செங்கொடி இயக்கத்தின் முன்னோடி சி.கோவிந்தராஜன்
இன்று கடலூர், கள்ளகுறிச்சி, விழுப் புரம் ஆகிய மூன்று மாவட்டங்க ளும், புதுவை மாநிலமும் ஒன்றாய் இருந்த தென்னார்க்காடு பகுதியின் செங்கொடி இயக்க புதல்வனாய், ஸ்தாபக தலைவனாய் இருந்தவர்தான் தோழர் சி.கோவிந்தராஜன். மகாத்மா காந்தி பங்கேற்ற கூட்டத்தில் தேசபக்தி பாடலை பாடிய குழந்தையாய் காங்கிரஸ் இயக்கத்தில் அறிமுகமானவர், இளமைக்காலம் முதற்கொண்டே காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் காங்கி ரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து தீவிரமாகப் பணி யாற்றினார். 1938 ஆம் ஆண்டு முதல் தான் மரணம் அடையும் 2008 வரை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தேச விடுதலை இயக்கத்திலும், தொழிலாளர் இயக்கத்திலும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் அவர் ஆற்றிய பங்கும் பணியும் மகத்தானதாகும்.
1964 ஆம் ஆண்டு உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட ஸ்தாபக தலைவராக திகழ்ந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள பெருமாத்தூரில் பிறந்த தோழர் சி.கோவிந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வின் உறுப்பினராக நீண்ட காலம் செயலாற்றி னார். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 1967, 1977, 1989 ஆகிய மூன்று முறை தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக நெல்லிக் குப்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பாக பணிபுரிந்தார். 1986 ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவரா கவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சேவை செய்தார்.
தோழர் சி.கோவிந்தராஜன் நாட்டிற்கா கவும், மக்களுக்காகவும் பெரும் தியாகம் செய்த தியாகசீலர். அவரது பொதுவாழ்வில் எட்டரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், ஐந்தரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையின் இன்னல்களையும் உறு தியுடன் சந்தித்து வெற்றி கண்டார். சிறை வாழ்க்கையில் பல கொடுமைகளை அனுப வித்தார். அவருடைய வாழ்க்கை முழுவ திலும், அவர் ஒரு போராளியாகவே இருந்து, எதிர்ப்புகளை சமாளித்து இயக்கப் பணி களை ஆற்றியுள்ளார். மக்கள் இயக்கத் திற்காக போலீஸ் காவலிலிருந்து ஓடும் ரயிலிலிருந்து அவர் தப்பிய நிகழ்ச்சி வீர மிக்கத் தனி காவியமாகும். தென்னார்க்காடு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை பலப்படுத்துவதில் அவருடைய விடாப்பிடியான முயற்சிகள் வியக்கவைப்பன. அத்துடன் அந்த மாவட்டத் தில் விவசாயிகள் இயக்கத்தை உருவாக்கு வதிலும் அவர் தொடர்ந்து பங்காற்றினார். நெல்லிக்குப்பத்தில் உள்ள பாரி சக்கரை ஆலை தொழிலாளர் சங்கம் 1922 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரித்த போராடிய வரலாறு இந்த சங்கத்திற்கு உண்டு. இந்த சங்கம் 1937 ஆம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெற்றது.
இந்த சங்கத்தின் செயலாளராக 1943 ஆம் ஆண்டு சி.கோவிந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப் பட்டதும் அவர் செய்த முதல் காரியம் சர்க்கரை ஆலைக்குள் குடிநீருக்காக சாதிய அடிப்படையில் வைக்கப்பட்ட இரண்டு வகை பானைகளை உடைத்ததுதான். தென்னார்க்காடு மாவட்ட மராமத்து தொழிலாளர் சங்கம், கடலூர் படகு தொழி லாளர் சங்கம், கடலூர் துறைமுகத் தொழிலாளர் சங்கம், தென்னார்க்காடு மாவட்ட எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் தொழி லாளர் சங்கம், தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் என பல சங்கங்களை உருவாக்கி அதற்கு தலைவராக இருந்து வழிகாட்டினார்.
1967 ஆம் ஆண்டு எண்ணூர் அனல் மின் நிலையத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முதல் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டு 11 ஆண்டுகாலம் செயற்பட்ட அதன் பின்னர் தோழர் வி.பி.சிந்தன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெய்வேலி தொழிற் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் இவரும் ஒருவர். 1974 ஆம் ஆண்டு துவக்கப் பட்ட சர்க்கரை தொழிலாளர் சம்மேள னத்தின் தலைவராக தோழர் ஆர்.உமா நாத்தும் பொதுச் செயலாளராக தோழர் சி.கோ விந்தராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்னர். 1943 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் தமிழகத்திலிருந்து சென்ற எட்டு பிரதிநிதிகள் ஒருவராக சி.கோவிந்தராஜன் கலந்து கொண்டார். தோழர்கள் பி.ராமமூர்த்தி, சி. எஸ்.சுப்பிரமணியம், மோகன் குமார மங்கலம், கே.ரமணி உள்ளிட்டோர் அதில் அடங்குவர். 1948 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இரண்டாவது அகில இந்திய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1964 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் தமிழ் மாநில கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளியேறிய 29 மாநில கவுன்சின் உறுப்பினர்களில் தோழர் சி. கோவிந்தராஜனும் ஒருவர். 1968 ஆம் ஆண்டு நடந்த வெண்மணி கொடூரத்தின் போது சம்பவ இடத்திற்கு சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சி.கோவிந்த ராஜன். 1980 ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நிர்வாகம் அங்கு நடந்த போராட்ட உக்கிரத்தால் போட்டி சங்கத்தை உருவாக்கியது. அதை சேர்ந்தவர்கள் தொ ழிலாளர்களை திரட்டி வெற்றி பெற முடியாது என தெரிந்து தோழர் சி.கோவிந்தராஜனை கொலை செய்ய முடிவு செய்தனர்.
ஒரு நாள் தொழிற்சங்க கூட்டம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டார். தலையில் வெட்டுப்பட்டும் குடல் சரிந்தும் மரணத்துடன் போராடி மீண்டும் வந்து செங்கொடியை உயர்த்திப் பிடித்தார். தனது இறுதிக் காலத்தில் சர்க்கரை நோயால் ஒரு காலை இழந்தாலும் அவரது உழைப்பும் இயக்க பங்கேற்பும் குறைந்ததில்லை. தோழர் கோவிந்தராஜனும் தோழர் ஷாஜாதியும் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சி யின் போது ஏற்பட்ட முக்கிய சமூக சீர்திருத்த உள்ளடக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையா கும். மதங்களுக்கு அப்பாற்பட்ட திருமணம் அது. தோழர் ஷாஜாதியும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இளமைக் காலம் முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்தவர். தோழர் சி.ஜியின் வாழ்வும் பணியும் குறித்த முழுமையான சித்திரத்தை தோழர் என்.ராம கிருஷ்ணன் புத்தகமாக தொகுத்துள்ளார். இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை அது.