articles

img

விண்ணில் பாயும் விலைவாசியும் தூங்கிக் கொண்டிருக்கும் மோடி அரசும்

  1.  செப்டம்பர் 2023-ல் சராசரி விலைஉயர்வு 5.5%
  2.  உணவுப் பொருட்களின் விலை உயர்வு 9.2%
  3.  காய்கறிகளின் விலை உயர்வு:
  4.   - தக்காளி: 42.4%
  5.   - வெங்காயம்: 66.2%
  6.   - உருளைக்கிழங்கு: 65.3%
  7.  கச்சா பாமாயில் எண்ணெய் விலை 3 மாதங்களில் 45% உயர்வு
  8.  பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மத்திய அரசின் வருவாய் (2022-23): ₹3.5 லட்சம் கோடி
  9.  2014 முதல் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மொத்த வசூல்: ₹26.74 லட்சம் கோடி
  10.  2016 மே முதல் 101 மாதங்களில்:
  11.   - 72% காலத்தில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி (RBI) இலக்கான 4%-ஐ தாண்டியது
  12.   - 28% காலத்தில் 6% என்ற அதிகபட்ச வரம்பையும் தாண்டியது
  13.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 18% குறைந்தும் உள்நாட்டில் விலை மாற்றமில்லை
  14.  அத்தியாவசிய மருந்துகளின் விலை உச்சவரம்பு 50% உயர்த்தப்பட்டது

இந்த ஆண்டின் செப்டம்பரில், சராசரி விலை வாசி உயர்வு என்பது கடந்த ஒன்பது மாதங்க ளில் இல்லாத அளவிற்கு 5.5 விழுக்காட்டை  எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, உணவுப் பொருள்க ளின் விலை உயர்வுகள் 9.2 விழுக்காட்டைத் தாண்டி இருக்கிறது. நாட்டு மக்களில் பெரும்பான்மையான வர்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை உணவுக்காகச் செலவு செய்கிறார்கள். எனவே, உண வுப் பணவீக்கம் பெரும்பாலானவர்களைப் பாதித்தி ருக்கிறது. உணவுப் பொருள்களின் மத்தியில், குறிப்பாக காய்கறிகள் விலை கடந்த ஓராண்டில் கடு மையாக உயர்ந்திருக்கின்றன. தக்காளி 42.4 விழுக்கா டும், வெங்காயம் 66.2 விழுக்காடும், உருளைக்கிழங்கு 65.3 விழுக்காடும் விலை உயர்ந்திருக்கிறது. நாடு முழுதும் உள்ள மக்களால் இவை பெரிதும் உண்ணும் உணவுப் பொருள்களாகும்.

நுகர்வோர் தலையில்  ஏற்றப்படும் சுமை

அரசாங்கமும், அதற்கு வக்காலத்து வாங்கும் பொருளாதார வல்லுனர்களும், இதற்கு வானிலை சீர்குலைவுகள் தான் காரணம் என்று வழக்கமான சாக்குப்போக்குகளைக் கூறுகின்றனர். ஆயினும் உண்மை என்னவெனில், ஒவ்வோராண்டும் சில காய் கறிகளின் விலைகள் தாங்கமுடியாத அளவிற்கு உச் சத்தை அடைவதும் அதன் காரணமாக ஏற்கனவே வறிய நிலையில் வாழ்ந்துவரும் பெரும்பான்மை மக்களின் குடும்ப வரவுசெலவுத் திட்டங்களிலிருந்து கோடிக்க ணக்கான ரூபாய்கள் பெரும் வர்த்தகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் கருவூலங்களுக்கு மாற்றப்படு கின்றன என்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பல நுகர்வுப் பொருள்களும் அபரிமிதமான விலை உயர்வைக் கண்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று சமையல் எண்ணெய் ஆகும். இது கடந்த மூன்று மாதங்களில் கச்சா பாமாயில் விலை 45 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணமாகும். கச்சா பாமாயில் உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்காக மட்டுமல்ல, சோப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.  இவற்றின் விலை உயர்வுகளும் இவற்றை உற்பத்தி செய்திடும் நிறுவனங்களால் இவற்றை வாங்கிடும் நுகர்வோர் தலையில் ஏற்றப்படுகின்றன.

மருந்துகளின் விலையையும் விட்டு வைக்காத அரசு

பெரிய நிறுவனங்களின் லாப வேட்கைக்கு விசுவாச மாக இருப்பதை வெட்கமின்றி வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கம் மருந்து (விலைக்கட்டுப்பாடு) உத்தரவைப் பயன்படுத்தி சில அத்தியாவசிய மருந்து களின் விலைகளின் உச்சவரம்பை 50 விழுக்காடு அளவிற்கு உயர்த்திட அனுமதி அளித்திருக்கிறது. இது ஆஸ்துமா, காச நோய், இரத்த சோகை (தல சீமியா) போன்ற நோய்களின் சிகிச்சைக்காகப் பயன் படுத்தப்படும் மருந்துகள் மற்றும் பாக்டீரியா தொற்று களுக்கு சிகிச்சையளிப்பதற்கான முக்கிய நுண்ணு யிர் எதிர்ப்பிகளைப் பாதிக்கிறது. இவ்வாறு இவற்றின் விலைகளை உயர்த்தியதற்கு அரசாங்கத்தின் தரப்பில் முன்வைக்கப்படும் வாதம் என்ன தெரியுமா? இவற்றின் விலைகளை உயர்த்தாவிட்டால் இவற்றை உற்பத்தி செய்திடும் மருந்து நிறுவனங்களுக்கு லாபம் இல்லாமல் போய்விடுமாம்!

அதீத வரிகள் மூலம்...

இதற்கிடையில் பெட்ரோலியப் பொருள்கள் மீது அரசாங்கம் விதித்துள்ள அதீத வரிகள் மூலமாக மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள மறைமுக வரிச்சுமை கட்டுக்  கடங்காமல் தொடர்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 18 விழுக்காடு குறைந்தாலும், பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் சில்லறை விற்பனை விலைகளைக் குறைத்தி டாமல் அதே அளவில் மோடி அரசாங்கம் வைத்திருக்கி றது. 2022-23ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் பல்வேறு வரிகள், செஸ் வரிகள், ராயல்டிகள், பெட்ரோலியப் பொ ருள்களின் மீதான வரிகள் ஆகியவற்றின் மூலம் பெற்ற  மொத்த வருவாய் 3.5 லட்சம் கோடி ரூபாய்களாகும். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், இது வரை அது மக்களிடமிருந்து பெட்ரோலியப் பொருட்க ளுக்கு மட்டும் வரி விதித்து ஈட்டியுள்ள வருவாய் என்பது 26.74 லட்சம் கோடி ரூபாய்களாகும். எவ்வித மான மனசாட்சியுமின்றி அது இவ்வாறு மக்களின் மீது சுமையைப் பல மடங்கு ஏற்றி அவர்களை சொல் லொண்ணாத் துன்பத்தில் தள்ளி இருக்கிறது.  ஏனெனில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து சாமானிய மக்கள் வாங்கும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களும், காய்கறிகளும் விலை உயர்ந்து அவர்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. 

கார்ப்பரேட்டுகளின் நலன்கள் பாதிக்கப்படாமலிருக்க...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட இந்திய ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்துவதாகக் கூறியபோ திலும், அதனால் எவ்விதப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை.  பொருளாதார வல்லுநர்களின் சமீ பத்திய பகுப்பாய்வு ஒன்று காட்டுவதென்ன? 2016 மே மாதத்திற்குப்பின் கடந்த 101 மாதங்களில், நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் (CPI-Consumer Price Index) பணவீக்கம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் 4 விழுக்காடு பணவீக்க குறியீட்டைக் காட்டிலும் 72 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று அது கூறியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி பண வீக்கத்தைக் கட்டுப் படுத்த வேண்டுமென்று விரும்புவது எதற்காகவென் றால் பணவீக்கத்தால் மக்களின் நலன்கள் பாதிப்புக்கு உள்ளாகிறதே என்பதற்காக அல்ல, மாறாக வங்கிக் கடன் விகிதங்கள் மற்றும் பிற பணவியல் கொள்கை கள் காரணமாக கார்ப்பரேட்டுகளின் நலன்கள் பாதித்து விடக்கூடாதே என்பதற்காகத்தான்.

பொது விநியோக முறையை விரிவுபடுத்த மறுப்பு...

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட பலமுறை அரசாங்கம் வாக்குறுதிகள் அளித்துள்ளபோதிலும் உருப்படியாக ஒரு நடவடிக்கையையும் அது எடுத்திட வில்லை. விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிவிதிப்புக் கொள்கையை அது கைவிடவில்லை. மாறாக வரிவிதிப்பைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கிறது. கள்ளச்சந்தையைக் கட்டுப் படுத்திட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வெளிச்சந்தையில் கிடைத்திட, பொது விநியோக முறையை அது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்திட வேண்டும். ஆனால் அதைச் செய்ய மோடி அர சாங்கம் மறுத்து வருகிறது. வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களையும், பருப்பு வகைகள் போன்ற உணவு தானியங்களையும் பதுக்கிவைத்திடும் கள்ளச் சந்தைக்காரர்கள் மீதும், கருப்புச்சந்தைக்காரர்கள் மீதும் இருக்கின்ற சட்டங்களை அமல்படுத்தி கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அவசியமான மருந்துகளை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்திட வேண்டும். கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்கும் கொள்கையைக் கைவிட வேண்டும். இவைதான் அனைத்துப் பொருள்கள் மீதும் செங்குத்தாக விலை உயர்வதற்கு முக்கியக் காரணங்களாகும்.  சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருள் கள் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி முன்னெ டுத்துச் சென்றிட வேண்டும். வெறுமனே வாயால் வடை சுடுவதும், படாடோபமான தேர்தல் பிரச்சா ரங்களும் விலைவாசியைக் கட்டுப்படுத்தப்போவ தில்லை. மாறாக மேலே கூறியவாறு அனைத்து நடவ டிக்கைகளையும் எடுத்தால்தான் விலைவாசியைக் கட்டுப்படுத்திட முடியும். ஆயினும் மோடி அரசாங் கம் இவற்றைச் செய்ய மறுத்து நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. 

அக்டோபர் 29, 2024 
தமிழில் : ச.வீரமணி