காலநிலை உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் என்பது, 2015 பாரீஸ் மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியே. பல தொழில்நுட்ப அமர்வுகள் தனித்தனியாக கூடிய பிறகு, ஒட்டுமொத்த அமர்வில் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்படுகிறது. நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கலந்து ஆலோ சித்து நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டது. 50,370 பிரதிநிதிகள் ,15, 063 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ,1293 ஊடகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாடு திரு விழா போல் நடைபெறுகிறது. அதேநேரம் மாநாட்டில் ஆழ்ந்த கவனத்துடன் பல விஷயங்கள் பல்வேறு குழுக்களில் விவாதிக்கப் படவும் செய்கிறது.
மாநாட்டின் இறுதியில், இறுதிப் பிரகடனம் வெளியிடப்படும்.
28 வது காலநிலை மாநாட்டின் சிறப்பு அம்சம் என்பது, 2015 பாரீஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமலாக்கம் குறித்த சர்வதேச மதிப்பீட்டு அறிக்கை மீது விவாதம் நடத்தப்படுவது ஆகும். பருவநிலை குறித்த இந்த மதிப்பீடு அறிக்கை தயாரிக்க இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்கள் உதவி செய்தன.இனிமேல் ஐந்தாண்டுக்கு ஒருமுறை உலக சராசரி வெப்ப உயர்வு 1.5 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் கார்பன் உமிழ்தலை கட்டுப்படுத்து வது எந்த அளவு நிறைவேறி உள்ளது, கார்பன் உமிழ்தலை குறைக்கும் தொழில்நுட்ப முறை களை வளரும் நாடுகள் பின்பற்றுவதற்கு, தேவையான நிதி உதவியை வளர்ந்த நாடுகள் செய்வது ஆகியவை குறித்து உலக மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.
தேச அளவில் கார்பன் உமிழ்தலை கட்டுப்படுத்த அளவுகள் தீர்மானிக்கப்படும். இவை 2025 இல் நடைபெறும் 30 ஆவது பருவ நிலை மாநாட்டில் இறுதிப்படுத்தப்படும். இது ஒரு அரசியல் தொகுப்பு ஆவணம் ஆகும்.
பருவநிலை குறித்த ஐநா முதல் மாநாடு ஜெர்மனியின் பெர்லின் மாநகரில் 1995 மார்ச் மாதம் நடைபெற்றது. மாநாட்டிற்கான செயற்குழு அலுவலகம் ஜெர்மனியின் பான் மாநகரில் உள்ளது. 2028ல் பருவநிலை குறித்த மாநாட்டை இந்தியா நடத்த விரும்புவதாக தற்போதைய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நச்சுவாயுக்கள்
உலகம் தொழில்மயமாவதற்கு முன் இருந்த வெப்பநிலையை காட்டிலும் இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்குள் சராசரி வெப்ப நிலை உயராமல் இருக்க வேண்டுமானால், உலக நாடுகள் பசுமை கூட வாயுக்கள் வெளி யேற்றத்தை கட்டுப்படுத்த முன் வர வேண்டும்.கரிய மில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரோ புளோரோ கார்பன், பெர்புளோரோ கார்பன், சல்பர் ஹெக்ஸா ஃப்ளோரைடு, நைட்ரஜன் ட்ரை ஃபுளோரைடு, நீராவி ஆகி யவை கார்ப்பரேட் பெரும் தொழிற் சாலைகள் வெளியிடும் வாயுக்கள் ஆகும் .
தற்போது 1.4 டிகிரி செல்சியஸ் அளவு புவியின் வெப்பம் உயர்ந்துள்ளது .1.5 டிகிரி செல்சியஸ்- க்குள் வெப்ப உயர்வை நிறுத்து வது என்பது கற்பனை .2 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு என்பது காரிய சாத்தியமானது. 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்துள்ள போதே, தீவிரமான பருவநிலை மாறுதல்கள், கனமழை வெள்ளம், வறட்சி ,திடீர் காட்டுத் தீ, வெப்ப அலைகளை உலகம் சந்தித்து வரு கிறது. கடல் மட்டம் உயர்கிறது ;வடதுருவம், தென்துருவ பனிப்பாறைகள் உருகி வரு கின்றன. துருவங்களில் பனிக்கட்டிகளை பொறுத்த முடியாது. வெப்ப உயர்வு இதே அளவில் நீடித்தால், கடல் மட்டத்தில் உள்ள பல சிறிய தீவுகள் மூழ்கிவிடும். 2010 -ஐக் காட்டி லும் தற்போது கரிய மில வாயு 12 சதவிகிதம் கூடுதலாக காற்றில் கலந்து மாசுபடுத்துகிறது .
முதலாளித்துவ நாடுகளே காரணம்
சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தியதில், உலகில் சராசரி வெப்பம் உயர்ந்து கொண்டே வருவதற்கு பெரிதும் காரணம், அமெரிக்கா, ஐரோப்பா உள்பட வளர்ச்சி அடைந்த முத லாளித்துவ நாடுகளே . புதைப்படிவ எரிபொருள் பெட்ரோல், டீசல், நிலக்கரி ,இயற்கை எரி வாய்க்கு பதிலாக சூரிய ஒளி, காற்றாலை மின்சா ரம் போன்ற தொழில்நுட்ப மாறுதல்களை நாடுகள் மேற்கொள்ள வேண்டும். சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பம், அதற்கான கட்டமைப்புகளுக்கான நிதி உதவிகளை வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு வழங்கிட வேண்டும் என பருவ நிலை மாநாடுகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிட கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இம்முடிவை அமலாக்க பணக்கார முதலாளித்துவ நாடுகள் தயக்கம் காட்டுகின்றன .
பணக்கார நாடுகள் கூட நிலக்கரி, பெட்ரோல் பயன்பாட்டை குறைத்திட தயாராக இல்லை. தங்கள் பொருளாதார நலன்களுக் காக, தங்கள் நாட்டிலே உள்ள நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு போன்ற புதை படிவ எரிபொருள்களை ,எரிபொருள் இருப்பை, பயன்படுத்தவே விரும்புகின்றன. இயற்கை எரிவாயு மாற்று என்று கூறுகிறார்கள். ஆனால் இயற்கை எரிவாயு, நிலக்கரியை விட சுத்தமாக இருப்பினும், அதுவும் புதை வடிவ எரிபொருளே; உலகை மாசுபடுத்தக்கூடியது தான். பசுமை ஹைட்ரஜன் தற்போது மாற்றாக முன்வைக்கப்படுகிறது.
10 ஆண்டுகளில்...
2020 -க்குள் ஒவ்வொரு ஆண்டும் பத்தா யிரம் கோடி டாலர் நிதி உதவி பணக்கார நாடுகள் பருவநிலை மாறுதலை கட்டுப்படுத்த வழங்க வேண்டும் என 2015 பாரீஸ் மாநாடு முடிவெடுத்தது. அதுவும் 20% தான் நிறைவேறி உள்ளது. வழக்கமாக வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு நிதி உதவிகளையும் சேர்த்து 81.2% வழங்கி வருவதாக பணக்கார நாடுகள் கூறுவது அபத்தமானது. நிதி உதவி குறித்த விவாதங்களில், வளரும் நாடுகளை மூழ்கடித்து, பணக்கார நாடுகள் தங்களின் கார்பன் உமிழ்தலை அதிகமாக்கி வருவதை மறைத்து விடுகின்றன.
கார்பன் உமிழ்தல் அதிகமானாலும், அதனால் ஏற்படும் நாசகர விளைவுகளை, தங்களால் சமாளித்துக் கொள்ள முடியும் என பணக்கார நாடுகள் இறுமாப்பாக உள்ளன. ஆனால் 10 ஆண்டுக்குப் பிறகு இந்நாடுகளி லும் சமாளிக்க முடியாத பாதிப்புகள் ஏற்படும். அப்போது நிலைமை கட்டு மீறி போய்விடும் என்ற அபாயத்தை உணர மறுக்கின்றன.
- தமிழில் தொகுப்பு : ஆர்.சிங்காரவேலு