articles

img

புற்றுநோய் ஏற்படுத்தும் எரிவாயு அடுப்பின் உமிழ்வு தொகுப்பு : சிதம்பரம் இரவிச்சந்திரன்

     இரண்டாம் நிலை புகை பிடிக்கும் பழக்கத்தால் (secondhand smoking) ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட அதிக பாதிப்பை வீடுகளில் எரிவாயு அடுப்புகள் உமிழும் பென்சின் என்ற நச்சுவாயு ஏற்படுத்துகிறது என்று சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த உமிழ்வு எண்ணை அல்லது வாயு சுத்திகரிக்கும் இடங்களுக்கு அருகில் குடியிருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் வாய்ப்புகளை விட அதிகமாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் கொலராடோ மாநிலங்களில் 87 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எரிவாயு அடுப்புகளால் உமிழப்படும் பென்சின் வாயு வீட்டிற்குள் காற்றுமாசின் அளவை அதிகப்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை (E P A) வெளியிட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளை விட இந்த உள்ளக மாசின் அளவு அதிகமாக இருக்கிறது.

     அடுப்புகள் 45 நிமிடம் எரியும்போது உருவாகும் பென்சின் நச்சு இரண்டாம் நிலை புகைப்பிடிக்கும் பழக்கம் மூலம் உருவாகும் மாசை விட அதிகம். மின் சுருள் அடுப்பின் (electric coil stove)உமிழ்வை விட இது 10 முதல் 25% கூடுதலாக உள்ளது. மெதுவாக எரியும் அடுப்புகளும் ஆபத்தான அளவிலேயே பென்சினை உமிழ்கின்றன.

   ஆனால் மின் தூண்டல் அடுப்புகள் (induction stoves) பென்சினை உமிழ்வதில்லை. வீட்டிற்குள் உருவாகும் காற்றுமாசு மற்றும் எரிவாயு அடுப்புகள் ஏற்படுத்தும் பென்சின் போன்ற நச்சு வாயுக்களின் உமிழ்வு பற்றி முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஸ்ட்ரான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய, நூதன கண்காணிப்புக் கருவிகளை பயன்படுத்தி உமிழ்வைத் துல்லியமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

   எலும்பு மஜ்ஜைகளைச் சேதப்படுத்தி பாதிக்கப்படுபவர்களிடம் லிம்போமாஸ் (Lymphomas), லுக்கீமியா போன்ற பல புற்றுநோய்களை குறைந்த அளவு உருவாகும் உமிழ்வுகள்கூட ஏற்படுத்துகின்றன. 

   இருந்து வெளியேறிய பென்சின் போன்றவை வீடு மற்றும் அது அமைந்துள்ள அடுக்குமாடிக்குடியிருப்புப்பகுதி முழுவதும் தொடர்ந்து ஆறு மணி நேரம் இருக்கிறது. எரிவாயுவில் உள்ள பல பொருட்களில் பென்சின் போன்ற அங்ககக் கூட்டுப்பொருட்கள் கலந்துள்ளன. புகை பிடிப்பதால் உருவாகும் பென்சின் உமிழ்வு புற்றுநோய்க்கு முக்கியக்காரணம் என்று பொதுவாக கருதப்பட்டநிலையில் இந்த கண்டுபிடிப்பு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜான் கரிஷ் (Jan Kirrsch) கூறுகிறார்.

    இரத்தப் புற்றுநோய்கள் ஏற்படவும் வீட்டினுள் உருவாகும் இத்தகைய மாசு காரணமாக இருக்கிறது. இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம். இப்பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் உள்ள பல பொருட்களில் பென்சின் போன்ற அங்ககக் கூட்டுப்பொருட்கள் கலந்துள்ளன. புகை பிடிப்பதால் உருவாகும் பென்சின் உமிழ்வு புற்றுநோய்க்கு முக்கியக்காரணம் என்று பொதுவாக கருதப்பட்டநிலையில் இந்த கண்டுபிடிப்பு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜான் கரிஷ் (Jan Kirrsch) கூறுகிறார். இரத்தப் புற்றுநோய்கள் ஏற்படவும் வீட்டினுள் உருவாகும் இத்தகைய மாசு காரணமாக இருக்கிறது. இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம். இப்பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் இந்நிலை தொடரும் என்று ஜான் எச்சரிக்கிறார். அமெரிக்காவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலானவர்கள் வீடுகளில் சமையல் தேவைகளுக்காக எரிவாயு அடுப்புகளையே முக்கியமாகப் பயன்படுத்துகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் போதுமான காற்றோட்ட வசதி இல்லை. இதுபோன்ற வீட்டினுள் ஏற்படும் காற்றுமாசு வெளியிடங்களில் உருவாகும் மாசை விட கூடுதலானது. ஆபத்தானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக நாடுகளில் கடுமையான நடவடிக்கைகள் மூலம் வெளிப்புறக் காற்றுமாசுக் கட்டுப்பாடு சாத்தியமாகியுள்ளது. ஆனால் வீடுகளுக்குள் உருவாகும் காற்றுமாசின் தரத்தை நிர்ணயிக்க இன்னும் போதுமான சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

  புதைபடிவ எரிபொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு மட்டுமே வீட்டினுள் ஆபத்தான காற்றுமாசை ஏற்படுத்தும் முக்கியக்காரணி. நச்சுவாயுக்கள் உமிழப்படும் ஒரு வாகனத்தின் புகைபோக்கிக்குழாய்க்கு அருகில் நிற்க நாம் விரும்பமாட்டோம். ஆனால் மாசுப்பொருட்கள் உமிழப்படும் அடுப்புகளுக்கு அருகில் நிற்பதுடன் அவை உமிழும் நச்சுவாயுக்களையும் நாம் சுவாசிக்கிறோம் என்று ஆய்வுக்குழுவின் மற்றொரு விஞ்ஞானி ராஃப் ஜாக்சன் (Rob Jackson) கூறுகிறார்.

   பல பத்தாண்டுகள் நடந்த ஆய்வுமுடிவுகள் வீடுகளில் இயங்கும் எரிவாயு அடுப்புகள் உமிழும் கார்பன் மோனோ ஆக்சைடு, ஃபார்மால்டிஹைடு போன்ற ஆபத்தான நச்சுப்பொருட்கள் பற்றிக் கூறின. 2023 தொடக்கத்தில் வெளிவந்த மற்றொரு ஆய்வு முடிவு அமெரிக்காவில் 12% குழந்தைகளிடம் ஆஸ்த்மா ஏற்பட எரிவாயு அடுப்பு உமிழ்வே காரணமாக இருக்கிறது என்று கூறியது. அணைக்கப்பட்ட பிறகும் எரிவாயு அடுப்புகள் ஆபத்தான மாசுப்பொருட்களை உமிழ்கின்றன.

   நியூயார்க் போன்ற பல நகரங்கள் புதிய கட்டிடங்களில் எரிவாயு இணைப்புகளை அமைக்க தடை விதித்துள்ளது. புதிய தரக்கட்டுப்பாடுகளுடன் அடுப்புகளை விற்கவேண்டும் என்ற கோரிக்கை யு எஸ், யு கே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலுப்பெற்றுவருகிறது. பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க அடுப்புகளில் பொருத்தப்படும் வடிகட்டிகள் நச்சுவாயு உமிழ்வைத் தடுக்கும்வகையில் தயாரிக்கப்படவேண்டும் என்று சமூக அமைப்புகள் கோருகின்றன.     

     குறைந்த வருமானமுள்ள சமூகங்களில் மின் தூண்டல் அடுப்புகள் மான்யவிலையில் விற்கப்படவேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கரி அடுப்புகள் மூலம் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டபோது உலகெங்கும் கடந்த நூற்றாண்டில் இந்த அடுப்புகளின் பயன்பாடு குறைக்கப்பட்டது. சில இடங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    எரிவாயு அடுப்புகள் தூய்மையானவை என்று அப்போது நம்பப்பட்டது. ஆனால் இது தவறு என்று இப்போது தெரியவந்துள்ளது. அதனால் இனி சமைக்க எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கவேண்டும். உலக மக்களிடையில் இது குறித்த விழிப்புணர்வு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.