articles

டிரம்ப்பின் வர்த்தகப் போரும் கோவை தொழில்துறையின் இழப்பும் - அ.ர.பாபு

டிரம்ப்பின் வர்த்தகப் போரும் கோவை தொழில்துறையின் இழப்பும்

“மாஸ்கோவில் மழை பெய் தால், மதுரையில் குடை பிடிப்பார்கள்” என்று கம்யூனிஸ்ட்டுகளை ஏகடியம் பேசிய வர்களின் கூற்றை, இன்றைய உலகமயமாக் கப்பட்ட பொருளாதாரம் உண்மையாக்கி யுள்ளது. உலக அரசியல் மற்றும் பொரு ளாதார நிகழ்வுகளின் தாக்கம், ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் அடங்குவ தில்லை என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்த கூடுதல் வரி மற்றும் அபராதம் மீண்டும் நிரூபித்துள்ளது.  இந்த நடவடிக்கை, “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவின் ஏற்றுமதிப் பொ ருட்கள் மீது 25% கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, ஜவுளி, தங்கநகை, இன்ஜி னியரிங், மென்பொருள் போன்ற பல துறை களில் ஏற்றுமதியில் கோவை மாவட்டம் முன்னணியில் இருப்பதால், டிரம்ப்பின் அறிவிப்பு இங்குள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்களையும், லட்சக்கணக்கான தொழிலா ளர்களையும் பெரும் தாக்கத்துக்கு உள் ளாக்கும் என தொழிற்துறையினர் அஞ்சு கின்றனர். கோவையின்  தொழில்துறை அடிப்படை கோவை மற்றும் திருப்பூர் ஜவுளித் தொழிலில் முன்னணியில் இருக்கிறது. பருத்தி ஆடைகள், நூல், பின்னலாடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொ ருட்கள் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, டி-ஷர்ட்கள், பருத்தி ஆடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், மற்றும் திரைச்சீலை கள் அதிகம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் 500 கோடி டாலர் மதிப்பில் ஜவுளி பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால், இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களின் பங்களிப்பு சுமார் 30 சதவிகி தத்திற்கும் அதிகமாகும். சுமார் 2 பில்லியன்  டாலர் மதிப்பிலான பொருட்கள் கோவை யில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இதேபோன்று, இந்தியாவில் 75 சத விகிதம் வெட் கிரைண்டர்கள் கோவையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெட் கிரைண்டரின் தாயகன் கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படும் அளவுக்கு, மிக முக்கியத்து வம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. இந்த வெட் கிரைண்டர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய உணவகங்கள் மற்றும் வீடுகளுக்கு அதிக அளவுக்கு ஏற்றுமதி செய் யப்படுகின்றன. இதேபோன்று, இந்தியா வின் மொத்த பம்ப்கள் உற்பத்தியில் 50 சத விகிதம், கோயம்புத்தூரிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை விவசாயம் மற்றும் தொழில்துறைக்காக அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே போன்று, ஆட்டோமொபைல் மற்றும் இன்ஜினியரிங் தொழில்களுக்கான உதிரி பாகங்கள் பெரிதளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படு கின்றன. ஆண்டுக்கு 1 லட்சம் வெட் கிரைண்டர் களில், சுமார் 75 சதவிகிதம் கோயம்புத்தூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 2800 கோடி ரூபாய். இதில் ஒரு பகுதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது. இதேபோன்று, பம்ப் செட் வகை யில், இந்தியாவின் 50 சதவிகிதம் கோயம் புத்தூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ஆண்டுக்கு 100-150 மில்லி யன் டாலராக இருக்கலாம், இதிலும் ஒரு பகுதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய் யப்படுகிறது. கோவையில் டைடல் பார்க் உள்ளிட்ட மற்ற தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் மென்பொருள் ஏற்றுமதி அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2009-10இல் மென்பொருள் ஏற்றுமதி ரூ.700 கோடியாக இருந்தது, இதில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு செல்கிறது என்கிறார்கள் ஐடி துறை வல்லுநர்கள். மேற்கு வங்க மாநிலத்தை அடுத்து, நுட்பமான அழகியல் அம்சங்களோடு, தங்க நகை ஆபரணங்கள் கோவையில் தயாரிக் கப்படுகின்றன. நவீன இயந்திரங்களின் வருகை தங்கநகை தொழிலாளர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கினாலும், நுட்பமான வடிவமைப்பில் இத்தொழிலாளர்களின் அபார உழைப்பு, இன்னமும், ஆபரண உற் பத்தியைத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது. கோயம்புத்தூரில் இருந்து தங்க நகைகள், குறிப்பாக ஹால்மார்க் செய்யப்பட்டவை, அமெரிக்காவுக்கு ஏற்று மதி செய்யப்படுகின்றன. இதை அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அதிகம் விரும்பு கின்றனர். வரி உயர்வின் தாக்கம் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகு திகள் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி ஆடைகள், பின்னலாடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கு தற்போது 6-9% வரி உள்ளது. இதில் 25% கூடுதல் வரி சேர்க்கப்படும்போது, மொத்த வரி 31-34% ஆக உயரும். கூடுதல் அபராதம் இதை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக இந்தியப் பொருட்க ளின் விலை உயர்வைத் தவிர்க்க, அமெ ரிக்கர்கள் ஆர்டர்களைக் குறைப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். வியட்நாம் (20% வரி), இந்தோனேசியா (19%) மற்றும் பிலிப் பைன்ஸ் (19%) ஆகிய நாடுகளுக்கு குறை வான வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய ஜவுளி பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும். கோயம்புத்தூரில் உள்ள ஆயிரக்கணக் கான ஜவுளி தொழிலாளர்கள் மற்றும் சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும். உற்பத்தி குறையும், இது கடுமையான வேலை இழப்பு மற்றும் வருமான இழப்புக்கு வழி வகுக்கும். 2024இல் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அமெரிக்காவுக்கு சுமார் 400 கோடி - 500 கோடி டாலராக இருந்தது, இதில் கோயம்புத்தூர்-திருப்பூர் பகுதியின் பங்களிப்பு 20-30% (சுமார் 100 கோடி முதல் 150 கோடி டாலர்). அமெரிக்காவின் வரி உயர்வு அறிவிப்பால் இந்த ஏற்றுமதி பாதியா கக் குறையும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஜவுளித்துறையில் மட்டும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 5 முதல் 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற னர். இதேபோன்று, வெட் கிரைண்டர் மற்றும் பம்ப் ஆகியவை அமெரிக்காவுக்கு சுமார் 30 சதவிகிதம் வரை ஏற்றுமதி செய் யப்பட்ட நிலையில், இது சுமார் 10 சதவிகி தத்துக்குள் சுருங்கும் என தொழிற்துறை யினர் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோன்று தங்க ஆபரணத்தின் நுகர் வும் பெருமளவில் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கநகை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்க ளுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கோவை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தி நிறுவ னங்கள் உள்ளன. இத்துறையில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்று கின்றனர். “ஆசியாவின் பம்ப் நகரம்” என்று  அழைக்கப்படும் கோவையில், சுமார் 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் பம்ப் மற்றும் மோட்டார் உற்பத்தியில் ஈடுபடு கின்றன. இத்தொழிலில் மட்டும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற னர். கோவை மாவட்டத்தின் ஜவுளி, வெட் கிரைண்டர், பம்ப் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் மட்டும் சுமார் 28,000 நிறு வனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலா ளர்கள் பணியாற்றுகின்றனர். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, இந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது நேரடியாகத் தாக் கத்தை ஏற்படுத்தும். உற்பத்தி குறைவு, வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். இது கோவை யின் மொத்த பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என தொழிற் துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த புதிய சவாலை எதிர்கொள்ள, ஒன்றிய மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. கை வலிக்க ஜால்ரா அடிக்கும் கோஷ்டிகளிடம் வேறு எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்பது உண்மைதான் என்றாலும், தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றி ணைந்த போராட்டம் அவசியமாகிறது.

கோயம்புத்தூரில் உள்ள ஆயிரக்கணக் கான ஜவுளி தொழிலாளர்கள் மற்றும் சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும். உற்பத்தி குறையும், இது கடுமையான வேலை இழப்பு மற்றும் வருமான இழப்புக்கு வழி வகுக்கும். 2024இல் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அமெரிக்காவுக்கு சுமார் 400 கோடி 500 கோடி டாலராக இருந்தது, இதில் கோயம்புத்தூர்-திருப்பூர் பகுதியின் பங்களிப்பு 20-30% (சுமார் 100 கோடி முதல் 150 கோடி டாலர்). அமெரிக்காவின் வரி உயர்வு அறிவிப்பால் இந்த ஏற்றுமதி பாதியாகக் குறையும் என அச்சம் ஏற்பட்டுள்ளது