வாக்குரிமை பறிப்பின் புதிய சூத்திரம்
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கும் மிகப் பெரும் மோசடி
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய விளம்பரத் தாக்குதல் கள், பாசாங்குத்தனம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சரியான உதாரண மாகும். வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்க ளின் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (Special Intensive Revision) தொடர்பான விளம் பரத்தின் வாசகங்கள், அனைத்து அரசி யல் கட்சிகளையும் கலந்தாலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவு என்று கூறு கிறது. இதுவரையிலும் அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. இன்றுவரையில் நாட்டில் எந்தவொரு தேர்தல் சீர்திருத்தம் என்றாலும், அனைத்து அரசியல் கட்சிக ளுடனும் கலந்தாலோசித்த பின்னர்தான் தேர்தல் ஆணையம் அவற்றை அமல் படுத்தியிருக்கிறது. அதேபோன்று தேர்தல் நடத்தை விதி (MCC-Model Code of Conduct)யும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன்தான் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிக்கு சட்டபூர்வமான கட்டுப்பாடு இல்லை என்றபோதிலும், அது இன்றுவரை செயல்பட்ட விதம், அவ்வப் போது ஏற்படும் சவால்களை அது சரியா கவே தீர்த்து வைத்திருக்கிறது.
முற்றிலும் முரணான விதத்தில்...
இதற்கு முற்றிலும் முரணான விதத்தில், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவற்றிற்கு எதையும் தெரி விக்காமல், அவற்றிற்கு ஒரு சிறிய குறிப்பு கூட பகிராமல், பீகாரில் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்வாறாக தேர்தல் ஆணையம், தான் என்ன செய்ய இருக்கிறது என்பதை அரசியல் கட்சிகளிடம் சொல்வதிலிருந்து வெகுதூரம் விலகிச்சென்றுவிட்டது. எனினும், பீகாரில் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) ஆரம்பித்திருக்கும் விதமே, இதன் இரட்டை முகத்தன்மையை வெளிப் படுத்திவிட்டது. இது மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. உண் மையில் இது திருத்தமே கிடையாது. மாறாக, புதிதாகவே தேர்தல் வாக்காளர் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கி றார்கள். சுதந்திர இந்தியாவில் ஜனநாய கத்தை நிறுவுவதற்கான அடிப்படை அணுகுமுறை, வயதுவந்தோர் அனைவ ருக்கும் வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாதிரியில் நங்கூரமிடப்பட்டது. முதல் தேர்தல் ஆணையர் இரண்டு அடிப்படை அளவுகோல்கள் மூலம் இதை நடை முறைப்படுத்தினார்: வாக்களிக்கும் உரிமை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்; வாக்காளர் பட்டியலை உரு வாக்கும் பொறுப்பு தனிப்பட்ட வாக்கா ளரிடம் அல்ல, மாறாக தேர்தல் ஆணை யத்திடம் உள்ளது. வயதுவந்தோர் அனை வருக்கும் வாக்குரிமையை அடைவ தற்கான வழிகாட்டுதலை வழங்கிய 326 ஆவது பிரிவு, அதை வெளிப்படையாகவே கூறியது.
அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறல்
குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பு ஒருபோதும் வாக்காளர் மீது திணிக்கப்பட்ட தில்லை. 326ஆவது பிரிவின் முழுமை யான ஆய்வு, அனைவருக்கும் வாக்க ளிக்கும் உரிமை என்ற தன்மைக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டது, குடியுரி மைக்கு அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை யாகும். இது அவ்வப்போது புதுப்பிப்பதை உறுதி செய்கிறது. தேர்தல் ஆணையம் புனிதமானது என்று ஏற்றுக்கொள்ளும் 2003 திருத்தத்தில் கூட, குடியுரிமைச் சான்று வாக்காளர்களிடமிருந்து வெளிப் படையாகக் கோரப்படவில்லை. தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிட்டுள்ள அறிக்கைகள் இந்த உண்மையை நிறுவு கின்றன. ஆனால் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள ‘சிறப்பு தீவிர திருத்தம்’, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த அடிப்ப டைக் கொள்கைக்கு மாறாக, வாக்காளர் கள் மீது குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பை சுமத்தியிருக்கிறது.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
ஜூலை 27ஆம் தேதி வெளியிடப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பின்படி, மொத்தம் 7 கோடியே 24 லட்சம் கணக்கெடுப்பு படி வங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ தொடங்கப்பட்ட நாளான 2025 ஜூன் 24 அன்று மாநில வாக்காளர் பட்டியலில் இருந்த 7 கோடி யே 89 லட்சம் பெயர்களுடன் ஒப்பிடும் போது, இந்தப் பெயர்கள் மட்டுமே வாக்கா ளர் பட்டியலில் சேர்க்கப்படும். மீதமுள்ள வர்கள் - சுமார் 65 லட்சம் பேர் - வாக்கா ளர் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. இவர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டனர், 36 லட்சம் பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள், 7 லட்சம் பேர் பல இடங்களில் பதிவு செய்தி ருக்கின்றனர் அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக வாக்காளராகப் பதிவு செய்யத் தயாராயில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
அசாதாரணமான வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சி
இந்த எண்ணிக்கை மிகவும் கவலைய ளிக்கிறது. 2020 சட்டமன்றத் தேர்தலில் 7 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது 2025 ஆம் ஆண்டில் பீகாரின் வாக்காளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். கடந்த கால பதிவுகளைப் பார்க்கும்போது, இது மிகவும் அசாதாரணமானது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு நபர் ஒரு மாநிலத்திலிருந்து ‘நிரந்தரமாக இடம் பெயர்ந்துவிட்டார்’ என்ற முடிவுக்கு வருவ தற்கு முன்பு, ஒவ்வொரு வழக்கிலும் முழு மையான விசாரணை நடத்தப்பட வேண்டா மா? 37 லட்சம் பேர் சம்பந்தப்பட்ட அத்த கைய விசாரணையை 30 நாட்களில் எவ்வாறு நடத்த முடியும்? பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அவர்களில் 90 சதவீதம் பேர் படிவங்களைச் சமர்ப்பிப்பதைப் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை என்பதையும், அவர்களுக்கு ‘சிறப்பு தீவிர திருத்தம்’ குறித்து எதுவுமே தெரியாது என்பதையும் காட்டுகிறது. 2025 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட சுருக்கத் திருத்தத்தின்போது இறந்த வர் குறித்து இந்த அளவிற்குக் குறிப்பி டப்படவில்லை. வாக்காளர் பட்டியல், சட்ட மன்றத் தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வுடன், இப்போதுள்ள வடிவங்களில் பரந்த அளவிற்கு வேறுபாடுகள் இருப்பது தெளிவாகும்.
வாக்காளர்-மக்கள்தொகை விகித ஆய்வு
பீகாரில் வாக்காளர் பட்டியலின் ஒப்பீட்டுத் தரத்தை மதிப்பிடுவதற்காக, நன்கு அறியப்பட்ட தேர்தல் கணிப்பியல் ஆய்வாளரான யோகேந்திர யாதவ், வாக்காளர்-மக்கள்தொகை விகிதத்தை உருவாக்கியுள்ளார். ஜூலை மாத தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலை வர்களின் குழுவிடம், பீகார் பட்டியலில் உள்ள 20 சதவீத பெயர்கள் போலியா னவை என்றும் அவற்றைக் குறைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியதைத் தொடர்ந்து இது அவசிய மானது. எனினும் இவருடைய செயல் முறை முடிவதற்கு முன்பே தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்திருப்பது, அந்த முடிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா கவும், அகநிலை சார்ந்ததாகவும் தெரி கிறது. தேசிய மக்கள்தொகை ஆணையம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தால் வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழு வின் அறிக்கையில் (2019) உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையி லான கணிப்புகள் (மாநில வாரியாக, ஆண்டு வாரியாக, வயது வாரியாக) மக்கள் தொகை தரவுகளுக்கான சிறந்த ஆதாரங்க ளாகும். இந்த புள்ளிவிவரங்கள் இந்திய அரசாங்கத்தாலும், தேர்தல் ஆணை யத்தாலும் 2025 ஜனவரியில் பயன்படுத்தப் பட்டன. மாநில வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுள்ள வாக்கா ளர்களின் எண்ணிக்கையை தொடர்பு டைய வயதினரால் வகுத்தால் வாக்காளர் விகிதம் கிடைக்கும். 100 சதவீத மதிப்பெண் என்பது சரியான பொருத்தத்திற்கான சிறந்த சூழ்நிலை யைக் குறிக்கிறது. 2024ஆம் ஆண்டில், அகில இந்திய வாக்காளர்-மக்கள் தொகை விகிதம் 99 சதவீதமாக இருந்தது, இது வெறும் 1 சதவீத பற்றாக்குறையைக் குறிக்கிறது. பீகாரில் வாக்காளர்-மக்கள் தொகை விகிதம் 97 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியை விட சற்று குறைவு. இதனால், அதன் வாக்காளர் பட்டியல் உயர்த்தப்படவில்லை, மாறாக சற்று குறைக்கப்பட்டது.
முன்னறிவிப்பு இல்லாத அதிர்ச்சி
ஜூன் 24 அன்று, ‘சிறப்பு தீவிர திருத்தம்’ அறிவிக்கப்பட்ட நாளில், பீகாரில் வாக்காளர்-மக்கள்தொகை விகிதம் 97 சதவீதமாக இருந்தது. ‘சிறப்பு தீவிர திருத்தம்’ தொடர்பான செயல்முறை குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகா ரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டபடி, வாக்காளர் பட்டியலை இதற்கு மேலும் வெட்டிச் சுருக்கவில்லை என்றா லும் கூட, கடந்த ஐந்து தேர்தல்களுடன் ஒப்பிடும்போது பீகாரில் இதுவே ஒரு திடீர் மற்றும் கூர்மையான வீழ்ச்சியா கும். மேலும், இது மற்ற அனைத்து மாநி லங்களையும் விட கணிசமாகக் குறை வாக இருக்கும்.
இலக்கு மாற்றல் மற்றும் ஏமாற்று வித்தைகள்
கணக்கெடுப்பை முடிப்பதற்கு முன்பு, விண்ணப்பத்தை நகலாக சமர்ப்பித்து, 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேவையை தள்ளுபடி செய்ததன் மூலம், தேர்தல் ஆணையம் தனது இலக்கை பாதியி லேயே மாற்றியது. இருப்பினும், தேவைப் பட்டால், விண்ணப்பப் படிவங்களின் நகல்களையும், நீக்குதலுக்கான விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்குமா என்பது தெரியவில்லை.
ஊடக வெளிப்பாடுகள்
இதுவரை இந்த செயல்முறை மிகவும் மோசமான முறையில் மேற்கொள்ளப் பட்டுள்ளதை ஊடகங்கள் விரிவாகவே வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக் கின்றன. தேர்தல் ஆணையம் புதிதாக எவ ரையும் சேர்த்திடவில்லை. இது அபத்த மானது. வெளிப்படையாக இது ‘மிகப் பெரிய அளவில் வாக்காளர்களை நீக்கும்’ (mass exclusion) நடவடிக்கை யாகும். உச்சநீதிமன்றம் வலியுறுத்திய படி ‘மிகப்பெரிய அளவில் வாக்காளர்களை சேர்க்கும்’ (‘mass inclusion’) நட வடிக்கை அல்ல.
வாக்குரிமைப் போராட்டத்தின் தொடக்கம்
எனவே, பீகாரில் அரசமைப்புச்சட்ட உரிமையான ‘வாக்களிக்கும் உரிமையை’ (‘right to vote’) பாதுகாப்பதற்கான போ ராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் இதர பகுதிகளுக்கும், ‘சிறப்பு தீவிர திருத் தத்தை’ தேர்தல் ஆணையம் வலியுறுத்து மானால், இதற்கெதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்திடும். ஆகஸ்ட் 5, 2025,
தமிழில்: ச.வீரமணி