மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவிற்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தை இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலப் போராட்டத்திற்குப்பின் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அக்டோபர் 1 அன்று இரவு 8.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69.
தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் தன் இளம் வயதிலேயே மாணவர் இயக்கத்தில் இணைந்து, மாண வர் தலைவராக முத்திரை பதித்தார். அவர் 1973 முதல் 1979 வரையிலும் இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலச் செயலாளராக இருந்தார். அப்போது மாநிலத்தில் இந்திய மாணவர் சங்கத்தை ஒரு சக்தி மிக்க மாணவர் அமைப்பாக மாற்றுவதற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திட்டார். பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் ஊக்கத்துடன் செயல்பட்டார். கேரள விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார். தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் கட்சி ஸ்தாபனத்தைக் கட்டுவதில் ஆரம்பத்திலிருந்தே அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினார். அவர் 1988 இல் கட்சியின் கேரள மாநிலக்குழுவுக்கும், 1995 இல் மாநிலச் செயற்குழுவுக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார். அவர், மார்க்சிஸ்ட் கட்சியின் வலுவான தலமாக விளங்கும் கண்ணூர் மாவட்டத்தின் செய லாளராக 1990 முதல் 1995 வரை செயலாற்றினார். அங்கே கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காக ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட தாக்குதல்களையெல்லாம் முறி யடித்து, கட்சியை உருக்குபோன்று உருவாக்கினார். தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் 2002இல் கட்சியின் 17ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழுவுக்கும், பின்னர் 2008இல் நடை பெற்ற 19ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன், 2015-2022 காலத்தில் இடையே கட்சியின் மாநிலச் செயலாள ராகப் பணியாற்றினார். இந்த சமயத்தில்தான் கட்சி உறுதியான முறையில் விரிவுபடுத்தப்பட்டது. தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் தலச்சேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும், 2006 முதல் 2011 வரையிலும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது திறமைமிகு நிர்வாகியாக வும் செயல்பட்டார். தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் 1975 முதல் 1977 வரையிலான அவசர நிலைக் காலத்தில் ‘மிசா’ கைதியாக 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந் தார். மதவெறி சக்திகளுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியவர். தலச்சேரியில் 1971இல் நடைபெற்ற மதவெறியர்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்றார். பின்னர் மாநிலத்தில் மதவெறியர்களால் எங்கெல்லாம் சீர்குலைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அங்கெல்லாம் சென்று தலைமையேற்று அவற்றை முறியடித்திடுவார்.
தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் பொதுக் கூட்டங்களில் நிகரற்ற முறையில் பேசும் ஆற்றல் கொண்டவர். கட்சியின் அரசியல் மற்றும் தத்து வார்த்த நிலைப்பாடுகளை விளக்குவதில் மிகவும் சிறந்து விளங்கினார். அவர், கட்சியின் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடுகளை உறுதி யாகப் பின்பற்றி வந்த அதே சமயத்தில், அனைத்து அர சியல் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவையும் பேணி வந்தார். தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன், அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளில் காட்டிவந்த அசாத்திய திறமைகளும், அவர் கட்சியின் முன்னணி ஊழியர்களிடமும், கட்சி ஆதரவாளர்களிடமும் காட்டி வந்த பாசமும் நேசமிக்க அணுகுமுறையும் என்றென்றும் போற்றப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அவருடைய நினைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறது. அவருடைய வாழ்க்கைத் துணைவியார், மகன்கள் மற்றும் குடும்ப த்தின் இதர உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.