தஞ்சை மண்ணின் தவப்புதல்வன் தோழர்.பி.சீனிவாசராவ் - வீ.அமிர்தலிங்கம்
கர்நாடகத்தின் வழிபாய்ந்து டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையில் ஒன்று கலந்து விட்ட காவிரியையும் டெல்டா மக்களையும் எப்படி பிரிக்க முடியா தோ-அதே போல், கர்நாடகம் மாநிலம் படகரா வில் 1907ஆம் ஆண்டு பிறந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களின் இல்லந் தோறும்- உள்ளத்தோடும் ஒன்று கலந்துவிட்ட பெயர் தான் தோழர்.பி.சீனிவாசராவ். விடுதலைப் போராட்டக் களத்தில் எண்ணற்ற அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் சந்தித்து பீனிக்ஸ் பறவை யாய் செங்கொடி இயக்கத்தில் பயணித்து விவசாய இயக்க அமைப்பை உருவாக்கி- கட்டமைத்து-வளர்த்து- போராடி ஒரு பிர தேசத்து மக்களை உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தவர்தான் தோழர் பி. சீனிவாசராவ். இளம் வயதிலேயே மூடப்பழக்க வழக் கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் எதிர்க்கும் முற்போக்கு எண்ணம் கொண்ட வராக விளங்கினார். பெங்களூர் கிருஷ்ணர் கல்லூரியில் முதல் தர மாணவர்கள் பட்டிய லில் சிறந்து விளங்கிய அவர் விடுதலை வேள்வியில் ஈடுபட்டார்.
சுதந்திரப் போராட்டக் களத்தில்...
கல்லூரி படிப்பை துறந்து விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கிய அவர் 1930 ஆம் ஆண்டு சென் னையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். போலீசாரின் கொடும் சித்ரவதை தடியடிக்கு உள்ளானார். அந்நிய விற்பனைக்கு எதிரான மறியல் போராட்டம் அவரைக் குற்றுயிரும் குறை உயிருமாக அடித்து துவைத்து தூக்கி சாக்க டையில் வீசியது காவல்துறை. சீனிவாசராவ் இறந்துவிட்டார் என்ற செய்தி ஆங்கில பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு தாய் சாக்கடையில் இறங்கி சீனிவாசராவை காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்தார். இருப்பினும் அடுத்த நாளே கதர் விற்பனை என அவரது பிரிட்டிஷ் எதிர்ப்பு கிஞ்சிற்றும் அச்சமின்றி நடைபெற்றது. விடுதலைப் போராட்டக் களத்தில் வேலூர், சேலம் சிறைக் கொட்டடியில் 7ஆண்டுகள் அடைக்கப்பட்ட பி.சீனிவாச ராவ், அமீர் கைதர்கான் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுடன் கிடைத்த தொடர்பால் மார்க்சிய நூல்களை வாசித்து கம்யூனிஸ்ட் ஆனார்.
தஞ்சை மண்ணில் இருந்து...
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் கிழக்குத் தஞ்சை பகுதியில் விவசாய தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட கொடும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிட தஞ்சை தர ணிக்கு தோழர் பிஎஸ்ஆர் அனுப்பப்பட்டார். தஞ்சை மாவட்டத்திற்கு வந்த அவர் கிராமம் கிராமமாகச் சென்றார். பண்ணை அடிமைக ளாக இருந்த விவசாயத் கூலித் தொழிலா ளர்களையும், குத்தகை விவசாயிகளையும் சந்தித்து அங்கு நிலவி வந்த கொடுமைகளை கேட்டறிந்தார். தஞ்சை மாவட்டத்தின் விவசாய நிலங்கள் அனைத்தும் எட்டு நில உடமையா ளர்களுக்கு சொந்தமாகி இருந்தது.அந்த நிலத்தில் காலங்காலமாக உழைத்து வந்த அந்த மக்கள் எந்த உரிமையும் அற்றவர்க ளாக இருந்தனர்.
நில உடமையின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது!
உழைப்புச் சுரண்டலின் மையமாக விவசா யக் கூலித் தொழிலாளர்கள் சூரியன் உதிக்கும் முன்பு ஏர்கட்ட வேண்டும். சூரியன் மறைந்த பிறகு வயல்வெளியிலிருந்து கரையேற வேண்டும். ஆண்டைகளின் எண்ணப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு சாட்டையடி சாணிப்பால் கொடுக்கும் கொடூர தண்டனை முறை வழக்கத்தில் இருந்தது. இந்தக் கொடு மைகளுக்கெல்லாம் முடிவு கட்டிட தோழர் பி.எஸ்.ஆர் 1943 ஆம் ஆண்டு தென்பறை யில் துவங்கிய விவசாயிகள் இயக்கத்தின் அமைப்பை தஞ்சை மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாகக் கட்டி எழுப்பினார். அடி மைகளாக இருந்த விவசாய குடி தொழிலா ளர்களை தட்டி எழுப்பினார். செங்கொடியின் கீழ் கிராமப்புற மக்களை அணி திரட்டி நில உடமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டி னார். மன்னார்குடி ஒப்பந்தம், பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் குறைந்தபட்சக் கூலிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. பண்ணையார்களின் கொடும் அடக்கு முறைக்கு முடிவு கட்டப்பட்டது. சுரைக்கொடி படர்ந்த குடிசைகள் எல்லாம் கம்பீரமாக செங்கொடி பறக்கும் உரிமைக் கோட்டைக ளாக மாறின. செங்கொடியை தங்கள் மூச்சாக ஏற்றுக் கொண்ட அம்மக்களை பெரும் அமைப்பாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு குடியிருக்க இடமும் சாகுபடி செய்ய நிலமும் கிடைக்க வித்திட்டார் தோழர் பிஎஸ்ஆர். இறுதி நிமிடம் வரை இயக்கத்திற்காக... கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அமைக்கப்பட்ட காலத்திலிருந்து மாநிலக்குழு உறுப்பினராகவும், பின்பு மாநில செயற்குழு உறுப்பினராகவும், விவசாயிகள் இயக்கத் தின் தன்னிகரில்லா தலைவராகவும் விளங்கிய தோழர்.பி.எஸ்.ஆர். இந்த மண்ணில் 54 ஆண்டுகளே வாழ்ந்து இருந் தாலும், அவர் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராக வும், சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டிடவும் களம் கண்ட தளபதியாகத் திகழ்ந்தார். 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 துவங்கி 30 வரை நில உச்சவரம்பு கோரி நடைபெற்ற பிரச்சா ரம், மறியல் இயக்கங்களில் தொய்வின்றி வழி காட்டினார். இறுதி நிமிடம் வரை இயக்கத்தின் நலன் ஒன்றையே சிந்தனையில் கொண்டு இயங்கினார். தோழர்.பி.எஸ்.ஆர். காட்டிய திசை வழி யில் 78 ஆண்டுகால சுதந்திர தேசத்தில் குடியிருக்க இடம் இன்றி கோடிக்கணக்கான மக்கள் வீதியில் கிடக்கும் நிலை நீடிக்கிறது. நவ பாசிச கொள்கையைத் தீவிரமாகச் செயல் படுத்தி தேசத்தின் ஜனநாயகக் கட்டமைப்பை பாஜக ஆட்சியாளர்கள் சிதைத்து வருகிறார் கள். உழைக்கும் வர்க்க நலன்கள் கார்ப்ப ரேட்டுகளுக்கு காவு கொடுக்கப்படுகின்றன. இந்த பின்னணியில் மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது கட்சி காங்கிரஸ் நிறைவேற்றும் தீர்மானங்க ளை வென்றெடுக்க, தோழர்.பி.எஸ்.ஆர். காட்டிய திசை வழியில் மக்களைத் திரட்டி போராட்டப் பாதையில் முன்னேறுவோம்!