ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்மாநிலங்களவையில் - ஏ.ஏ.ரகீம் வலியுறுத்தல்
ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமா கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பி னர் ஏ.ஏ.ரகீம் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநி லங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை களை எழுப்பும் நேரத்தில் ஏ.ஏ. ரகீம் பேசியதாவது: ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், நிலையான பணி கலாச்சாரத்தை மேம்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும். நான் நாட்டில் இன்றுள்ள வேலை நிலை மைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை நிலை குறித்துப் பேச விரும்புகிறேன். நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக, இந்திய வேலைச் சந்தையின் தன்மை மிக வேகமாக மாறி விட்டது என்பது நமக்குத் தெரியும். அரசாங்கம் நிரந்தர வேலை வாய்ப்பை உறுதி செய்யத் தவறி விட்டது. தனியார்மயமாக்கல், ஒப்பந்தம் மற்றும் வேலைகளை அவுட்சோர்ஸ் முறையில் அளித்தல் ஆகியவை புதிய சவால்களை உருவாக்கி இருக்கின்றன.
அதிக வேலையால் இறப்பு இந்தியா முன்னணியில்...
நான் இந்த அவையில் சில முக்கியமான ஆபத்தான தரவுக ளைக் குறிப்பிட விரும்புகிறேன். சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ‘உலகம் முழுவதும் வேலை நேரம் மற்றும் வேலை-வாழ்க்கைச் சமநிலை’ என்ற தலைப்பில் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் 51 சதவீத ஊழியர்கள் வாரந்தோறும் 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள். இது நாட்டை மிக நீண்ட வேலை நேரத்தைக் கொண்ட முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றி இருக்கிறது. மேலும், அதிக வேலை நேரத்தால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகிய வற்றின் கூட்டு ஆய்வு, அதிகப்படி யான வேலை நேரம் பக்கவாதத்தால் இறக்கும் அபாயத்தை 35 சதவீதமா கவும், இதய நோய் அபாயத்தை 17 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய அதிர்ச்சியூட்டும் தரவுகளின் வெளிச்சத்தில், பாதிக் கப்பட்ட ஒருவரின் பெயரை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர், வேறு யாருமல்ல, எர்ன்ஸ்ட் அண்ட் யங் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கேரள இளம் பெண் அன்னா செபாஸ்டியன் என்பவ ராவார். வேலை தொடர்பான மன அழுத்தம் காரணமாக அவர் தனது உயிரை இழந்துள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் அவர் மட்டும் அல்ல.
90 சதவீத ஊழியர்கள் பதற்ற நிலைமையில்... ‘
1 டூ 1 உதவி’ (‘1to1Help’) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2024 ஜனவரி முதல் நவம்பர் 2024 வரை 83,000 க்கும் மேற்பட்ட ஆலோசனை அமர்வுகள், 12,000 திரையிடல்கள் மற்றும் 42,000 மதிப்பீடுகளின் தரவை பகுப்பாய்வு செய்து, 25 வயதுக்குட்பட்ட 90 சதவீத நிறுவன ஊழியர்கள் பதற்ற நிலைமையுடன் போராடுவதாகக் கூறுகிறது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகி யுள்ள இளைஞர்களைக் காப் பாற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன்.