articles

img

சமூக மாற்றத்திற்கான பாதையில் கம்யூனிஸ்டுகள்

சமூக மாற்றத்திற்கான பாதையில் கம்யூனிஸ்டுகள்

இடதுசாரிகளின் ஆதரவை மட்டுமே நம்பி ஒரு ஆட்சி அமைந்த நிலைமை இந்திய வரலாற்றில் முதல் தடவையாக 2009இல் ஏற்பட்டது. அந்த ஆட்சி தான் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி. பெருமுதலாளித்துவ ஆதரவு காங்கிரஸ் தலைமை யிலான அணியில் சிபிஐ(எம்) இடம் பெற வாய்ப் பில்லை. வெளியிலிருந்து இந்த அரசை ஆதரிப்பது என்றாலும் நிபந்தனையற்ற ஆதரவாக ஒரு தொழி லாளி வர்க்கக் கட்சியின் ஆதரவு இருக்க முடியாது.

அதே சமயம் வகுப்புவாத இந்துத்துவா பிஜேபி இந்நிலைமையில் ஆதாயம் பெறுவதையும் அனுமதிக்க முடியாது.  குறைந்தபட்ச செயல்திட்டம் இந்நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்த சிபிஐ(எம்) பிற இடதுசாரிக் கட்சிகளுடன் கலந்து பேசி தெளிவான ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது மதச்சார்பின்மை, தேசஒற்றுமை, கூட்டாட்சி கோட் பாடுகளை பாதுகாத்துக் கொண்டே தொழிலாளர் கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்களின் நலன்க ளை முன்னிறுத்தி சாத்தியமான ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க வேண்டுமென்றும் அந்த திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு வழங்க வேண்டும் என்றும் ஒரு ஆலோசனை இறுதிப்படுத் தப்பட்டது. இந்த ஆலோசனை காங்கிரஸ் கட்சிக்கும்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் தெரிவிக் கப்பட்டது.  இந்த ஆலோசனையை ஏற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உரு வாக்கியது. இதில் கிராமப்புற உழைப்பாளி மக்க ளுக்கான குறைந்தபட்ச வேலை உறுதி சட்டம் (REòí), நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரின் நலன்களை பாதுகாக்கும் சில அம்சங்கள், தகவல் பெறும் உரிமைச்சட்டம், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கேந்திரமான ராணுவ கூட்டணிக்கு செல்லாமை உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

முழுதிருப்தி அளிக்காவிட்டாலும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ள சில சாதகமான அம்சங்களை கணக்கிலெடுத்து அத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அந்த அரசில் இடம் பெறாமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்தன.  இடதுசாரிக் கட்சிகளின் பாத்திரம் கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தின் மூலம் கிரா மப்புற ஏழை உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச 100 நாள் வேலை கிடைப்பது, மக்களுக்கு அரசி டமிருந்து அனைத்து தகவல்களையும் பெறும் உரிமை உள்பட பல ஜனநாயக அம்சங்கள் போன்ற வை அமலானது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற மே. இதற்கான அடிப்படை சாதனை சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகளையே சாரும். இருப்பி னும் இந்த அரசின் பொருளாதாரக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. தாராளமயக் கொள்கைகள் தங்கு தடையின்றி அமலாகின. தொழிலாளர்கள், விவ சாயிகளின் நலன்கள் இதனால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.

மத்திய அரசின் இத்தகைய கொள்கைக்கு எதிராக சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வலுமிக்க போராட்டங்க ளை இக்காலத்தில் நடத்தின. இந்த போராட்டங்க ளின் எண்ணிக்கையும், வீரியமும் குறிப்பிடத்தக்க தாக இருந்தன. பிஜேபியின் வகுப்புவாத நடவ டிக்கைகளுக்கும், சிறுபான்மை மக்கள் மீதான அதன் தாக்குதலுக்கும் எதிராகவும் இக்காலத்தில் உறுதி மிக்க பாத்திரத்தை இடதுசாரிக் கட்சிகள் வகித்தன.  அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்திய அரசின் உறவுகள் நெருக்கமாக இருந்தது மட்டு மின்றி ராணுவம் உள்பட கேந்திர துறைகளில்  ஒத்துழைப்பதும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை களும் அமெரிக்காவுடன் துவங்கின. சிபிஐ(எம்) பல முறை மத்திய அரசை இப்பிரச்சனையில் எச்சரித்த போது அணுசக்தி ஒப்பந்தம் உருவாக வாய்ப் பில்லை என நம்மிடம் தெரிவித்து விட்டு, ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடரவே செய்தனர். இறுதியாக அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிப்படுத்தப்பட்டு கையெ ழுத்து இடப்படும் நிலைமைக்கு சென்றது.

 இந்நிலைமையை ஆய்வு செய்த சிபிஐ(எம்), ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இப்போக்கை அனுமதிக்க முடியாது என முடிவுக்கு வந்து இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து பேசி ஆதரவை வாபஸ் பெற தீர்மானித்தது. வாபஸ் பெறவும் செய்தது. எனினும் காங்கிரஸ் கட்சி ஒரு சில சந்தர்ப்ப வாத கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் ஆதரவை ரகசியமாக பேசி பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிலைநாட்டிக் கொண்டது. இடதுசாரிக் கட்சிக ளுக்கும், மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறிச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சுயநல சக்திகளின் ஆதரவை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.  2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இடது சாரிகள் வற்புறுத்தி நிறைவேறிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம், தகவல் பெறும் உரிமைச்சட்டம் உள்ளிட்ட வேறு சில சாதக அம்சங்களை விரிவாக சுட்டிக்காட்டியும், பிரச்சாரம் செய்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று அதிகாரத்தில் அமர்ந்தது. எனினும் கொள்கை அடிப்படையில் எந்த மாற்ற மும் இல்லை. கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளி மக்களின் துயரங்கள் அதிகரித்தன. மறுபுறம் சங்பரி வார் பங்களிப்போடு நடத்தப்படும் பாஜகவின் மதக் கலவரங்களையும், சிறுபான்மையினர் மீதான தாக்கு தலையும் இந்த அரசால் தடுக்க முடியவில்லை.

 இந்துத்துவா - கார்ப்பரேட் கும்பலின் ஆட்சி இப்பின்னணியில் 2014இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. பிஜேபி தலைமை யிலான தேசிய ஐனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்திய அரசு அதிகாரத்தில் அமர்ந்தது. நரேந்திரமோடி பிரதமராக்கப்பட்டார். இந்திய வர லாற்றிலேயே மிக மோசமான அரசியல், பொரு ளாதார, சமூக அம்சங்களை வெளிப்படுத்திய ஆட்சி யின் துவக்கமாக இது அமைந்தது. இந்துத்துவா வகுப்புவாத - கார்ப்பரேட் ஆதரவுக் கும்பலின் எதேச்சதிகார ஆட்சியாக இது உருவெடுத்தது.   அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ போன்ற துறைகளை பாஜக தன் சொந்த நலன் களை பாதுகாக்க தங்கு தடையின்றி பயன்படுத்து வதை காண்கிறோம். பாஜகவிற்கு எதிரான கட்சி கள் இந்த அமைப்புகளால் வேட்டையாடப்படு கின்றன. தேர்தல் ஆணையமும் இதன் கையசைவு க்கு செயல்படும் அமைப்பாக மாறி வருகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படு கின்றன.

தேர்தல் பத்திரங்களின் மூலம் ஏகபோக முதலாளிகளிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களி டமும் பல்லாயிரம் கோடி நிதி திரட்டி தேர்தலுக்கு செலவிட்டது. பல தேர்தல் முறைகேடுகள் அரங்கே றின. இத்தகைய அத்துமீறல்கள் மூலம் 2019 தேர்த லிலும் அதிகாரத்தை கைப்பற்றியதோடு நாடாளு மன்றத்தில் தனி பெரும்பான்மையும் பெற்றது.  2019க்கு பிந்தைய ஆட்சியும், முந்தைய பாஜக ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருந்தது. மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி கோட்பாடுகள் கைவிடப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனத் தின் அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. ஒரு நாடு, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்ற சீரழிவுப் பாதை யில் அரசை நடத்திச் செல்கிறது. சிறுபான்மை மக்களின் அச்சம் அதிகரித்து மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவதை கண்கூடாகக் காண்கி றோம். நாடாளுமன்ற நிகழ்வுகள் வெறும் சம்பிரதாய மானதாக மாறியுள்ளது.

முறையான விவாதங்கள் இன்றி அடிப்படையான சட்டத்திருத்தங்கள் நிறை வேற்றப்படுகின்றன.  பாஜக அரசின் அத்துமீறல்கள் - ஜனநாயக மரபுகள் மீறப்பட்ட பின்னணியில் 2024ஆம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலில் முதல் பெரும் கட்சியாக மக்களவையில் உருவெடுத்துள்ளது. 10 ஆண்டு கால இதன் அத்துமீறல்கள், எதேச்சதிகார - வகுப்பு வாதப் போக்குகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் மதச்சார்பற்ற “இந்தியா” அணியின் மூலம் அம்ப லப்பட்டதால் இத்தேர்தலில் பாஜக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் 65 இடங்களை இழந்து தனி பெரும்பான்மையை பறிகொடுத்தது. இருப்பினும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு போன்ற சந்தர்ப்பவாதிகளின் தலைமையிலான இயக்கங்க ளின் ஆதரவோடு 3ஆவது முறையாக தொடர்ந்து மத்திய அதிகாரத்தை தக்க வைத்துள்ளது. தேர்த லில் பின்னடைவைச் சந்தித்த போதும் தற்போதைய  இதன் பாதையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் தேர்தலுக்கு பிறகு ஒரு நாடு - ஒரு தேர்தல் என்ற முழக்கத்தை எழுப்பி கூட்டாட்சி முறையை மட்டு மல்ல, மாநில அரசுகளை தேர்வு செய்யும் மக்களின் வாக்கு உரிமையையும் பறிக்க முனைகிறது. எனவே தான் இந்துத்துவா - கார்ப்பரேட் ஆதரவு கும்பலின் எதேச்சதிகார வகுப்புவாத பாஜக ஆட்சியை நவ பாசிச குணாம்சம் கொண்டது என சிபிஐ(எம்) 24 ஆவது கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானம் (நகல்)  வரையறுத்துள்ளது.  

மதச்சார்பற்ற “இந்தியா” அணி இத்தகைய பாஜக ஆட்சியையும், கட்சியையும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வீழ்த்துவ தற்கான பெரும் முயற்சிகள் தற்போதைய உடனடித் தேவையாக முன்னுக்கு வந்துள்ளன. “இந்தியா” அணி உருவாகி இருப்பதும் மதச்சார்பற்ற சக்திகள் பரவலாக ஒருங்கிணைந்து 2024 பொது தேர்தலை சந்தித்ததும் ஆறுதலான அம்சங்கள். “இந்தியா” அணி நாடாளுமன்ற மக்களவையில் 234 இடங்களை பெற்று முத்திரை பதித்துள்ளது. பாஜக ஆட்சியின் எதேச்சதிகாரச் செயல்பாட்டிற்கு நிச்சயமாக “இந்தியா” அணி ஒரு எச்சரிக்கையாகும்.  மதச்சார்பற்ற “இந்தியா” அணியின் ஒற்றுமையை சேதமடையாமல் பாதுகாப்பதும், பலப்படுத்துவதும் தேசநலனை - தேசஒற்றுமையை பாதுகாக்க மிக அவ சியமாகும்.

இதற்கான ஒத்துழைப்பை சிபிஐ(எம்) மட்டுமல்ல, அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் நல்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  தாராளமயக்  கொள்கைகளுக்கு எதிராக எனினும் இன்னொரு புறம் தாராளமய பொரு ளாதாரக் கொள்கைகள் மக்களின் நலன்களுக்கு பெரும் கேடாய் அமைந்துள்ளன. இந்திய பொருளா தாரத்தின் கேந்திரமாக அமைந்த பொதுத்துறை நிறுவனங்கள் இக்கொள்கைகளால் படிப்படியாக தனியார்மயமாகி வருகின்றன. இதனால் நாட்டின் சுயசார்புத் தன்மைக்கும் உழைப்பாளி மக்களின் நலன்களுக்கும் பேராபத்து உருவாகியுள்ளது. காங்கிரஸ் உள்பட மதச்சார்பற்ற பல முதலா ளித்துவக் கட்சிகள் தாங்கள் ஆட்சி நடத்தும் மாநி லங்களில் தாராளமயக் கொள்கைகளை தங்கு தடையின்றி அமலாக்கி வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி வருகிறது என்பதே கடந்த கால அனுபவம். பாஜக இதே கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிற போதிலும் மக்களின் இந்த அதிருப்தியை சாதுரியமாக தனக்குச் சாதக மாகப் பயன்படுத்துவதை பல்வேறு மாநிலங்களில் கண்கூடாகக் காண்கிறோம். எதிர்காலச் செயல் பாட்டிற்கு இந்த அனுபவங்களை கணக்கில் கொள்வது அவசியம். இடதுசாரி இயக்க பின்னடைவு சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளை பொறுத்தவரை வகுப்புவாதத்திற்கு எதிராக மட்டு மல்ல தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கும் எதிராக உறுதியாகப் போராடி வந்துள்ளன என்பது இவற்றின் இதன் கடந்த கால வரலாறாகும்.

எனினும் சமீபகால தேர்தல்களில் இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது ஒரு வருந்தத்தக்க நிலையாகும். உலகளவில் சோசலிச சக்திகளின் பின்னடைவு - வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி, இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படு த்தியுள்ளது என்பது உண்மைதான். இது போக இந்தியாவில் இடதுசாரி சக்திகளின் பின்னடைவுக்கு காரணமான பிரத்யேக அம்சங்களையும் தனியான முறையில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி  உள்ளிட்ட அரசியல் சாசன அம்சங்களை பாதுகாக்க வும் எதேச்சதிகார - வகுப்புவாத சங்பரிவார் பாஜக கும்பலை தனிமைப்படுத்தி வீழ்த்தவும் மதச்சார் பற்ற முதலாளித்துவக் கட்சிகளுடன் இடதுசாரி இயக்கங்கள் ஒத்துழைப்பது இந்தியாவில் ஒப்புக் கொள்ளப்பட்டதும் தேவையானதுமான ஒரு அரசி யல் வியூகமாகும். எனினும் இதனை அமல்படுத்தும் போது சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிக ளின் தனித் தன்மையும், தொழிலாளி வர்க்க புரட்சிகர குணாம்சங்களும், சுயேச்சையான செயல்பாடுக ளும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதும் அத்தியாவசியத் தேவைகளாகும். இவற்றை பாதுகாத்து செயல்படுத்தியதன் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றி களை ஈட்டியது என்பது அனுபவமாகும். இதனை மனதில் தாங்கி நிகழ்கால, எதிர்கால செயல்பாடு களை இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும். சிபிஐ(எம்) 24ஆவது அகில இந்திய மாநாடு இதற்கான அரசியல் - ஸ்தாபன உத்திகளை விவாதித்து உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.  சோசலிசமே மாற்று  இந்தியா உள்பட உலகின் எல்லா முதலாளித்துவ நாடுகளிலுள்ள உழைப்பாளி மக்களின் துயரங்க ளுக்கு தீர்வு காண உண்மையான மாற்று சோசலி சமே. மார்க்சிசம் - லெனினிசம் அடிப்படையில் இந்திய சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளை ஆய்வு செய்து இந்திய நிலை மைகளுக்கு ஏற்ற ஒரு மாற்று செயல்திட்டத்தை சிபிஐ(எம்) உருவாக்கியுள்ளது. அதுவே மக்கள் ஜன நாயகம். இத்திட்டத்தின் உள்ளடக்கம் சரியானதே என்பதை இந்திய விடுதலைக்கு பிறகான 77 ஆண்டு கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

இப்பாதை யில் இந்திய மக்களின் உடனடி பிரச்சனைகளான உணவு, வீடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் உத்தியாக இடதுசாரி ஜனநாயக அணி அமைந்துள்ளது. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் சோதனைகள் - ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதும் மக்க ளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் பல சாதனை களை இவை நிகழ்த்தியுள்ளன. இன்றைக்கும் கேரள மாடல் பல அம்சங்களிலும் ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.  சோசலிசப் பாதையுடன் இணைத்து மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திட்டம் குறித்த விரிவான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் நடத்த வேண்டும். கூடவே இவை நிறைவேறு வதற்கான வர்க்க, வெகுஜன போராட்டங்களையும் வலுவாக முன்னெடுக்க வேண்டும். இப்பாதையில் நடைபோடுவதன் மூலம் இடதுசாரி இயக்கங்களின் முன்னேற்றம் மட்டுமல்ல, படிப்படியாக சோசலிச சமூக மாற்றமும் சாத்தியமே.