articles

அமெரிக்க முகமையின் நிதி நல்கை: உண்மையை மக்களுக்கு உணர்த்திடுக!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமையை மூடிவிட முடிவு செய்தி ருப்பது, இந்தியாவில் உள்ள இரு ஆளும் கட்சிக ளான பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையே குடுமிபிடிச் சண்டைக்கு இட்டுச் சென்றுள்ளது. டொனால்டு டிரம்ப் இந்த முடிவை அறிவித்தபோது  இந்த முகமையி லிருந்து நிதியைப் பெற்றவர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

தீவிர விசாரணை தேவை

 மேலும், அவர், இந்தியாவில் வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவுக்காக 21 மில்லியன் டாலர்கள் வழங்கப் பட்டதாக கூறியதுடன், டிரம்ப் மற்றொரு உரையா டலின்போது இந்தப் பணம் இந்தியாவில் உள்ள தனது நண்பர் மோடிக்கு வாக்காளர்களை அதிக அளவில் வாக்குப்பதிவுக்கு அழைத்து வருவதற்காகச் சென்றதா கவும் கூறியிருக்கிறார். இந்தக் கூற்றுகள் தீவிரமான பரிசீலனைக்கு உகந்தவை, மேலும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியவைகளாகும். இவை உண்மை என மெய்ப்பிக்கப்பட்டால், அவை நம் நாட்டின் உள் ஜன நாயக செயல்முறைகளில் வெளிநாட்டு சக்திகளின் நேரடித் தலையீடு என்று சொல்வதைத்தவிர வேறொன் றுமில்லை. இந்தப் பணத்தை யார் பெற்றார்கள், அதன் நோக்கம் என்ன என்பதையும் அறிந்திட நமக்கு உரிமை உண்டு.

சோசலிச  இயக்கங்களை நசுக்க...

அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமை (USAID) என்பது எந்தவிதமான பிரதிபலனும் எதிர் பார்க்காது வெளிநாடுகளுக்கு உதவி வழங்கும் அப்பாவியான நிறுவனம் அல்ல. மாறாக இது அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஒரு பகுதியாகச் செயல்படுவதாகும். சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் அதன் வளர்ந்துவரும் செல்வாக்கை எதிர் கொள்வதற்காகவும், உலகில் இதர நாடுகளில் வளர்ந்துவரும் சோசலிச இயக்கங்களை நசுக்குவ தற்காகவும், அமெரிக்க நிறுவனங்களின் நலன்க ளைப் பாதுகாப்பதற்காகவும் ஜான் எஃப்.கென்னடி யால் நிறுவப்பட்ட ஒரு முகமையாகும்.

மெக்சிகோ, கியூபாவில் தலையீடு

2023ஆம் ஆண்டு வாக்கில், மெக்சிகோ முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் (Andrés Manuel López Obrador) தனது நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையி டுவதைக் கண்டித்ததுடன், தனது அரசாங்கத்திற்கு விரோதமான குழுக்களுக்கு அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமை  நிதியுதவி செய்வதை அமெ ரிக்கா நிறுத்த வேண்டும் என்று கோரினார். 2014ஆம் ஆண்டில், அமைதியின்மையைத் தூண்டி சோசலிச கியூபாவை சீர்குலைக்க வடிவ மைக்கப்பட்ட ‘சுன்சுனியோ’ (‘ZunZuneo’) என்ற ‘கியூப ட்விட்டர்’ தளத்தை உருவாக்கியதில் இந்த முகமை யின் பங்கு உள்ளது.

அமெரிக்கத் தூதர்களின் பேட்டிகள்...  

இந்த முகமையின் மூலமாக ஆட்சி மாற்றத்தை அமல்படுத்த அல்லது அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அரசாங்கங்களை அகற்றுவதற்கான ஒரு கருவியாக இதனைப் பயன் படுத்துவது ஒரு புதிய நிகழ்வு அல்ல.  அது இந்தியா வைத் தவிர்த்த ஒன்றாக எப்போதும் இருந்ததில்லை. கேரளாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அகற்றுவதற்காக காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்கா எவ்வாறு ‘உதவியது’ என்ப தற்கான சான்றுகள் வெளிவந்திருக்கின்றன. 1957 முதல் 1959 வரை இந்தியாவுக்கான அமெரிக்க  தூதராகப் பணியாற்றிய முன்னாள் அமெரிக்கத் தூதர் எல்ஸ்வொர்த் பங்கர் (Ellsworth Bunker)  அளித்த நேர்காணல் ஒன்று, இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமை யிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பதவி நீக்கம் செய்யப் பட்ட காலத்தில், “நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தோம் என்பது உண்மை” என்று வெளிப் படையாகவே தெரிவித்திருக்கிறார்.  இந்த நேர்காண லின் எழுத்துப்படிகள் கொலம்பியா பல்கலைக்கழ கத்தின் வாய்மொழி வரலாற்று ஆவணக் காப்ப கத்தில் கிடைக்கின்றன. அங்கு பங்கர் இந்த அதிர்ச்சி யூட்டும் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார். கேரள, மே.வங்க இடதுசாரி அரசுகளை கவிழ்க்க இதேபோன்றே, 1973 முதல் 1975 வரை பணியாற்றிய இந்தியாவிற்கான மற்றொரு அமெரிக்க தூதர் டேனி யல் பேட்ரிக் மொய்னிஹானும் இதேபோன்றதொரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார். மொய்னி ஹான் தனது “எ டேஞ்சரஸ் பிளேஸ்” (“A Danger ous Place”) என்ற நினைவுக் குறிப்பில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் செல்வாக்கை எதிர்த்துப் போராட அமெ ரிக்கா இரண்டு சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பணம் வழங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு முறை கேரளாவிலும் மீண்டும் மேற்கு வங்கத்திலும் பணம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு முன்னாள் அமெரிக்க தூதர்களின் இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள், அமெரிக்கா எந்த அள விற்கு இந்தியாவின் உள் விவகாரங்களில் தீவிரமா கத் தலையிட்டிருக்கிறது என்பதையும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அர சாங்கத்தை அகற்றுவதில் தீவிரமான பங்கை ஆற்றியி ருக்கிறது என்பதையும் மிகத் தெளிவாகக் காட்டு கின்றன.

அமெ., தலையீட்டுக்கு ஆட்சேபம் தெரிவிக்காத காங்., பாஜக  

இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியா வின் உள்விவகாரங்களில் தலையிட்டிருப்பது குறித்து இதுநாள் வரையிலும் காங்கிரஸ் கட்சியோ அல்லது பாஜக-வோ (அதன் முந்தைய அவதாரமான ஜனசங்கமோ) எந்த ஆட்சேபணையும் தெரிவித்த தில்லை என்பது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதில் அவற்றுக் கிருக்கின்ற அக்கறையின்மையை அல்லது பற்றாக் குறையின்மையைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது. இந்தப் பின்னணியில், இந்தியாவில் ‘வாக்காளர் வாக்குப்பதிவை’ பாதிக்க 21 மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியி ருப்பதானது, புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்க வோ முடியாத ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும்.

அக்கறையற்ற  வெளியுறவு அமைச்சர்

டிரம்ப் நிர்வாகத்தின் கருத்துக்கள் ‘கவலைக்குரி யவை’ என்றும், ‘அரசாங்கம் அதை ஆராய்ந்து வரு கிறது’ என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கி றார். இருப்பினும், இதற்கு அப்பால், இந்தக் கூற்றுக் களில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதை  ஆராய்வது குறித்து அவர் முற்றிலும் அமைதியாக இருந்து வருகிறார். கேள்விக்குரிய நிதி இந்தியா வுக்காக அல்ல, வங்க தேசத்திற்காக என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது டிரம்ப் ‘டாக்கா’வை ‘தில்லி’யுடன் குழப்பியிருக்கலாம் என்ப தைக் குறிக்கிறது. இந்த விளக்கம் வேடிக்கையாகத் தோன்றினாலும், இந்தியாவில் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமையின் ஈடுபாடு மற்றும் செயல் பாடுகள் குறித்த தெளிவான மற்றும் வெளிப்படை யான கணக்கை வழங்குவது இறுதியில் அரசாங் கத்தின் பொறுப்பாகும்.

மௌனம் காக்கும் நிதியமைச்சகம்

டிரம்பின் கூற்றுக்கள் குறித்து நிதி அமைச்சகமும் மௌனம் காத்து வருகிறது. 2023−24 ஆம் ஆண்டில் ஏழு திட்டங்களுக்காக அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக் கான முகமையிலிருந்து 750 மில்லியன் டாலர் (சுமார் 6,501 கோடி ரூபாய்) பெறப்பட்டதாக அமைச்சகம் தனது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் திட்டங்களில் நீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறை களின் முன்முயற்சிகள் அடங்கும், ஆனால் கேள்விக் குரிய 21 மில்லியன் டாலர்கள் பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒன்றிய அரசாங்கத்தின் அறிக்கைகளின்படி, அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமை (USAID) நிறுவப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கு 17 பில்லி யன் டாலருக்கும் அதிகமான (சுமார் 1.5 லட்சம் கோடி  ரூபாய்) நிதியை வழங்கியிருக்கிறது. பல்வேறு துறைக ளில் 555 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவளித்தி ருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமையின் நிதியைப் பயன் படுத்திக் கொண்டிருக்கின்றன.

மற்ற அமைப்புகளுக்கு தடை; பாஜகவுக்கு பச்சைக்கொடி

 இதற்கிடையில், பாஜக, வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்தல்) சட்டத்தை (Foreign Contribu tion (Regulation) Act) ஆயுதமாகப் பயன்படுத்தி, ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு உதவியைப் பெறு வதைத் தடுத்திருக்கிறது. அதே நேரத்தில், ஆர்எஸ் எஸ் மற்றும் அதன் சித்தாந்தத்துடன் இணைந்த பிற அமைப்புகளைத் தடையின்றி அணுகவும் அனுமதித்தி ருக்கிறது. இந்த அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு,  பாஜகவின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது மற்றும் அதன் பெரும்பான்மைவாத சித்தாந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்வதற்கு அது வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான முகமை  (யுஎஸ்ஏஐடி) நிதியுதவி, அதன் திட்டங்களின் தன்மை மற்றும் இந்தியாவின் உள் விவகாரங்களில் அதன் ஈடுபாடு பற்றிய முழு விவரங்களும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அமெரிக்காவின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கக் கொள் கைகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என் பதை அறிய இந்திய மக்களுக்கு உரிமை உண்டு. மிக முக்கியமாக, அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக் கான முகமை (யுஎஸ்ஏஐடி) மூலம் அமெரிக்கா எந்த அளவிற்கு அரசியல் செல்வாக்கை செலுத்துகிறது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண் மையைப் பாதுகாத்திட ஒன்றிய அரசாங்கம் தான் யோக்கியமானதாக இருப்பதாக மக்களுக்குத் தெளிவுபடுத்திட வேண்டும்.