articles

img

பிடல் காஸ்ட்ரோவின் இரண்டு உரைகள் - ஐ.வி.நாகராஜன்

பிடல் காஸ்ட்ரோவின் இரண்டு உரைகள் - ஐ.வி.நாகராஜன்

மிகச்சிறந்த புரட்சி யாளர்  பிடல் காஸ்ட்ரோவின் உலகமய மாக்கல் குறித்த இரண்டு முக்கிய சொற்பொழிவுகள் “ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கல்” புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த உரைகளில் அவர் ஏகாதிபத்தியத்தின் புதிய உலக ஒழுங்கமைப்பு, பொருளாதார சுரண்டல், தேசிய இறை யாண்மை மீதான தாக்கு தல்கள், பண்பாட்டு அடி பணிதல்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகளை விமர்சிக்கிறார்.  1990களில் ஏகாதிபத்திய தாக்குதல்களின் முக்கிய இலக்காக இருந்த கியூபாவின் அனுபவங்களைக் கொண்டு காஸ்ட்ரோ தனது பார்வையை முன்வைக்கிறார். க்யூபா  தனது மக்களின் செயல்பாடு களால் உருவாக்கப்பட்ட சோச லிச அமைப்பை பாதுகாப்ப தில் ஏகாதிபத்தியத்தின் பலத்திற்கு எதிராக சவால் விடுகிறது.  முதல் உரையை 1999 பிப்ரவரியில் கரகாஸிலுள்ள வெனிசுலா பல்கலைக்கழ கத்தில் நிகழ்த்தினார். நாலரை மணி நேரம் நீடித்த இந்த  உரையில் நவீன தாரளமய உலகமயத்தை விளக்கி, “சமூ கரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் ஒட்டுமொத்தமாக மனித குலத்தின் மீது தாக்குப்பிடிக்க முடியாத பொருளாதார முறை எப்படி திணிக்கப்படுகிறது” என்பதை அம்பலப்படுத்தினார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதே பல்கலை. வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1959ல், கியூப புரட்சி வெற்றிக்குப் பின் அவர் உரையாற்றியிருந்தார்.  இந்த உரையில் உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நிறுவனங்கள், அமெரிக்க மையநிதி, பிரெட்டன்வுட்ஸ் நிறுவனங்கள், “செயற்கை கனவுகளை தயாரிக்கும் பண்பாட்டு தொழிலகம்” ஆகி யவற்றின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தினார். அமெரி க்காவின் நகரங்களில் அதிக சிசு மரண விகிதம், தென் அமெரிக்காவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பில் செழிக்கும் அமெரிக்க பொருளாதார அமைப்பின் சுரண்டலையும் விமர்சித்தார்.  இரண்டாவது உரையை 1999 ஜூனில் ஹவானாவில் நடந்த பண்பாடு மற்றும் வளர்ச்சி மீதான முதல் உலக மாநாட்டின் நிறைவு விழா வில் நிகழ்த்தினார். இதில் தொலைத்தொடர்பு ஏக போகங்கள், யுகோஸ்லா வியாவில் நேட்டோ படை களின் ஆக்கிரமிப்பு, தேசிய இறையாண்மை மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து குரல் எழுப்பினார். “தேசிய இறையாண்மையை ஏகாதிபத்திய சுயநலத்துக்கு முன்னால் சரணடைய செய்ய  முடியாது” என்ற அவரது வாதம் இன்றும் பொருத்த மானதாக உள்ளது.  காஸ்ட்ரோவின் இந்த உரைகள் “நவீன தாராளமய உலக முறை அமைத்துத் தரு கிற போலியான கருத்து ஒரு மைப்பாட்டுக்கு எதிராக உலக ளவிலான எதிர்ப்பை ஒன்று திரட்ட” அழைப்பு விடுக் கின்றன. வளர்ந்து வரும் மாற்றுக் கண்ணோட்டத்திற்கு இந்த புத்தகம் பெரும் பங்களிப்பு செய்கிறது.