சாமானியர்களுக்கு எதிரான ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்துவோம்!
“வளரும் நாடுகள் மற்றும் உலகெங்கி லும் வாழும் சாமானிய மக்களை அச்சுறுத் தும் வகையில், அமெரிக்க ஏகாதிபத்திய மும் - அதன் அடாவடிகளுக்குக் கண்மூடித் தனமாக ஆதரவு தரும் மேலை நாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் மன சாட்சி யைத் தட்டி எழுப்புவோம்” என்று புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் மனோஜ் பட்டாச்சார்யா தெரிவித்துள் ளார். மனிதநேயமே கம்யூனிசம் மதுரையில் புதன்கிழமையன்று துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய மனோஜ் பட்டாச்சார்யா, “மனித நேயம் என்பதன் மறு பெயரே கம்யூனிசம்” என்று குறிப்பிட்டார். கொன்று குவிக்கப்படும் அப்பாவி பாலஸ்தீனர்கள் “அமெரிக்காவின் ஆசிகளோடு இஸ்ரேல் நாடு 60 ஆயிரத்திற்கும் மேலான அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த கொடிய நிகழ்வை, பிற உலக நாடு களும் சர்வதேச சமூகமும் அமைதியாகக் கடந்து செல்லும் போக்கு ஆபத்தானது” என்று வேதனையோடு குறிப்பிட்ட மனோஜ் பட்டாச்சார்யா, “பாலஸ்தீன மக்களின் நியா யமான போராட்டம் குறித்த கருத்துரு வாக்கம் பரவலாக நடத்தப்பட வேண்டும்” என்று வற்புறுத்தினார். மாவோயிஸ்டுகள் முத்திரையில் வேட்டையாடப்படும் பழங்குடிகள் “இன்றைய இந்தியாவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவம் மிக்க செயல்பாடு காரணமாக மோசமானதொரு சூழலைச் சந்தித்து வருகிறது. 2026 மார்ச்சுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என அமித் ஷா கூறுகிறார். உண்மையில், வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்க ளைக் குறிவைத்து, அவர்களை மாவோ யிஸ்டுகள் என்ற முத்திரை குத்தி, தாக்கி வெளியேற்றிவிட்டு, வளமிக்க அந்த நிலங்க ளைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்க ளின் இலாப வேட்டைக்கு வழங்குவது தான் அமித் ஷா-வின் திட்டம்” என்றும் மனோஜ் பட்டாச்சார்யா குற்றம்சாட்டினார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரி அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.