அலை கடலென அணி திரள்வீர்! மதுரை அழைக்கிறது!
வாராது வந்த மாமணி போல் என்று கூறுவார்களே அதுபோல்தான் வந்துசேர்ந்தது “நாரி சக்தி வந்தன் அதினியம்..” அது வேறொன்றுமல்ல... மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தின் ஹிந்தி செல்லப்பெயர் என்றும் கூறலாம்.
வெற்று விளம்பரமா மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்?
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெண் குடியர சுத்தலைவர் இல்லாமலேயே திறந்து வைத்து பெருமை சேர்த்த பாஜக ஆட்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை புதிய நாடாளுமன்றத்தின் முதல் சட்டமாக செப்டம்பர் 18, 2023 நிறைவேற்றியது. இதுகுறித்த பாராட்டு படலங்களை பாஜக திட்டமிட்டே அரங்கேற்றியது. தான் அணிந்த பழமை யான முகமூடியை சற்று புதுமை ஆக்கிக் கொள்ள இப்பாராட்டுரைகள் பயன்படுத்திக்கொண்டது. அந்தப்படலத்தில் பங்கேற்றவர்கள் உலகத் தலை வர்களோ உள்ளூர்மக்களோ அல்ல. அவர்களே அவர்களைப் பாராட்டிக் கொண்டார்கள். பிரதமர் மோடி அவர்கள் பெண்கள் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி துவங்கும் என்றும் நாரி சக்தி வந்தன் அதினியம் புதிய திசையை மட்டுமல்ல மகளி ருக்கு புதிய ஆற்றலையும் தரும் என்றெல்லாம் பேசினார். 27 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த மசோதாவை சட்டமாக்கினோம் என்று பாஜக விளம்பரம் செய்து கொண்டது.
உண்மை நிலை
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்தச் சட்டத்தை நாம் வலியுறுத்தி வரவேற்றோம். பெண்களுக்கான மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக போராடி வந்த இயக்கமாகவே நாம் இருந்தோம். அதனுடைய ஒரு பகுதியாக தான் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் பெயரளவில் தான் இருக்கி றது. உடனடியாக அமலுக்கு வரவில்லை. உத்தேச வருடமும் குறிப்பிடவில்லை. இது ஒரு நாடகம். பெண்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது காங்கிரஸ் வரைவு அரசியல் தீர்மானத்தில் “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவ தை காலவரையின்றி தாமதப்படுத்தி மோடி அரசு இந்திய பெண்களை ஏமாற்றி இருக்கிறது” என்று அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது. மிகவும் காலம் தாழ்த்தப்பட்டு வருகிற மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு செயல்முறையுடன் இதை இணைப்பதன் மூலம் இது வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறது.
உலகளவில் இந்தியாவின் பிற்போக்கு நிலை
உலகளவில் நாடாளுமன்றங்களில் பெண்கள் பங்கேற்பின் சராசரி 26.1% ஆக உள்ளது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட நாடுகளை விட பின்தங்கிய நிலையில் உள்ளது.
தந்திரத்திற்குப் பின் இந்தியாவில் பெண்களின் பங்கேற்பு:
K 1952 இல் 4.41 சதம்
K 2009 இல் 10 சதம்
K 2019 ல் 14.36 சதம்
K 2024 லும் அதிகரிக்கவில்லை. 543க்கு 74 பெண்கள்தான் தேர்வு.
ஆகவே நிலைமை ஒன்றும் பெரிய அளவில் மாற்றம் அடைந்து விடவில்லை. பாஜக ஆட்சியின் இந்த சட்டம் பெண்கள் மத்தியில் வாக்குகளை பெறுவதற்கான அரசியல் நோக்கத்தோடு மட்டுமே அமைந்துள்ளது.
பெண்களின் பொருளாதாரத் துயரம்
அரசியல் அறிக்கையில், “பல மாநில அரசுகள் பெண்களின் வங்கி கணக்குகளில் ஆயிரம் முதல் 1500 ரூபாய் வரை செலுத்தும் திட்டத்தின் மூலம் ஆதரவு தளத்தை உருவாக்குகின்றன. இத்தகைய சிறு தொகைகள் கூட பெண்களின் வாழ்வில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவது, ஒரு சராசரி பெண்ணின் கடுமையான பொருளாதார துயரத்தைக் காட்டு கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலவசத் திட்டங்களை முடிந்தவரை ஏகடியம் செய்துகொண்டிருந்த பாஜக தற்போது அதன் தேர்தல் அரசியல் நலனுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளது. அது தான் மகாராஷ்டிரா, தில்லி தேர்தல் வாக்குறுதிகள். பாஜகவின் அணுகுமுறை அரசியலமைப்புச் சட்டத்தின்படி சம குடிமக்களாக இருப்பதிலிருந்து பெண்களை வெறும் “பயனாளிகளாக” மாற்றுவதாக உள்ளது. பெண்களை பயனாளிகளாகவும் வாக்கா ளர்களாகவும் பத்து ஆண்டுகால பாஜக அரசு மாற்றியுள்ளதே சாதனைதானே...!
கண்ணுக்குத் தெரியாத உழைப்பு
பெண்களின் ஊதியம் பெறாத வீட்டு வேலை களின் மதிப்பு 22.7 லட்சம் கோடி ரூபாய் என்றும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறிப்பிடுகிறது. ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளிலும் சிறு தொ ழில்களிலும் ஊதியம் பெறாத விவசாய வேலைகளி லும் லட்சக்கணக்கான பெண்கள் ஈடுபடுகிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை, மகாத்மா காந்தி திட்டத்தில் நிதி குறைப்பு ஆகியவை பெண்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளன. இதனால் அவர்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு நுண் நிறுவனங்க ளின் கடன் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். சக்கர வியூகத்தில் மாட்டிய அபிமன்யூக்களைப் போல கடன் வலையில் சிக்கியுள்ளனர் இந்தியப் பெண்கள்.
அதிகரிக்கும் வன்முறைகளும் பறிக்கப்படும் உரிமைகளும்
மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 28% அதிகரித்துள்ளன. ஒவ்வொரு மணி நேரமும் 50 குற்றங்கள், தினமும் 88 பாலியல் வன்புணர்வுகள் நடப்பதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் வாழும் பெண்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பற்ற நாடாகவே இருக்கிறது. 100 பாலியல் வழக்குகளில் 75 சதவீதம் குற்ற வாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு போன்ற பல முக்கிய வழக்குகளில் பாஜக அரசாங்கங்கள் வெட்கமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாக ஆதரித்து நிற்கின்றன. பாஜக ஆட்சியில் ஒரு பெண் பிற மதத்தவரை திருமணம் செய்யும் உரிமை பறிக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை உரிமைக்கு எதிரானதாக இருக்கிறது. பொது சிவில் சட்டமும் பெண்ணுரிமைகளை பறிப்பதாக உள்ளது.
அலைகடலென திரள்வோம்
சிபிஎம் மதுரை மாநாடு இந்தியாவிலும் உல கெங்கும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரி கருத்தாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தி யாவில் பாலின சமத்துவம், நாடாளுமன்றத்திலும் அனைத்து துறைகளிலும் சமபங்கேற்பிற்கான உரிமைப் போராட்டத்தில் கட்சி தீவிர பங்களிப்பு செய்யும். இம்மாநாடு வெற்றிபெற அலைகடலென திரண்டு வாரீர் என தோழமையோடு அழைக்கிறது!