articles

img

சங்கரய்யா வழியில் அணி வகுக்க சபதமேற்போம்...

பொதுவுடமைப் போராளி யும், போற்றுதலுக் குரியவருமான ஐயா என்.சங்கரய்யா அவர்களுக்கு இன்று 100வது பிறந்த நாள். மாபெரும் போராளி யான ஐயா என்.சங்கரய்யாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி றேன். சுதந்திரப் போராட்ட வீரரும், பொது வுடமை இயக்கத்தின் முதுபெரும் தலை வரும் என்.சங்கரய்யா அவர்கள், தனது பள்ளிப்பருவத்திலேயே புறநானூறு, நற்றிணை. குறுந்தொகை உள்ளிட்ட சங்க கால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். மகாகவி பாரதியார் கவிதைகளின் வாயிலாக விடுதலை வேட்கை கொண்ட ஐயா என்.சங்கரய்யா அவர்கள், மாணவப் பருவத்திலேயே பல போராட்டங்களிலும் பங்கேற்றார். ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை  எதிர்த்து கல்லூரி மாணவர் கள் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால், பல இன்னல்களுக்குள்ளானாலும் தனது விடுதலை உணர்வை சிறிதும் கூட அவர் கைவிடவில்லை. வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டத் தலைவர்களை விடு தலை செய்யக்கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திய ஐயா என். சங்கரய்யா, காவல்துறையின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை என போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டார்.

சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம். ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலை யாகி வெளியே வந்த பிறகு, பொது வாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார். பெரியார், சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் எழுத்துக்களைப் படித்து, முற்போக்குச் சிந்தனையை வளர்த்து கொண்ட என்.சங்க ரய்யா அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது அதன் முக்கி யத் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி சட்டமன்ற உறுப்பினரான அவர், அடுத்தடுத்து நடைபெற்ற 1977, 1980 தேர்தலிலும் வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழர்களின் நலனுக்கா கவும், உழைக்கும் மக்களின் உரிமைக ளுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி னார்.

அதுமட்டுமின்றி, அன்றைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் திகழ்ந்தார் என்.சங்கரய்யா. 1952 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் பேச அனுமதி கிடையாது. ஆங்கி லம் மட்டும்தான் பேச முடியும். தமிழிலும் பேசலாம் என்கிற நிலை 6,7 வருடங்களுக்கு பின்னர்தான் வந்தது. இதற்காக பங்காற்றிய வர்களில் தவிர்க்க முடியாதவர் என்.சங்க ரய்யா அவர்கள். தொழிலாளர் நல னுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிக ளிலும் துடிப்புடன் ஈடுபட்டார். பல்வேறு இதழ்களில் தனது கருத்துக்களைப் கட்டுரைகளாக எழுதி வந்தார். அன்றைய சென்னை மாகாணத்தின் முதல மைச்சராக இருந்தவர் ராஜாஜி அவர்கள், 1938ல் உயர்நிலைப்பள்ளிகளில் இந்தி யைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதா வைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழ் அறிஞர்க ளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதைய டுத்து மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் முக்கியப் பங்காற்றினார் என்.சங்கரய்யா. 

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு மக்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய், விறகு. சாதாரணத் துணி போன்றவை கிடைக்காத நிலையிருந்தது. இச்சூழலில் நாட்டு மக்களை திரட்டி கம்யூனிஸ்ட் கட்சி  பல்வேறு போராட்டங்களை முன்னெ டுத்தது. அப்போது ஆடல், பாடல், இலக்கி யம் உள்ளிட்ட நிகழ்வுகள் வாயிலாக, மக்களை ஒன்று திரட்டினார். நாட்டு விடு தலைக்காக, மக்களின் வாழ்வாதார உரிமை சார்ந்த போராட்டங்களுக்காக எட்டு ஆண்டுகள் சிறையிலும் மூன்றாண்டு கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார் சங்கரய்யா.

கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் விடுதலைக்காக, ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் - உழைக்கும் பாட் டாளிகளின் உரிமைக்காக தொடர்ந்து போராடியும், குரல் கொடுத்தும் வரும் போற்றுதலுக்குரிய ஐயா என்.சங்கரய்யா அவர்கள் இன்று 100வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். அவர் நூற்றாண்டை கடந்தும் நீடுழி வாழ வேண்டும் என்றும் என்னை போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் எனவும் வேண்டி, மரியாதைக்குரிய என்.சங்கரய்யா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வாழ்த்துக் களை தெரிவித்துக்  கொள்கிறேன். சாதிய வாதமும், மதவாதமும், பாசிச சக்திகளும் தலைதூக்கி வரும் இச்சூழலில், அதனை தத்துவம் ரீதியாகவும், அரசியல்ரீதியா கவும் முறியடிக்க என். சங்கரய்யா வழியில் அணி வகுக்க சபதம் ஏற்போம்.