articles

img

“ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவது இளைஞர்களை ஏமாற்றும் செயல்”

“ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவது இளைஞர்களை ஏமாற்றும் செயல்”

“ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்க ளை நிரப்பாமல், ஓய்வுபெற்ற ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தி ருப்பது இந்திய ரயில்வேயின் பாதுகாப்பையும் இளை ஞர்களின் வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது,” என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரகீம் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டா வது அமர்வில் மாநிலங்களவையில் திங்கள் அன்று மதியம் ரயில்வே மானியத்தின் மீது நடைபெற்ற விவா தத்தில் பங்கேற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. ரகீம், மூன்று முக்கிய பிரச்சனைகளை அவை யின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

“நாட்டின் உயிர்நாடி”  - மூன்று முக்கிய பிரச்சனைகள்

“நாட்டின் உயிர்நாடியாக ரயில்வே விளங்கி வரு கிறது என்பதை நாம் அறிவோம். இது தொடர்பாக மூன்று முக்கியமான பிரச்சனைகள் மீது அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்,” என்று தொடங்கிய ரகீம், “முதலாவதாக பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இரண்டாவது கேரள மாநிலத்தை ரயில்வே அமைச்ச கம் புறக்கணித்து வருவது. மூன்றாவது இந்திய ரயில்வே ஆட்களை எடுக்காமல் இருப்பது தொ டர்பாக இந்திய இளைஞர்கள் சார்பாக பிரச்சனையை எழுப்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

20,000க்கும் மேற்பட்ட லோகோ பைலட் பணியிடங்கள் காலி

பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனை கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை  விளக்கிய ரகீம், “நான் எழுப்பியுள்ள முதலாவது பிரச்ச னையான பாதுகாப்பு என்பதும், மூன்றாவது பிரச்ச னையான வேலைக்கு ஆள் எடுக்காமல் இருப்பது என்பதும் ஆழமாகப் பின்னப்பட்டவைகளாகும்,” என்று தெரிவித்தார். “ரயில்வேயில் மொத்தம் உள்ள லோகோ பைலட்டு களின் எண்ணிக்கை என்பது 1 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். இதில் இப்போது சுமார் 20 ஆயிரம் பணியிடங் கள் காலியாக இருக்கின்றன. இதன் விளைவாக பணியி லிருக்கும் லோகோ பைலட்டுகளின் பணி நேரம் எவ்வளவு என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு வாராந்திர விடுப்பும் வழங்கப்படுவ தில்லை. இது ‘மனிதாபிமானமற்ற கூடுதல் பணி ’யாகும்,” என்று சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பை உறுதி செய்ய  9 மணி நேர வேலை அவசியம்

உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளை நிறை வேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ரகீம், “லோகோ பைலட்டுகளின் பணிநேரத்தை ஒன்பது மணி நேரமாகக் குறைத்திட வேண்டும் என்று இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். லோகோ பைலட்டுகள் மிகைநேரம் வேலை செய்வதால் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டி ருக்கிறார்கள். இது இந்திய ரயில்வேயின் பாதுகாப்பை யும் கடுமையாகப் பாதிக்கிறது,” என்று எச்சரித்தார்.

“அக்டோபர் 15 - இந்திய ரயில்வேயின் கருப்பு நாள்”

ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் முடிவை கடுமையாக விமர்சித்த ரகீம், “2024 அக்டோபர் 15 அன்று இந்திய ரயில்வேயின் வர லாற்றில் ஒரு கருப்பு தினமாகும். அன்றைய தினம் ரயில்வே அமைச்சகம் காலிப் பணியிடங்களை நிரப்பிட ஓய்வுபெற்ற ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உத்தரவு பிறப்பித்தது,” என்று குறிப் பிட்டார். “பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை யின்றி வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் கள். அவர்களுக்கு வேலை அளிக்காமல் ஓய்வு பெற்ற வர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய  உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஓய்வு பெற்றவர்கள் நியமனம் செய்யப்படுவது கடும் பாதிப்புகளை ஏற் படுத்திடும். இது ரயில்வேயின் பாதுகாப்பையும் பாதித்திடும். இந்த முடிவைக் கைவிட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

5 ஆண்டுகளில் 361 ரயில்வே தொழிலாளர்கள் உயிரிழப்பு

ரயில்வே தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்த ரகீம், “ரயில்வேயில் பணிபுரியும் டிராக்மேன்கள் மற்றும் கீமேன்கள் போன்ற ரயில்வே தொழிலாளர்களின் நிலையைப் பாருங்கள், அவர்கள்  மிகவும் அரிதானவர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவற்றில் பணியாற்றிவந்த ரயில்வே தொழிலாளர்க ளில் 361 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று நான் கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித் துள்ளார்,” என்று அதிர்ச்சித் தகவலை வெளிப் படுத்தினார். “இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கான நவீன பாதுகாப்பு அமைப்புமுறையை அமல்படுத்திட மோடி அரசாங்கம் ஆர்வம் காட்டாமல் இருக்கிறது,” என்று குற்றம் சாட்டினார்.

கேரளாவை புறக்கணிக்கும் ரயில்வே அமைச்சகம்

கேரளாவை புறக்கணிக்கும் ரயில்வே அமைச்சகம் கேரள மாநிலத்தின் ரயில்வே சேவைகள் குறித்து பேசிய ரகீம், “கேரளத்தில் ரயில் பயணிகள் அவதிக் குள்ளாவது குறித்து சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. கேரள ரயில்களில் பயணிகள் கூட்டம் நாளு க்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரயில்க ளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டார். “இதனைச் செய்வதற்குப் பதிலாக இந்திய ரயில்வே பாசஞ்சர் ரயில்களை எல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்று மாற்றி பயணிகளைச் சுரண்டிக்கொண் டிருக்கிறது. ரயில்வேக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.