articles

img

மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம்!!

வளங்கள் - வாழ்வாதாரங்களை பாதுகாப்போம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 ஆவது மாநில மாநாடு அறைகூவல்

க.கனகராஜ்,  அ.ராதிகா

ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களால் சூறையா டப்படும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படும் நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் மத வெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுக்கவும் தமிழக மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. நம் நாடு ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியி ருக்கிறது.  விடுதலைப் போராட்டத்தின் ஊடாக இந்தியாவில் சமூக, பொருளாதார, அரசமைப்பு, கலாச்சார விழுமியங்கள் குறித்த விவாதங்களும் போராட்டங்களும் சேர்ந்தே எழுந்தன. மதச்சார் பின்மை, ஜனநாயகம், சோசலிசம், கூட்டாட்சி, பொ துத்துறை, இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தம், நிலச்சீர் திருத்தம், பெண் விடுதலை, குழந்தைத் திருமணம் தடுப்பு, உடன்கட்டை ஏறுவதற்கு தடை, கைம்பெண் மறுமணம், தீண்டாமை ஒழிப்பு, கோவில் நுழைவுப் போராட்டங்கள், மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு என்று பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சார விவாதங் கள் நடைபெற்றன. அதன் விளைவாகவே 1949ஆம் ஆண்டு நவம்பர் 26இல் இந்திய அரசியல் நிர்ணய சபை யால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 முதல்  இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.

முன்னேற்றத்தைச் சிதைத்து  நாட்டை பின்னுக்கு  இழுக்க முயற்சி...

விடுதலைப் போராட்டக் காலம் முழுவதும் இந்தியர்கள் தூக்குமேடை, துப்பாக்கிக் குண்டு, நாடு கடத்தல், சொத்துக்கள் பறிமுதல், சிறைவாசம் என சொல்லொணா துயரங்களை ஏற்று போராடிக் கொண்டி ருந்தபோது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மேலும் இத்தகைய போராட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட அரச மைப்புச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்த தோடு, பெண்ணடிமைத்தனத்தையும் சாதிய ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தும்  மனுஸ்மிருதியே இந்திய அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். தற்போது இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பு அவர்கள் கையில் கிடைத்த பிறகு அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை சிதைத்து நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். 

பசித்தவர்களின் மூளைகளை வெறுப்பால் நிரப்புகிறார்கள்

அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைத்தவர்கள் அண்ணல் அம்பேத்கரையும் இப்போது இழிவு படுத்த துவங்கியிருப்பதோடு அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிதைக்க ஆரம்பித்திருக்கி றார்கள். அரசின் மதச்சார்பற்ற தன்மையை ஒவ்வொரு கணமும் சிதைப்பதோடு, இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று வெறுப்பை விதைக்கிறார்கள். லவ் ஜிகாத் உள்ளிட்ட  மதவெறி கோஷங்களை கிளப்பி பசித்த வயிறுகளின் மூளைகளை வெறுப்பால் நிரப்பி உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறார்கள். இதை எதிர்த்துப் போராடும் ஜன நாயக அமைப்புகளையும் இஸ்லாமியர்களையும் தனி மைப்படுத்தி அவர்களின் சொத்துக்கள் மீது புல்டோசரை ஏவி இடிக்கிறார்கள். போலீசை ஏவி சிறைக்குள் அடைக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி என்பதை அவர்கள் சட்டை செய்வதில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு  தாரை வார்ப்பு

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் பொதுச்சொத்துக்க ளையும் அந்நிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். துறை முகங்கள், விமான நிலையங்கள், விமானப்போக்கு வரத்து, நிலக்கரி உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள் ஆகியவற்றை அதானி, அம்பானி, டாடா கார்ப்பரேட் வகையறாக்களுக்கு அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போரை சிறையில் தள்ளுகிறார்கள். லாப வேட்டைக்கு தொழி லாளர்களின் சம்பளத்தையும், உரிமைகளையும் பலிகடா ஆக்குகிறார்கள். தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து நான்கு தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப் பட்டிருக்கின்றன. முத்தரப்பு அமைப்புகள் சீர்குலைக் கப்பட்டிருக்கின்றன. அரசு ஊழியர்களுக்கான 8ஆவது சம்பளக்கமிஷன் இன்னும் அமைக்கப் படாமலேயே இருக்கிறது. 

கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு; உணவுப் பொருட்களுக்கு வரிவிதிப்பு

பொருளாதார சமத்துவமின்மையை மேலும் தீவிரப்படுத்தும் முறையில் வரிக்கொள்கையை வடி வமைக்கிறார்கள். ஆண்டுக்கு 2 லட்சம் கோடி அளவுக்கு சலுகை அளித்து,  கார்ப்பரேட் வரியை 30 சத விகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைத்தி ருக்கிறார்கள். அதே சமயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரிசி, கோதுமை  உள்ளிட்டு ஏழைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப்பொ ருளின் மீதும் அநியாய வரியை விதித்திருக்கிறார்கள். கிராமப்புற மக்களின் வருவாயில் உணவுப்பொருள் பணவீக்கத்தின் காரணமாக அவர்களின் மாதாந்திரச் செலவில் 50 சதவிகிதம் உணவுப் பொருட்களுக்கே செலவழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நகர்ப் புறங்களில் இது 40 சதவிகிதத்தை தொட்டு நிற்கிறது.  இதனால் வயிற்றை நிரப்பக் கூட மக்கள் திண்டா டும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  சர்வதேசச் சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று சொல்லிவிட்டு கச்சா எண்ணெய் விலை 18 டாலர் குறைந்த பிறகும் சல்லிக்காசு கூட குறைக்கா மல் சண்டித்தனம் செய்து வருகிறார்கள். சமையல் எரிவாயு உருளைக்கு மானியத்தை வங்கியில் தரு வோம் என்று ஆசைகாட்டி விட்டு மூன்று மடங்காக விலையை உயர்த்தி விட்டு மானியம் தராமல் ஏழைகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

வேலைவாய்ப்பு ஒழிப்பு  விவசாயம் சீரழிப்பு

ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்ற ஆசை வார்த்தை காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 10 ஆண்டு காலம் முழுமைக்கும் கூட 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. மாறாக, ஒன்றிய அரசுத் துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளும், பொதுத் துறைகளில் அதே அள வுக்கான வேலை வாய்ப்புகளும் வெட்டிச் சுருக்கப் பட்டுள்ளன. ரயில்வே துறையில் மட்டும் அனுமதிக்கப் பட்ட 14 லட்சம் பணியிடங்களில் 3 லட்சம் பணி யிடங்கள் காலியாக உள்ளன. நிரப்பப்பட்ட பணியி டங்கள் பலவும் ஒப்பந்தம், தினக்கூலி, வெளிமுகமை என பாதுகாப்பற்ற வேலைகளாகவும், சம்பளம் குறைந்த வேலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.  விவசாயத்தை சீரழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட  மூன்று வேளாண் சட்டங்களை  விவசாயி களின் 385 நாள் போராட்டத்தால் ஒன்றிய அரசு கைவிட்டது. ஆனால், நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக விவசாயத்தில் விவசாயிகளின் வருமா னத்தையும் உரிமைகளையும் நாட்டின் நலனையும் பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். விவசாய விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை, 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்குதல் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டே விவசாயிகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கி றார்கள். அதேசமயம் விதை, உரம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. 

தினம் 30  விவசாயிகள் தற்கொலை

பாஜக அரசு பதவியேற்ற நாளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் 30 விவசாயிகள் சராசரி யாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை நம்பி வாழ்க்கையை நடத்தும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலை கள் கிடைக்காமலும் வேறு வழியில்லாமலும் இடம் பெயர்கிறார்கள். விவசாயக் கூலிகளின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக இடதுசாரிகளின் வலியுறுத்தலால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- 1 ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட  கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட்டம் சீர் குலைக்கப்படுகிறது. ஊதியத்திற்கான பங்கு குறைக் கப்பட்டு பொருட்களின் பங்கு அதிகரிக்கப்படுகிறது. உரிய காலத்தில் நிதியை கொடுப்பதில்லை. எல்லா வற்றிற்கும் மேலாக பண வீக்கத்திற்கு தகுந்தவாறு கூட ஒதுக்கீடுகள் இல்லாத நிலை இருக்கிறது. 

கூட்டாட்சி சிதைப்பு 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிக்க முடியாத அம்சமான கூட்டாட்சி ஒவ்வொரு கணமும் சிதைக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே கல்வி உள்ளிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரிப்பங்கீட்டில் மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நிதிக் குழுக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து மாநிலங்களின் நிதி வாய்ப்பு கள் சுருக்கப்படுகின்றன. பேரிடர், சிறப்புத் திட்டங்கள், கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை ஓர வஞ்சனையோடு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்க ளுக்கு  எள்முனையளவு நிதி ஒதுக்கீடு செய்யும் ஒன்றிய அரசு, பாஜக மற்றும்  கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இமயமலை அளவுக்கும் இடை வெளியிருக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்கிறது.  மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்டுள்ள ராணுவம் பேரிடர் காலங்களில் உதவியதற்கு கூட மாநிலங்களிடம் கந்துவட்டிக்காரர்கள் போல் வாடகை வசூலிப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஆளு நர்கள் இணை அரசாங்கம் நடத்துவது போல இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடனேயே நியமிக்கப் படுகிறார்கள். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தில் அன்றாடம் தலையிடுவதை ஆளுநர்கள் வாடிக்கையாக செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஊடகங்கள் மீது தாக்குதல்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் அவற்றின் கடமையைச் செய்யும் போது அரசுக்கு எதிரான கருத்துக்களாக இருந்தால் ஊடக வியலாளர்களை சிறையில் அடைப்பது, சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிணை யில் வர முடியாமல் சிறையில் அடைப்பது, ஊடகங்க ளை தடை செய்வது, நிர்வாகங்களை மிரட்டி நிறுவ னங்களிலிருந்து வெளியேற்றச் செய்வது என்பது பாஜக ஆட்சியின் தொடர் தாக்குதலாக இருக்கிறது. 

ஊழலின் மொத்த உருவம்

தேர்தல் பத்திரம், பிஎம்கேர்ஸ், பல்லாயிரம் கோடி ராமர் கோவில் ஊழல், புதிய நாடாளுமன்ற கட்டுமான  முறைகேடு, நெடுஞ்சாலை அமைக்க ஒரு.கி.மீ.க்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு என்று ஊழலின் மொத்த உருவமாய் மாறி நிற்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு. தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் (ஒரு பகுதி) உள்ளிட்ட சுயேச்சையான அமைப்புகளை, அரசியல் எதிரிகளை பழிவாங்கு வதற்காக  பயன்படுத்துகிறார்கள். 

ரகசிய அமைப்பாகும்   தேர்தல் ஆணையம்

டிஜிட்டல் யுகத்தில் 7 கட்ட வாக்குப்பதிவு, பதிவான வாக்குகளைச் சொல்ல 11 நாட்கள், பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குக ளுக்கும் இடைவெளி, தேர்தல் விதிமுறை மீறல்கள் ஆளும் கட்சிக்கான உரிமை என்பது போல நடந்து கொள்வது, தேர்தல் தொடர்பான ஆவணங்களையும், வீடியோக்களையும் வெளிப்படையாகப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையமே ஒரு ரகசிய அமைப்பு போல மாற்றப்பட்டிருக்கிறது.  இத்தகைய நடவடிக்கைகளால் மக்களின் ஒற்றுமை, நாடாளுமன்ற  ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நாடுமுழுவதும் மக்களை ஏமாற்றியது போல தமிழகத்திலும் மதவெறி மற்றும் திசைதிருப்பல் நடவடிக்கைகள் மூலம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள். 

ஒற்றுமையை  சிதைக்கும் பாஜக

பன்மைத்துவம் என்பதே இந்தியாவின்  அடையாள மாகும்.  உணவு, உடை, மொழி, வழிபாட்டுமுறை, இனம், திருமண உறவுகள் என்று பல்வேறு வகையிலும் வேறுபாடுகளுடன் வாழும் மக்கள் இந்தி யர்களாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆனால் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு முயற்சியின் மூலம் இந்த ஒற்றுமையை பாஜக சிதைத்து வருகிறது.  இந்தப் பின்னணியில் தேசத்தின் ஒற்றுமை யையும், ஒருமைப்பாட்டையும், பொதுச் சொத்துக்க ளையும்,  அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசிய மானதாகும். இதற்கு பெரும் இடையூறாகவும் பேரிட ராகவும் வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும்  ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் பாசிச அரசியல் ஆகியவற்றை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது முக்கிய அரசியல் கடமையாகும்.  அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூகத் தளத்தி லும் விஷமாக வளர்ந்து வரும் இத்தகைய மதவெறி சக்திகளை முற்றிலுமாக முறியடித்து, நம் நாட்டின் அரசியல், சமூகப் பண்பாட்டு விழுமியங்களை பாது காக்க வேண்டும் எனவும் அத்தகைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டுமெனவும் தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு அறைகூவி அழைக்கிறது. இந்த தீர்மானத்தை மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் முன்மொழிந்தார். மாநிலக் குழு உறுப்பினர் அ.ராதிகா வழிமொழிந்தார்.