articles

img

வேலை நேர நீடிப்பு வாழ்க்கையைப் பறித்த வளர்ச்சி - எஸ்.கண்ணன்

வேலை நேர நீடிப்பு  வாழ்க்கையைப் பறித்த வளர்ச்சி - எஸ்.கண்ணன்

முதலாளித்துவம், தொழிலாளர்களுடைய உழைப்பு நேரத்தை மிகச் சாதுரியமாக, நீடித்து பயன்படுத்திக் கொள்கிறது. இதன் காரண மாக மூலதனத்திற்கும், உழைப்பிற்குமான முரண் பாடும், போராட்டமும் நீடித்ததாக உள்ளது என்கி றார் காரல் மார்க்ஸ். தொழிலாளர்களின் உழைப்பு நேரம் முதலாளிகளின் மூலதனக் குவிப்பிற்கான மூல காரணமாக இருப்பதால், முதலாளிக்கு உழைப்பு நேரம் மிக முக்கியமானதாக உள்ளது. தொழிலா ளிக்கு தன்னுடைய உழைப்பு நேரம் அதிகமாவது, உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்துவதால், தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிப்பதும், நடை பெறுகிறது. எனவே முதலாளித்துவத்திற்கான விஷக் கருத்துக்களை, தீவிரமாக சிலர் முன் வைக்கின்றனர். மே தினத்திற்கான வரலாறு மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்படுவதன் மூலமே, இந்த விஷக் கருத்துக் களை முறியடிக்க முடியும்.

நாராயண மூர்த்தியும்  எஸ். என். சுப்பிரமணியமும்

இரண்டு பெயர்கள், இரண்டு நபர்கள் என்ற அளவில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. முதலா ளித்துவத்தின் தீராப் பசியாக விளங்கும் தொழிலா ளர்களின், உழைப்பு நேரத்தை நீடித்து கொள்ளை லாபத்திற்காகத் துடிக்கும் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார். அவருக்கு ஒருபடி மேலே சென்ற லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன முதன்மை செயல் அதிகாரி எஸ். என். சுப்பிரமணியம் வாரம் 90 மணி நேரம் உழைப்பது தேவை என்ற கருத்தை வெளிப்படுத்தினார். பிரதமர் மோடி இவர்களைத் தொடர்ந்து துபாய் நாட்டில் பேசுகிற போது 10 முதல் 11 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் எனப் பேசினார். முதலாளிகளின் தேவை உணர்ந்து, முதலாளிகளை அதிக உழைப்பு நேரத்தை முன் மொழிந்தார். தற்போது தொழிலாளர் சட்டங்களி லும் திருத்தங்களை மேற்கொள்ள வழிவகுத்துள்ளார்.  இன்போசிஸ் நிறுவனர் திடீரென இந்த கருத்தை முன்வைக்கவில்லை. பாஜக வேட்பாளராக, இந்திய குடியரசு தலைவர் பொறுப்பிற்கு பரிசீலனை செய்யப் பட்டார். அவரின் சேவை இன்போசிஸ் கடந்து முதலாளி வர்க்கத்திற்கு பலன் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏதோ ஒரு அசவுகரியம் காரணமாகவும், தனது பசுத் தோல் போர்த்திய புலி வேடத்தை பாது காத்துக் கொள்வதற்காகவும், பாஜக வேறு நபரை நிறுத்தியது. ஆனாலும் தனது வர்க்க நலனை வேறு ஒரு நபர் மூலம் அமலாக்கும் திறன் முதலாளித்து வத்திற்கு உண்டு என்பதால், நாராயண மூர்த்தியை பேச வைத்து அகம் மகிழ்கிறது முதலாளித்துவம்.  

இன்போசிஸ்...

நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். 3,17,240 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணி புரிகின்றனர். கடந்த 2023 ஐ விடவும், 25,994 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் வரு வாய் 2023ஆம் ஆண்டில் 1,56,520 கோடி ரூபாயிலிருந்து, 2024ஆம் ஆண்டில், 1,59,960 கோடியாக உயர்ந்துள் ளது. ஒருபுறம் ஆட்குறைப்பு, மறுபுறம் அதிகரிக்கும் லாபம் என்ற முறையில் இன்போசிஸ் நீடித்து வளர, ஊழியர்கள் செய்யும் வேலை நேரம் முக்கிய பங்களிப்பு செய்கிறது. பொதுவாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை நேரம் 10 முதல் 12 மணி நேரம் பராமரிக்கப்படுகிறது. அந்த ஊழியர்களின் மனநிலை  வாரம் இரு நாள்கள் விடுப்பு என்பதில், திருப்தி கொள்வ தாக உள்ளது. இதை இன்போசிஸ் நிறுவனம் கூடுத லாக பயன்படுத்திக் கொண்டது. இதை விடவும் முக்கியமானது, கோவிட் காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்வது என்ற நடைமுறை, கோவிட் பெரும் தொற்று, பொது முடக்கத்தை அறி விக்க காரணமாக இருந்தாலும், சேவைகளும், உற் பத்தியும் குறையவில்லை. மாறாக அதிகரித்தது. குறிப்பாக லாபக் குவிப்பை பெரும் நிறுவனங்க ளுக்கு அதிகப்படுத்தியதைக் காண முடிந்தது. இன் போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யக் கூறியதன் மூலம், 2020ம் ஆண்டில் மட்டும் 22.7 சதவீதம் கூடுதல் லாபம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அலுவலகம் சென்றால் 10 முதல் 12 மணி நேரம்தான், வீட்டிலேயே இருந்து பணி புரிந்ததால், 12 முதல் 14 மணி நேரம் ஊழியர்கள் வேலை வாங்கப்பட்டதால், ஏற்பட்ட உயர்வு இந்த லாபம் ஆகும்.  

லார்சன் அண்ட் டூப்ரோ

லார்சன் அண்ட் டூப்ரோ என்ற எல்அண்ட் டி நிறு வனம் கட்டுமானம், பேப்ரிகேசன் மற்றும் மென்பொ ருள் உற்பத்தியில் பிரம்மாண்ட முதலீடுகளையும் வேலைவாய்ப்பையும் கொண்டிருக்கக் கூடிய நிறு வனம் ஆகும். கோவிட் காலத்தில் மந்தமாக இருந்த உற்பத்தி, 2021இல் எஸ். என். சுப்பிரமணியம் தனது தலைமை செயல் அதிகாரி பொறுப்பு எடுத்த பின்னணி யில், பெரும் லாபக் குவிப்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக கடந்த நிதி ஆண்டில், தகவல் தொழில் நுட்பத் துறையில், எல்அண்ட் டி நிறுவனம் 9497 கோடி ரூபாய் லாபத்தை மேம்படுத்தி இருக்கிறது. ஒட்டு மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 1,90,000 என உயர்ந்திருக்கிறது.  மேற்படி இரு நிறுவன விவரங்களும், சொல்லும் செய்தி ஒன்று தான். நிறுவனத்தின் லாபத்தை ஆட்குறைப்பு செய்து, தொழிலாளர்களின் வேலை நேர உயர்வு மூலம் உயர்த்துவது. மற்றொன்று குறைவான கூலி பெறுகிற நிரந்தரமற்ற காண்ட்ராக்ட் உள்ளிட்ட பல பெயர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமும் அவர்களின் உழைப்பு நேரத்தை அதிகப்படுத்து வதன் மூலமும், இந்த கூடுதல் லாபத்தை அடைந்தி ருக்கிறது.  

வேலை நேரம் நீடிப்பும்  வார விடுப்பின் மீதான தாக்குதலும்

ஒவ்வொரு நாளும் உழைப்பு நேரத்தை அதிகப் படுத்துவது மட்டுமல்ல. வார விடுப்பு நாள்களையும் பறித்துக் கொள்ள புதிய திட்டங்கள் உருவாக்கப்படு கின்றன. 12 மணிநேரம் கொண்ட வேலைநாள் மூலம், 4 நாள்கள் வேலை நாள்களாகவும், வாரம் மூன்று நாள்கள் விடுப்பும் வழங்க முதலாளித்துவம் சம்மதிப்ப தாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. சி.ஐ.டி.யு தொழிற் சங்கம் வாரம் 5 நாள்கள் வேலை, தினம் 7 மணி நேரம் வேலை, வாரம் இரு நாள்கள் விடுமுறை என வலி யுறுத்தியது. உழைப்பு நேரத்தை அதிகப் படுத்த வேண்டும் என்ற கொடிய வார்த்தைகளுக்கு அதிர்ச்சி கொள்ளாதவர்கள், தொழிற்சங்கத்தின் கோரிக்கை களை கண்டு அதிர்ந்தார்கள். ஏனென்றால் மூலதனத் தின் மூச்சு, உழைப்பு நேரத்தில் மையம் கொண் டுள்ளது.  தொழிலாளர்களின் உண்மை ஊதியம் உயராத நிலையில், வருமானப் பற்றாக்குறையால் தொழிலா ளர் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. நிறுவனங்க ளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சொமேட்டா, ஸ்விகி, போன்ற உணவு விநியோக வேலைகளிலும், ரேபிடோ போன்ற இருசக்கர வாகன ஓட்டிகளாகவும், தான் செய்து கொண்டிருக்கும் தற்போதைய வேலைக் கும், கூடுதலாக வேலை செய்து வருகின்றனர். ஒரு தொழிலாளி தனது தேவையை பூர்த்தி செய்ய இரண்டு வேலை, மூன்று வேலைகளில் ஈடுபடும் நிலை உள்ளது. 4 நாள்கள் வேலை, 12 மணி நேரம் வேலை நேரம் எனத் தீர்மானித்தால், குடும்பத் தேவைகளுக் காக, தொழிலாளி பல பணிகளை செய்யக் கூடிய கட்டா யத்திற்கு ஆளாவார். உண்மை ஊதியம் உயர உத்தர வாதம் இல்லை. மார்க்ஸ் குறிப்பிட்ட கூலி கொடுக்கும் முதலாளிக்கு அளிக்க வேண்டிய, அவசிய உழைப் பிற்கான கூலியும் உயரப் போவதில்லை. முதலா ளித்துவத்தின் கருணை மூன்று நாள்கள் விடுப்பு என  ஊடகங்களை அலற விட்டு, குளிர் காயும் வேலைக ளில் தீவிரமாக ஈடுபடும் அபாயம் உள்ளது.

 செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் என்ன செய்கின்றன?

50க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தேடுதல் இயந்திரங்கள் உருவாகி உள்ளன. டீப் சீக் என்ற நுண்ணறிவு இயந்திரம் சீனாவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலான் மஸ்க் அறிமுகம் செய் துள்ள XAI, துவக்கத்தில் 20 பில்லியன் டாலரில் இருந்து 120 பில்லியன் டாலர் (1,72,000 கோடி ரூபாய்) துவங்கி 10,32,000 கோடி ரூபாய் அளவிற்கு விரைவான வளர்ச்சியை உருவாக்கும் என்கின்றனர். அதாவது மனித உழைப்பை விடவும் கூடுதலான உற்பத்தியையும், லாபத்தையும் அள்ளிக் குவிக்க பயன்பட இருக்கிறது.  செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் உற்பத்தி யில் பயன்படுத்தப்படும் நிலையில், சிஐடியு தொ ழிற்சங்கம் முன் வைத்த, வாரம் 5 நாள்கள், தினம் 7 மணி நேரம் என்ற வேலை நாள், வேலை நேரம் குறித்த கோரிக்கையை அமலாக்குவதன் மூலம் தான், ஆட்குறைப்பையும், வேலையின்மையையும் கட்டுப் படுத்த முடியும். தொழில் நுட்பங்களை கண்டறியும், தொழிலாளர்களும், தொழில் நுட்ப வல்லுனர்களும், அதன் பலனை அனுபவிப்பதில்லை. மாறாக கார்ப்ப ரேட் நிறுவனங்களும், அதன் பங்காளிகளும் அனு பவிக்கின்றனர். மார்க்ஸ் அந்நியமாதல் குறித்தும் தனது கோட்பாட்டில் பதிவு செய்துள்ளார். தொழிலா ளர்கள் தங்கள் உற்பத்தியில் இருந்தும், பிற தொழி லாளர்களின் கூட்டு உழைப்பில் இருந்தும் விலக்கிக் கொள்கின்றனர். முதலாளிக்கு சொந்தம் தனது உற்பத்தி என்று துண்டித்துக் கொள்ளும் உணர்வில் உள்ளனர். மாறாக தன்னை ஒரு வேலை செய்யும் இயந்திரம் போன்ற உணர்வுடன் செயல்படுவதற்கு தொழிலாளி வளர்க்கப்படுகிறார். அதை விடவும், போட்டி காரணமாக பிற தொழிலாளர்களின் வேலைத் தன்மை, பல்வேறு வடிவங்களில் இன்று இருக்கும் காண்ட்ராக்ட் போன்ற வடிவங்கள் ஒரு வருக்கு ஒருவரை பிரித்து வைக்கும் நிலையை உரு வாக்குகிறது என மார்க்ஸ் கூறியவை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.  இவை அனைத்தையும் பயன்படுத்துகிற கார்ப்ப ரேட் நிறுவனங்கள் தனது லாபத்தையும், மேலும் லாபம் என்ற வேட்கையையும் அதிகப்படுத்திக் கொள்கிறது.

மே தினத்தின் தூண்டுதல்

பொதுவாக தொழிலாளர்கள் கொண்டாடும் மே தினம் நடைமுறையில் உள்ளது. 8 மணி நேர உழைப்பு,  8 மணி நேர சமூக உழைப்பு, 8 மணி நேர ஓய்வு என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடிய தொழிலா ளர்களே, தொழிலாளி வர்க்க வழிகாட்டிகளாக உள்ள னர். 138 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகர தொழிலாளர்களின் போராட்டம் மட்டு மல்ல. அதற்கும் முன் பல பத்து ஆண்டுகளாக நடந்த தொழிலாளர்களின் வேலை நேர குறைப்பிற்கான போராட்டம் தான், மே தினம் உருவானதற்கு காரணம் ஆகும். இந்தியாவில் 48 மணி நேரம் என்ற வரை யறை இந்த பின்னணியில் தான் உருவானது.  லாபமும் அதன் மூலமான புதிய மூலதனமாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு இயந்தி ரங்களும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை குறைக்க உதவிடவில்லை. மாறாக அது உருவாக் கும் ஆட்குறைப்பு, வேலையின்மை, தொழிலாள ருக்கு இடையிலான வாழ்வாதாரப் போட்டி ஆகியவை தொழிலாளர் மீதான உழைப்புச் சுரண்டலை தீவிரப் படுத்த முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை உணர்வதும், வேலை நேர குறைப்பு மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப் படுத்துவதுமே, மே தின தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியும், வீரவணக்கமும் ஆகும்.  கட்டுரையாளர்: சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர்