articles

பாஜகவின் ‘ரெய்டு’ அரசியலும் சரணாகதி அடைந்த அதிமுகவும்

பாஜகவின் ‘ரெய்டு’ அரசியலும் சரணாகதி அடைந்த அதிமுகவும்'

தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவின் தலைமை ஒன்றிய பாஜக அரசின் அடிமை யாக மாறியது. இதன் விளைவு, தமிழ்நாட்டில் கிட்டத் தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு மக்க ளவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது. தாமரை சின்னத்தை தங்கள் தோள் மீது சுமந்து கொண்ட இபிஎஸ்-ஓபிஎஸ் என்கிற இரட்டை தலைமை சந்தித்த முதல் தேர்தலாகும். ஆனால், 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் அமோக வெற்றியால், பாஜக-அதிமுக கூட்டணி மண்ணை கவ்வியது. எனினும் ஒரே ஒரு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் குமார் போட்டியிட்ட தேனியில் மட்டும் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டது. இந்தத் தோல்வியை தொடர்ந்தும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்று பாஜக அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டைப் பொருத்த மட்டில் நாங்கள் தான் பெரிய கட்சி. எங்கள் தலை மையில் தான் கூட்டணி என்றது அதிமுக. இதனால் அதி முகவுக்கும் அண்ணாமலைக்கும் மோதல் வலுத்தது. நீயா? நானா? என்பதில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் மட்டும் கொடுத்தனர். இந்தத் தேர்தலிலும் அதிமுக பாஜக-கூட்டணி க்கு மரண அடிகிடைத்தது. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பு பாஜகவுக்கு மீண்டும் கிடைத்தது. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் இரண்டு தொகுதிகளில் தப்பிப் பிழைத்து வந்தது.

“ஜெயலலிதா ஊழல்” விவகாரம்: புயலைக் கிளப்பிய ‘வேஸ்ட் லக்கேஜ்’

இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அதிமுக-பாஜக இடையே மீண்டும் கருத்து மோதல் வெடித்தது. “சொத்துக்குவிப்பு வழக்கில் ஊழல் செய்த காரணத் தால் தான் முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்”என்று ஜெயலலிதாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் விமர்சனம் அதிமுக கட்சிக் குள் பெரும் புயலை கிளப்பியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அண்ணாமலையை புரட்டி எடுத்த முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், “இனி பாஜகவுடன் கூட்டணியே கிடையாது” என்றும் ஆவேசத்துடன் அறிவித்தார். இந்த மோதல் வலுத்து கொண்டே சென்றது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றினர். “மாநிலத் தலைவர் என்ற பதவிக்கு தகுதி இல்லாத நபர் அண்ணாமலை. அதிமுக என்கிற சிங்கக் கூட்டத்தை பார்த்து அண்ணாமலை என்கிற ‘சிறு நரி ஊளை இடுகிறது’. தமிழ்நாட்டில் தனித்து நின்றால் நோட்டாவுக்கும் கீழ் தான் அண்ணாமலைக்கு ஓட்டு கிடைக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணாமலை ஒரு ‘வேஸ்ட் லக்கேஜ்” என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

எடப்பாடியின் வேஷம்

இவ்வளவு நடந்தும், மவுனம் காத்த அதிமுக பொ துச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறி வைத்து “அதிமுக-பாஜக கூட்டணி துண்டிக்கப்பட்டது. ஏன் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்பதே அறவே கிடையாது” வேஷம் போட்டார். இதைத் தொடர்ந்து, அதிமுகவும் பாஜகவும் தனித் தனியாக கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தன. இந்த இரண்டு கூட்டணிகளையும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி புதுச்சேரி மாநில மக்களும் அடியோடு துடைத்து எறிந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி களையும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி மொத்தமாக அள்ளியது. நாடு முழு வதும் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கொக்கரித்த பாஜகவுக்கு தமிழ்நாடு மக்கள் ‘கடிவாளம்’ போட்டனர்.

பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு: ‘ரெய்டு அரசியல்

இந்நிலையில், எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்று குட்டிக் கரணம் அடித்துக்கொண்டு வரும் பாஜக, தனது அடுத்த இலக் காக, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை குறி வைத்துள்ளது. இதற்காக ‘ரெய்டு’ என்ற அஸ்தி வாரத்தை தொடுத்தது. அதில் எடப்பாடியும், எஸ். பி.வேலுமணியும் மாட்டிக்கொண்டனர். ஏற்கனவே, தங்களது நிரந்தர அடிமைகளாகவே மாறிவிட்ட ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கூட்டணியில் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்க விட்டாலும் பரவா யில்லை; எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்பதுதான்  அமித்ஷாவின் திட்டம். தங்களது கட்சியின் அர்ஜெண்டாவை நிறைவேற்ற, எடப்பாடியின் பழனிச்சாமி உறவினர் ராமலிங்கம் வீட்டில் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோத னையை ஏவி விட்டார். தனது ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் பாய்ந்த சோதனையால் ஆடிப் போனார் எடப்பாடி. அடுத்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் பினாமி அம்மன் அர்ஜுனன் வீட்டில் இரண்டு நாட்கள் ரெய்டு நடத்தினர். அத்துடன் விசார ணைக்காக அழைத்துச் சென்றதும் அடங்கிப் போனார் எஸ்.பி. வேலுமணி.

எடப்பாடியின் திடீர் தில்லி பயணம்: மறைக்கப்பட்ட திட்டம்

இத்தகைய பின்னணியில், கட்சி நிர்வாகிகள் யாரி டமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று தில்லிக்கு பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் தில்லி சென்று சேர்வதற்குள், ரகசிய பயணம் குறித்த தகவலை சட்டப்பேரவையில் தேங்காய் உடைப்பது போல் உடைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் பதறிப் போன அதிமுக நிர்வாகிகள் எஸ்.பிவேலுமணி, கே.பி.முனுசாமி என வரிசையாக தில்லிக்கு படை யெடுத்தனர். திடீர் பயணம் குறித்து தில்லியில் செய்தியாளர் கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக தில்லி அலுவலகத்தை பார்வை யிட வந்ததாக” தெரிவித்தார். அப்போது அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் ஒரே போடு போட்டார். ஆனால் அன்றைய இரவே, அமிஷாவை தனியாக சந்தித்தார் எடப்பாடி. அவரைத் தொடர்ந்து, வேலுமணி அண்டு கோவும் அமிஷாவை சந்தித்தது. இந்த சந்திப்புகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கோரிக்கை வைப்பதற்காக மட்டுமே சந் தித்தேன். கூட்டணிக்காக அல்ல என்றார். குப்புற விழுந் தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நினைத்தார்.

எட்டு மணி நேரத்தில்  அம்பலமான அடிமை ஒப்பந்தம்

கெட்டிக்காரன் பொய் எட்டு நாளில் வெளிப்படும் என்பார்கள். ஆனால், எட்டு மணி நேரத்திற்குள் எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஒப்பந்தம் அம்ப லத்துக்கு வந்தது. “வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமு கவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்” என தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் அமித்ஷா.

அண்ணாமலைக்கு ஆப்பு

இந்த நிலையில், “பாஜக கூட்டணியில் சேர்வதற்கு ஒரே தடை அண்ணாமலை தான். அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமத்தால் பாஜகவுடன் அதிமுக கை கோர்க்க தயாராக உள்ளது” என்றும் “இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார்” என்றும் ஊடகங்கள் மூலம் செய்திகள் உலா விடப்பட்டன. பிறகு பாஜக தலைவர் தேர்தல் என்ற நாடகம் நடத் தப்பட்டது. அந்த நாடகத்தில் நயினார் நாகேந்திரன் மட்டுமே தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

குருமூர்த்தியுடன் சதித் திட்டம்

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களை சந்தித்து சதித் திட்டத்தை தீட்டினார். அந்த திட்டத்தின்படி ‘மாயமானாக’ நயினார் நாகேந்தி ரனை காட்டி, அதிமுகவைக் கைப்பற்றிய அமித்ஷா,  “அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அதிமுக தலைமையில் சந்திப்போம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம்” என்று கூறியிருக்கிறார்.

சொத்துக்களைப் பாதுகாக்க அடிமைச் சாசனம்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்த லில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் சிறு பான்மை மக்களின் கணிசமான வாக்குகளை இழந் தோம்; ஒட்டுமொத்த மக்களின் நன்மதிப்பையும் அதிமுக இழந்தது என்று அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சித் தலைமையிடம் புலம்பித் தள்ளினர். தங்க ளது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். ஆனால் அதே பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து இருப்பது தேசத்தின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்கா கவும் அல்ல. கோடி கோடியாய் சுருட்டிக் கொள்ளைய டித்து வைத்திருக்கும் தங்களது சொத்துக்களையும் பணத் தையும் பாதுகாத்துக் கொள்ள பாஜகவிடம் அடிமை சாச னம் எழுதிக் கொடுத்துள்ளனர் என்பதே உண்மை. மாநில உரிமைகளை பறிப்பதுடன் சிறுபான்மை மக் களை அந்நியப்படுத்தும் மதவெறிக் கும்பலிடம் தமிழ் நாட்டை அடகு வைப்பதற்காக பாஜகவுடன் அதிமுக கை கோர்த்து யார் மீது சவாரி செய்து வந்தா லும் எந்த உருவத்தில் வந்தாலும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டு மல்ல; அந்தக் கட்சியுடன் கூட்டணி சேரும் அத்தனை கட்சிகளையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்று திண்ணம்.