articles

img

ஜப்பானில் வெள்ள எச்சரிக்கை   2 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் வெள்ள எச்சரிக்கை   2 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானின் மேற்கு பகுதியில் நிலச்சரிவு  மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுமார் 2 லட்சம்  மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள னர்.  வெப்பமண்டல புயலின் தாக்கம்,சூடான மற்றும் ஈரமான காற்று  ஜப்பான் முழுவதும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என  ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு  கோமேனி எச்சரிக்கை 

ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என  ஈரானின்  மதத் தலைவர் அயதுல்லா அலி கோமேனி எச்சரித்துள்ளார். காசா மட்டுமின்றி சிரியா, லெபனான் எல்லைக்குள்ளும்  இஸ்ரேல் எந்தக் கட்டுப்பாடும் இன்றி தனது  தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரானை போருக்குள் கொண்டுவந்தால் அமெரிக்காவும் போரில் ஈடுபடும்; அது உலகம் முழுவதும் மோசமான விளைவுகளை உருவாக்கும்.

போலியோ மருந்து செலுத்துமிடத்தில்  குண்டுவீசிய இஸ்ரேல்

காசாவில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் இடத்தில்  குண்டு  வீசியுள் ளது இஸ்ரேல் ராணுவம். இதில் 3 குழந்தைகளும், சுகாதார பணியாளர்களும் படுகாயமடைந்துள்ள னர். காசா குடிநீரில் போலியோ வைரஸ் தொற்று இருப்பது ஆய்வில் கண்டறிப்பட்டதைத் தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு போலியோ மருந்து செலுத்தும் பகுதிகளில் தாக்குதல் நடத்த கூடாது என்ற நிபந்தனையுடன் உலக சுகாதார அமைப்பு காசாவில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கும்  இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. 

ஹிஸ்புல்லாவின் முக்கிய  தளபதி படுகொலை? 

ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை மற்றும் ராக்கெட் படைப்பிரிவின் தளபதி களுக்குள் ஒருவரான  ஜாபர் காதர் ஃபௌரை  கொன்று விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு லெபனானில் உள்ள கிராமங் களில் இஸ்ரேல் நடத்திவரும் வான்வழித் தாக்குத லில் ஒரே நாளில் சுமார் 52 அப்பாவிகள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக் கையை லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று காசாவில் கொல்லப்பட்ட 25 பாலஸ்தீனர்களின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 

இரண்டு உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்  

கிழக்கு உக்ரைனில் இரண்டு புதிய கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா. மேலும் ரஷ்ய  ராணுவம் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் பல நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றி  வேகமாக முன்னேறி வருவதாகவும்  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவம் அக்டோபர் மாதம் 478 சதுர கிலோமீட்டர் அளவிற்கு உக்ரைனின் நிலப்பரப்பைக் கைப்பற்றியது. இது  போர் துவங்கிய 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு  அதிக இடங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது போரில் ரஷ்யா ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதையும் காட்டுகிறது என கூறப்படுகிறது.