articles

img

நியூயார்க்கில் ஒலித்த லத்தீன் அமெரிக்காவின் குரல் -ஆர்.சிங்காரவேலு

செப்டம்பர் 28 அன்று நியூயார்க்கின் ஹார்லெம் பகுதியில் உள்ள அப்போலோ தியேட்டரில் “லத்தீன் அமெரிக்கா பேசுகிறது: ஒருமைப்பாடு (எதிர்) அமெரிக்க சாம்ராஜ்யம்” என்ற தலைப்பில் ஒரு முக்கிய மாநாடு நடைபெற்றது. மக்கள் மன்றம் (People’s Forum) என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் திரட்டப்பட்ட நிதி மத்திய கிழக்கு நாடுகளின் குழந்தைகள் கூட்டணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

பிரபல பேச்சாளர்கள்:

1. மனோலோ தி லாஸ் சாண்டோஸ் (மக்கள் மாமன்றம்)

2. புருனோ ரோட்ரிகஸ் (கியூபா வெளியுறவு அமைச்சர்)

3. லாமெஸ் மொகமது (பாலஸ்தீன இளைஞர் இயக்கத்தின் அமைப்பாளர்)

4. யுவான் கில் பிண்டோ (வெனிசுலா வெளியுறவு அமைச்சர்)

5. பேரா.விஜய் பிரசாத் (சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிட்யூட் நிர்வாக இயக்குநர்)

முக்கிய கருத்துக்கள்:

மனோலோ தி லாஸ் சாண்டோஸ்:

- அமெரிக்கா குண்டுகளால் மட்டுமல்ல, பொருளாதாரத் தடைகள் மூலமும் மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மையை அச்சுறுத்துகிறது.

- உலகின் மூன்றில் ஒரு பகுதியை அமெரிக்கா பொருளாதாரத் தடைகளால் குறிவைக்கிறது.

புருனோ ரோட்ரிகஸ்:

- வெனிசுலாவின் புரட்சிகர சுதந்திரப் பாதையை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

- பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறது.

- கியூபா மீதான தடைகள் கடந்த 25 நாட்களில் ஏற்படுத்திய சேதம், ஒரு ஆண்டுக்கான மருந்துகள் செலவுக்கு ஈடானது.

லாமெஸ் மொகமது:

- காசாவிற்கு லத்தீன் அமெரிக்காவின் ஒருமைப்பாடு அவசியம்.

- காசாவை மீண்டும் கட்டமைக்க டாக்டர்கள், பொறியாளர்கள் தேவை; கியூபாவும் வெனிசுலாவும் இதற்கான பயிற்சிகளை வழங்குகின்றன.

யுவான் கில் பிண்டோ:

- 60 ஆண்டுகளாக கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை கண்டிக்கிறோம்.

- பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவே கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்துள்ளது.

பேரா.விஜய் பிரசாத்:

- அமெரிக்கா கியூபாவை விழுங்க விரும்புகிறது, ஆனால் கியூபா புரட்சியைக் கண்டு அஞ்சுகிறது.

- உலகம் சோசலிசத்தை நோக்கி செல்ல வேண்டும், இல்லையெனில் வர்க்கங்களின் பொது அழிவை சந்திக்க நேரிடும்.

இந்த மாநாடு லெபனான், பாலஸ்தீனம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தின் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டியது.

அமெரிக்க துறைமுகங்களில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

அக்டோபர் 1 நள்ளிரவு முதல், அமெரிக்கா வின் கிழக்கு கடற்கரை முழுவதும் உள்ள 36 துறைமுகங்களில் சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர். பாஸ்டன், நியூயார்க், மியாமி, ஷூஸ்டன் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்கள் இதில் அடங்கும். 1977-க்குப் பிறகு சர்வதேச லாங் ஷோர்மென் அசோசியேசன் நடத்தும் முதல் பெரிய வேலைநிறுத்தம் இதுவாகும்.

துறைமுகத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு வழங்கக் கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது. கொரோனா காலத்தில் கப்பல் கம்பெனிகள் அபரிமித லாபம் ஈட்டியதாகவும், அதை தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தொழிற்சங்கத் தலைவர் வலியுறுத்தினார். 

அமெரிக்க பொருளாதாரத்தின் மீது இந்த வேலைநிறுத்தம் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1947 தாப்ட் ஹார்ட்லி சட்டத்தின் கீழ் ஜனாதிபதி இந்த வேலை நிறுத்தத்தை நிறுத்த உத்தரவிடலாம் என்ற  ஊகமும் எழுந்துள்ளது. சர்வதேச டிரக் டிரை வர்கள் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரான்சில் தொழிலாளர்களின்  பரந்த எதிர்ப்பு இயக்கம்

அக்டோபர் 1 அன்று, பிரான்சின் சிஜிடி (CGT) மற்றும் சாலி டாய்ர்ஸ் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெருக்களில் இறங்கிப் போராடினர். ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரா னின் சர்ச்சைக்குரிய பென்ஷன் சீர்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை எழுப்பினர்.

சமீபத்திய தேர்தலில் புதிய மக்கள் முன்னணி கூட்டணி வெற்றி பெற்றி ருந்தும், மேக்ரான் மைக்கேல் பார்னி யர் என்ற வலதுசாரியை பிரதமராக நியமித்தது அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. பார்னியரின் காவல்துறை, புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாடு போன்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 லட்சம் மக்கள் போராடினர்.

ஸ்பெயினில் பாலஸ்தீன ஆதரவு வேலைநிறுத்தம்

செப்டம்பர் 27 அன்று ஸ்பெ யின் நாட்டு சிஜிடி (CGT) தொழிற்சங்கம் அறைகூவல் விடுத்ததற்கு இணங்க, பாலஸ் தீன மக்களுக்கு ஆதரவாக 24  மணி நேர பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இஸ்ரேலுடனான அனைத்து அரசியல், பொருளா தார, கலாச்சார உறவுகளையும் ஸ்பெயின் அரசு துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப் பப்பட்டது.

சுமார் 200 தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக குழுக்கள் இதில் பங்கேற் றன. நாடு முழுவதும் 1,50,000 பேர் கண்டன ஊர்வலங்களில் கலந்து கொண்டனர். 

தலைநகர் பார்சிலோனாவில் மட்டும் 50,000 பேர் தெருக்களில் இறங்கினர். இஸ்ரேலுடன் தொடர்பு டைய நிறுவனங்கள் குறிவைக்கப் பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கொலம்பியா ஜனாதிபதி மீதான விசாரணை

கொலம்பியாவின் ஜனாதிபதி குஷ்தவோ பெட்ரோ மீது 2022 தேர்தலில் நிர்ண யிக்கப்பட்ட செலவு வரம்பை மீறியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தேசிய தேர்தல் கவுன்சில் இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. 

இது தனக்கு எதிரான வலதுசாரிகளின் சதி என பெட்ரோ குற்றம்சாட்டி யுள்ளார். பிரேசில், பொலி வியா, பெரு போன்ற நாடு களில் நடந்ததைப் போல, சட்டப்பூர்வமாக தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாகவும், ஊழல் நீதிபதிகளை வலதுசாரிகள் பயன் படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மெக்சிகோவின்  முற்போக்கு சீர்திருத்தங்கள்

மெக்சிகோவின் ஜனாதிபதி அம்லோ தனது 6 ஆண்டு பதவிக் காலத்தை செப்டம்பர் 30-இல் நிறைவு செய்தார். இக்காலத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை அவர் கொண்டு வந்தார்:

- வறுமையில் வாழ் வோர் விகிதம் 43.9% இலிருந்து 36.3% ஆக குறைந்தது

- குறைந்தபட்ச ஊதியம் 4.5 டாலரிலிருந்து 10 டாலராக உயர்ந்தது

- வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைந்தது

- நீதித்துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன

- ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன

அதே சமயம் உள்நாட்டு, வெளிநாட்டு முத லீடுகளையும் அம்லோ ஊக்குவித்தார். சுற்று லாத்துறை வளர்ச்சி, லித்தியம் சுரங்கம் தேசியமயமாக்கல் போன்ற நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டன.