articles

img

‘கூட்டாளி’க்கு குழி பறித்த அமெரிக்க ஏகாதிபத்தியம்! 

‘கூட்டாளி’க்கு குழி பறித்த அமெரிக்க ஏகாதிபத்தியம்! 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இந்தியா மீதான 50% இறக்குமதி வரி விதிப்பு, வெறும் வணிக பிரச்சினை அல்ல. இது வணிகத்தை பொருளாதார ஆயுதமாக பயன்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய உத்தியாகும். அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் அளித்த “மேக் அமெரிக்கா கிரேட் அகைன் (MAGA )” என்ற வாக்குறுதியின் பின்னால், உலக நாடுகளை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஏகாதிபத்திய நோக்கம் மறைந்துள்ளது. டிரம்ப்பின் வரி விதிப்பு இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆகஸ்ட் 7ல் 25% “பரஸ்பர வரி” அமலுக்கு வந்தது. இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27ல் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான 25% தண்டனை வரி அமலாகும். மொத்தமாக 50% வரி விதிக்கப்படும், சில துறைகளில் 64% வரை போகும். அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை 2024ல் $1.83 டிரில்லியன் டாலராக (₹1,53,84,000 கோடி) உயர்ந்துள்ளது. அமெரிக்க மைய அரசின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP)-ஐ விட 130% அதிகமாக உள்ளது. வரி வசூல் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க டிரம்ப் முயற்சிக்கிறார். ஆனால் முக்கியமான விஷயம், சீனா, துருக்கியுடன் சேர்ந்து “தண்டனை” பெறும் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை இப்போதும் தொடர்கின்றன, ஆனால் அவை ‘தண்டிக்கப்படவில்லை’. 2 இந்திய ஏற்றுமதி துறைகளின் அழிவுகரமான தாக்கம் இந்தியாவின் நெசவுத் துறை அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் $10.3 பில்லியன் (₹86,520 கோடி) மதிப்பில் ஏற்றுமதி செய்கிறது. கோயம்புத்தூர், திருப்பூர், லூதியானா, பானிபட் உள்பட, நாட்டின் ஜவுளி நகரங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை செய்கின்றனர். பின்னல் ஆடைகள் மீது 63.9%, கைத்தறி ஆடைகள் மீது 60.3% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகப்பெரும் பாதிப்பு ஏற்படவுள்ளது. சூரத்தில் உள்ள 25 லட்சம் வைரத் தொழிலாளர்கள், மும்பையில் உள்ள நகை வியாபாரிகள் பெரும் இக்கட்டில் சிக்கியுள்ளனர். இந்தியா அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் $12 பில்லியன் (₹1,00,800 கோடி) மதிப்பில் ரத்தினம் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்கிறது. 52.1% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வைரங்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாது. வணிக அமைப்புகளின் கூக்குரல் இந்திய நெசவு தொழில் கூட்டமைப்பு (CITI) “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியுள்ளது. “ஆகஸ்ட் 6 அமெரிக்க வரி அறிவிப்பு இந்தியாவின் நெசவு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பின்னடைவாகும். இது அமெரிக்க சந்தையில் போட்டியிடும் எங்கள் திறனை கணிசமாக பலவீனப்படுத்தும்” என்று கூறியுள்ளது. ரத்தின-நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) தலைவர் கிரித் பன்சாலி, அனைத்து இந்திய பொருட்கள் மீதும் 50 சதவீத வரி விதிப்பு ஆழ்ந்த கவலை அளிக்கும் செயலாகும். இந்த நடவடிக்கை இந்தியாவின்

பொருளாதாரம் முழுவதும் தொலைநோக்கு விளைவுகளை கொண்டிருக்கும், முக்கியமான சப்ளை செயின்களை சீர்குலைத்து, ஏற்றுமதி யை நிறுத்தி, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அச்சுறுத்தும்” என்று எச்சரித்துள்ளார். வட மாநிலங்களில் பிரபலமான கமா  ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் கொலின் ஷா, “50 சதவீத  வரி எங்கள் ஏற்றுமதியாளர் களை 30-35 சதவீத போட்டி பின்னடைவில் வைக்கிறது. பல ஏற்றுமதி ஆர்டர்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிறு,  குறு, நடுத்தர துறைகளுக்கு, இந்த திடீர் செலவு அதிகரிப்பு கடும் தாக்குதல் ஆகும்” என்கிறார். கொல்கத்தா கடல்சார் ஏற்றுமதியாளர் மெகா மோடாவின் யோகேஷ் குப்தா, “ஈக்வடா ரிடமிருந்து பெரும் போட்டியை எதிர்கொண்டு  வருகிறோம், ஏனெனில் அதற்கு 15 சதவீத வரி மட்டுமே உள்ளது. இந்திய இறால் ஏற்கனவே 2.49 சதவீதம் மற்றும் 5.77 சதவீத எதிர்-மானிய வரியை எதிர்கொள்கிறது; 25 சதவீதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 7 முதல் வரி 33.26 சதவீத மாக இருக்கும்; மேலும் அபராத வரி 25 சத வீதம் என்றால், மொத்தம் 58.26 சதவீதம் வரியின் பிடியில் சிக்கும்” என்கிறார். 3 மோடி நண்பர்களுக்கு லாபம்; எளிய மக்களுக்கு சோகம் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தவறு என டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த எண்ணெய் பேரத்தால் யார் உண்மையில் பயன்பெறு கிறார்கள் என்பதையும் நாம் ஆராய வேண்டும். இந்தியா ரஷ்யாவிட மிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு  $7-8 பில்லியன் டாலர் (₹58,800-67,200 கோடி) சேமிக்கிறது என்று அரசு கூறுகிறது. ஜனவரி 1, 2025 முதல், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு தினமும் 5,00,000 பீப்பாய் எண்ணெய் அனுப்பப்படுகிறது, இது குஜராத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை களில் பதப்படுத்தப்படுகிறது. நீட்டிக்கும் விருப்பத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் கை யெழுத்தானது. இது இரு நாடுகளுக்கிடை யேயான மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்த மாக கருதப்படுகிறது. எரிசக்தி மற்றும் காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி மூலம் தோராயமாக 724 மில்லியன் யூரோ டாலர் (₹6,850 கோடி) சம்பாதித்தது. அமெரிக்கா, ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து 2 யூரோ டாலர் பில்லியன் (₹18,880 கோடி) மதிப்பிலான பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை இறக்குமதி செய்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது. மக்களுக்கு விலை  நிவாரணம் இல்லை 2023-24 இந்திய நிதியாண்டில் (ஏப்ரல்  1, 2023 - மார்ச் 31, 2024), ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் பேரம் சுமார் 140 பில்லியன் டாலர் (₹11,76,000 கோடி) ஆக வளர்ந்தது, இது உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி யதை விட 56 மடங்கு அதிகரிப்பு ஆகும். ரஷ்யாவின் எண்ணெய் விலை குறைப் பால் நடந்த இந்த பெரும் பேரத்தின்  லாபம் யாருக்குப் போகிறது? முக்கியமாக ரிலையன்ஸ் (அம்பானி), அதானி போன்ற பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனங்களுக்குதான். இந்த நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இன்று தள்ளுபடி விலை யில் எண்ணெய் வாங்கி, சர்வதேச விலையில் பெட்ரோல், டீசல் விற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ரஷ்ய எண்ணெய்யால் சேமிப்பு ஏற்பட்டாலும் உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. கலால் வரி, அரசு வரிகள் மூலம் மக்கள் அதிக விலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், சேமிப்பின் முக்கிய பயனாளி மோடி அரசின் முக்கிய ஆதரவாள ரான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்ஆகும்.  4 மோடி அரசின் அமெரிக்க சார்பு மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகள் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் ராணுவச் சூழ்ச்சிக் கூட்டணியில் தீவிரமாக பங்கேற்று வந்துள்ளது. குவாட் (Quad) கூட்டணி, ஆக்கஸ்  (AUKUS) கூட்டணிக்கு ஆதரவு, சீனா எதிர்ப்பு  நிலைப்பாடு என்று அமெரிக்க புவி-அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்து வந்துள்ளது. ஆனாலும் ‘கூட்டாளி’ என்றும் பாராமல், அமெ ரிக்க நிர்வாகம் இந்தியாவின் மீது பொருளாதார யுத்தத்தையே தொடுத்துவிட்டது. மோடி அரசு அமெரிக்க பெரும் நிறுவனங்க ளுக்கு சாமரம் வீசியே வந்துள்ளது. அமேசான், கூகுள், பேஸ்புக், ஆப்பிள்  (Amazon, Google, Facebook, Apple) போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்து கின்றன. இத்தகைய சார்பு நிலையால்தான் டிரம்ப்பின் மிரட்டலுக்கு மோடி அரசால் பயனுள்ள பதிலடி கொடுக்க முடியவில்லை. விவசாயிகள் பாதுகாப்பு -  வெற்று வார்த்தை ஜாலம் பிரதமர் மோடி, “விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்களின் நலனுக்காக என்ன விலை கொடுக்கவும் தயார்” என்று கூறியுள்ளார். ஆனால் இது வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே. அமெரிக்க ஏற்றுமதியில் இந்திய விவசாயம் 5% மட்டுமே பங்கு வகிக்கிறது. உண்மையான பாதிப்பு தொழில் துறைகளுக்குத்தான். அரசின் உடனடி பதில் நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் நிறுவனங்களின் நலனையே மையமாக வைத்து உள்ளன; சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் சதியைப் பற்றி எந்தக் கதையும் இல்லை. 5 பொருளாதார பேரழிவு - மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து ஜிடிபி வளர்ச்சியில் கூர்மையான வீழ்ச்சி: பல்வேறு பொருளாதார நிறுவனங்கள் இந்த  வரி விதிப்பின் தாக்கத்தை ஆய்வு செய்துள் ளன. ப்ளூம்பெர்க் எகானமிக்ஸ், மத்திய கால  அளவில் 1.1% மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இழப்பு இருக்கும் என்று மதிப்பிட்டுள் ளது. மார்கன் ஸ்டான்லி, 12 மாதங்கள் நீடித்தால் 0.8% வளர்ச்சி வீழும் என்று கூறுகிறது. இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் 6.5% வளர்ச்சி விகிதம் 5.5-6% ஆக குறையக்கூடும். வேலையிழப்பு நெருக்கடி: இந்த வரி விதிப்பால் நேரடியாக ஒரு கோடி தொழி லாளர்கள் பாதிக்கப்படுவார்கள். நெசவு துறை யில் 50 லட்சம், ரத்தின-நகை துறையில் 25 லட்சம், பொறியியல் துறையில் 15 லட்சம், மீன்பிடித் துறையில் 5 லட்சம், ரசாயன துறையில் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை யிழப்பை எதிர்கொள்வார்கள். 6 இந்தியா செய்ய  வேண்டியது என்ன? சந்தையை விரிவுபடுத்தல் - உடனடி தேவை: இந்தியா உடனடியாக தன் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்த வேண்டும். ஆசிய சந்தைகளில் (ஆசியான், மத்திய கிழக்கு) தற்போது 39.8% பங்கு வணிகம் உள்ளது. இதை 50% ஆக உயர்த்த வேண்டும். பிரிக்ஸ் பிளஸ்  (BRICS+) நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய சந்தைகளில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க வேண்டும். ரூபாய் வணிகத்தின் விரிவாக்கம், உள்நாட்டு சந்தை வலுப்படுத்தல், தொழில்நுட்ப சுதந்திரம், நிதி சுதந்திரம் ஆகியவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாடு: அதானி, அம்பானி போன்ற ஏகபோக நிறு வனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து பொருளா தாரத்தை விடுவிக்க வேண்டும். பெட்ரோலிய விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். ரஷ்ய எண்ணெய் பேரத்தால் கிடைக்கும் சேமிப்பை மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்பாக அளிக்கவேண்டும். வரி தாக்குதலால் பாதிக்கப்படும் தொழி லாளர்களுக்கு உடனடி உதவி வழங்க வேண்டும். வேலையிழக்கும் தொழிலாளர் களுக்கு மாற்று வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலையின்மை நிவா ரணம் ஆகியவற்றை வழங்க வேண்டும். சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடன், மானிய ஆதரவு, வரி விலக்கு ஆகியவற்றை வழங்க வேண்டும். சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் தேவை:  அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுபட்டு, சுதந்திரமான, அணிசேராத வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டும். அனைத்து நாடுகளுடனும் சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.  டிரம்ப்பின் இந்த பொருளாதார தாக்குதல் தெளிவான செய்தியை அனுப்புகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ராணுவ சூழ்ச்சிக் கூட்டணி வைத்துக்கொண்டு, இந்தியாவின் மக்களையும் பொருளாதார சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியாது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயி கள், சிறு வியாபாரிகள் அனைவரும் ஒன்றி ணைய வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு எதிராகவும், மோடி அரசின் சரணாகதி கொள்கைக்கு எதிராகவும் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.