனியார் வசம் செல்லும் வணிகம் மீட்கப்பட்டு விடு மென்ற அச்சமே அரசை தடை போடச் செய்கிறது. 

கார்ப்பரேட் உலகின் நியதி

கார்ப்பரேட் உலகம் முழுக்க “இணைப்பு & கையகப்படுத்தல்” என்பது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது. “இணைப்பு” என்று இணையத்தில் தேடி னால் 43000 நிறுவன இணைப்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 

  1.  குறுக்கு வெட்டு இணைப்பு ( Horizontal merger). ஒரே தொழிலை செய்கிற நிறுவனங்களின் இணைப்பு. வோடபோன் - ஐடியா இணைப்பு.  
  2.  செங்குத்து இணைப்பு ( Vertical Merger): தொடர்புடைய தொழில்களை இணைத்துக் கொள்வது. ஆக்சிஸ் பேங்க் நிதி தொழில் நுட்ப நிறுவனமான பிரீ சார்ஜ்-ஐ இணைத்துக் கொண்டது.  
  3.  பெரு நிறுவன இணைப்பு (Conglomerate Merger): சம்பந்தமில்லா தொழில்களை கூட இணைத்துக் கொள்வது. அதானி குழுமம், அதுவரை வணிக அனுபவமே இல்லாத துறைக்குள் நுழைந்து என்.டி.டி.வியை கையகப்படுத்தியது.  விமான போக்குவரத்து துறையில் சந்தை தலை வராக உள்ள இண்டிகோ (56% சந்தை) நிறுவனத்தை எதிர்கொள்ள டாடா அண்மையில் வாங்கிய ஏர் இந்தி யாவுடன் ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் ஏசியா, விஸ்தாரா நிறுவனங்களை இணைக்க முயற்சி செய்து வருகிறார்.  தொலைத் தொடர்பு துறையில் பாரதி ஏர் டெல், ஜியோவை எதிர்கொள்ள நெட்டில் இன்ஃப்ரா, டெலி கானிக் நெட் உள்ளிட்ட 6 நிறுவனங்களை இணை;j துள்ளது. 

நிராயுதபாணியாக நிற்கலாமா?

நேற்றைய செய்தி. எஸ்.பி.ஐ லைப் நிறுவனம் சகாரா லைப் நிறுவனத்தின் சொத்து - பொறுப்பு களை 2 லட்சம் பாலிசிதாரர்கள் உடன் தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது. இது “ இணைப்பு” அல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளது. காரணம், நிறைய வாய்ப்பும் நேரமும் கொடுத்தும் பாலிசிதாரர் நலன் fளை சகாரா பாதுகாக்க தவறி விட்டது என்று ஐ.ஆர்.டி.ஏ விளக்கம் தந்துள்ளது. (இந்து 03.06.2023) இது சாப்பாடு அல்ல, சாப்பிடும் போது நடுவுல குடித்த தண்ணிதான் என்பது போல... இப்படி வளர்வதற்கும், விழுந்த நிறுவனம் எழுவதற்கும் இணைப்பு, கையகப் gடுத்தல், வணிகத்தை எடுத்துக் கொள்ளுதல் என கார்ப்பரேட் உலகில் அரங்கேறும் நிகழ்வுகள் ஏராளம்.  ஆகவே இணைப்பு என்ற ஆயுதத்தை தங்களை பலப்படுத்திக் கொள்ள தனியார்கள் பயன்படுத்தும் போது அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை மட்டும் நிராயுதபாணியாக களத்தில் நிற்க வைப்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது. 2018 இல் 3 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்கிறோம் என்று தான் சொன்ன வார்த்தைகளையே ஒன்றிய அரசு காற்றில் பறக்க விட்டிருக்கிறது.  ஆகையால் இணைப்பு என்ற முழக்கம் நிறுவனங்க ளை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. காப்பீடு பர வலை, எளிய மக்களுக்கான சேவையை காப்பாற்றுவது தான் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்.

​​​​​​​கட்டுரையாளர் : துணைத் தலைவர், 
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு


 

 

;