சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தல்
தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றி சாதி மறுப்பு திரு மணங்களுக்கு சமூக மரியாதை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்கா ணிப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை பேசியது வருமாறு;
ரூ.208 கோடி ஒதுக்கியதற்கு நன்றி!
ஆதிதிராவிட மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் கடந்து விட்டதால் மிகவும் பழுதடைந்த நிலை யில் காணப்படும் வீடுகளை பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். இதைத்தொடர்ந்து, ஏழைகளின் கண்ணீரைத் துடைத்திட 2024 ஆம் ஆண்டு பழுதடைந்த வீடுகளை பராமரிக்க ரூ. 208 கோடி ஒதுக்கியதற்கு வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று, புதிரை வண்ணார் மக்களின் நலன் களை பாதுகாக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்த நல வாரி யத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்த தற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்.
தோழர் சீனிவாசராவ் சிலை!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் உள்ள தியாகி பி. சீனிவாசராவ் மணிமண்டபத்தை சீரமைத்து முழு உரு வச் சிலை அமைக்க வேண்டும் என வலி யுறுத்தினேன். இதற்கு ரூ. 23 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவது மிக்க மகிழ்ச்சி. அதில், தோழர் சீனிவாசராவ் பெயர் சீனிவாசன் என்று அச்சு பிழை உள்ளது. சரி செய்ய வேண்டு கிறேன்.
பாதிக்கப்படும் மக்கள் மீது புகார் பதிவு?
பட்டியலின மக்கள் மீதான வன்முறை கள், பாலியல் கொடுமைகள், தாக்குதல் கள் ஏற்படும் போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப் போடுவதை தடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, கவுண்ட்டர் வழக்குப் (Counter petion) பதிவு செய்து பாதிக்கப்பட்ட பட்டி யலின மக்களையே வழக்கில் புனைகின்ற னர். குறிப்பாக சொல்ல வேண்டுமென் றால், தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையம் மு.த.அ.எண் 417/2024. அடுத்து, தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சி காவல் நிலையம் மு.த.அ.எண்: 90/2025. விசாரணை செய்து ரத்து செய்ய வேண்டுகிறேன். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வரு டாந்திர வாரியாக விவரங்கள் கண்காணி ப்பு குழு உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் புத்தகத்தில் நடப்பு 2 மாதத்தில் 292 வழக்குகள் பதிவாகியுள் ளன என்பது இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது. இதை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு வரு கிறேன். எனவே, காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாகுபாட்டை தடுக்க வேண்டும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்த இரண்டு மாதத்தில் 394 வழக்குகள் காவல் துறை புலன் விசாரணையில் உள்ளது. தனியுறு, சிறப்புறு நீதிமன்றங்களில் 5,929 வழக்குகளும், 15 அமர்வு நீதி மன்றங்களில் 1,511 வழக்குகள் நிலுவை யில் உள்ளது என்பது நீதிமன்றங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. பாகுபாடுகள் அதிகரிக்க விடாமல் தடுக்கும் வகையில் அரசு அதற்குரிய கவனம் செலுத்தினால் தான் குற்றச்சம்பவங்களை குறைப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்.
மூன்று இலக்க எண் தேவை
வன்கொடுமை சம்பவங்களின் புள்ளி விவரங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் புகார் களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை நடந்தால் புகார் செய்வதற்கான உதவி எண் (1800 2021 989, 14566) பொதுமக்கள் பயன்பாட் டிற்கு புரியும்படி தீயணைப்பு, ஆம்பு லன்ஸ், போலீஸ் உதவி எண் போல மூன்று இலக்கு எண் அளித்து விளம்பரம் செய்ய வேண்டும்.
பயனுள்ள திட்டம்
அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் 2023-2024 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கப் படுகிறது. இது ஒரு பயனுள்ள திட்டம். அதே நேரத்தில், இந்த திட்டத்தை ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் செயல் படுத்துவதை தவிர்த்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பணிகளை தீர்மானித்து செயல்படுத்த வேண்டும்.
அம்பேத்கர் நூல்கள்
அம்பேத்கர் நூல்களை தமிழில் அச்சிட்டு வெளியிட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு நூல்கள் வெளியிடப்படுமா? என்பதை அறிய விரும்புகிறேன்.
பஞ்சமி நிலத்தை மீட்க தனி ஆணையம்
தமிழகம் முழுவதும் பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தை பஞ்சமர்கள் தவிர வேறு யாராவது பயன் படுத்தி இருக்கிறார்களா என்பதை கண்ட றிய கடந்த காலத்தில் நிபுணர் குழு அமைத்து நிலம் அடையாளம் காணப் பட்டது. அதை நிலமற்ற தலித் மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும். இத்தகைய நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
தமிழகத்திலும் புதிய சட்டம்: முதல்வருக்கு நன்றி
அரசு பணிகளில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு தடுக்கப் பட்டுள்ளது. அரசமைப்பு சட்டம் பிரிவு 16(4ஏ), இன்படி புதிய சட்ட திருத்தம் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பில் மறுத்துள்ளது. ஆனால், மற்ற மாநி லங்கள் மூலம் சட்டம் இயற்றப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தமிழகத்தி லும் சட்டம் கொண்டு வந்து பட்டியலின மற்றும் பழங்குடியின அரசு ஊழியர் ஆசிரி யர்களுக்கு பதவி உயர்வு தரவேண்டும் என்று இந்த கூட்டத் தொட ரிலேயே வழங்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சருக்கு நன்றி.
பெண்களுக்கு புதிய திட்டம்
தலித் இளைஞர்களை கூடுதலாக தொழில் முனைவோர்களாக மாற்றுவ தற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். எளிய முறையில் மானியத்துடன் கூடிய கூடு தலான நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். தலித் பெண்களை தொழில் முனைவோ ராக மாற்றுவதற்கும், ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் வாங்குவதற்கு மானியத்து டன் கூடிய கடன் உதவிகளை பெறுவதற்கு அரசு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்.
விடுதிகளின் அவல நிலைகள்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதார சீர்கேட்டுடன் மாணவர்கள் தங்கியிருக்கும் நிலை உள்ளது. (புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளை ஆய்வு செய்து பழுதடைந்த கட்டிடங்களை மாற்ற தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். (உதாரணம், கந்தர்வக்கோட்டை தொகுதி வீரடிப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி வகுப்பறை கட்டிடம் மற்றும் மாண வர் விடுதி.)
நாயக்கனேரி ஊராட்சி மன்றம்
திருப்பத்தூர் மாவட்டம், நாயக்க னேரி ஊராட்சி மன்றம் தலித் பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. இந்துமதி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் 20.9.24 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தலித் பெண்ணிற்கு ஒதுக்கியது தவறு என்றும் பொது பெண் அல்லது பழங்குடி பெண்ணிற்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பு முற்றிலும் நியாயமற்றது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கியதை உறுதி செய்ய வேண்டும்.
இட ஒதுக்கீடு
1971 ஆம் ஆண்டு கலைஞர் முதல மைச்சராக இருந்தபோது 16 சதவிகித மாக இருந்த இட ஒதுக்கீடு 18 சதவிகித மாகவும், பழங்குடியினருக்கு 1990 இல் 1 சதவிகிதம் சேர்த்து 19 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற்போது இது கூடு தலாக இருக்கும். எனவே, 20 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
விரைவில் ஓய்வூதிய நிலுவை
சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஓய்வூதி யம் ஒரு நபருக்கு ரூ.13,200 வீதம் வழங்கப் பட்டது. தற்போது ரூ.7,500 ஆக குறைக் கப்பட்ட நிலையில், 2024 பிப்ரவரிக்கு பிறகு குறைக்கப்பட்ட ஓய்வூதியமும் வழங் கப்படவில்லை .இதனைத் தொடர்ந்து முதல்வர் தலையிட்டதன் அடிப்படையில் துறைச் செயலாளர் பதிலளிக்கையில் ஓய்வூதியம் குறித்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் நிறுத்திவைக்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஊருக்கு ஒரு பொது மயானம்
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15, 17 சாதிய பாகுபாட்டை தடை செய்துள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் இன்றளவும் நீடிப்பதும், பாகுபாட்டை தடை செய்திட சட்டங்கள் மட்டும் போதுமானதல்ல. சாதி ஒழிப்பு இல்லாமல் சமூக நீதி, பொருளாதார சமத்து வம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படு வது கடினமான நிலையாகத்தான் இருக்கிறது. 383 ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் 36 மாவட்டங்களில் 441 பள்ளி களில் 644 மாணவர்கள் மற்றும் குடி யிருப்பு பகுதிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆய்வு செய்யப்பட்ட விவரம் குறிப்பும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்த வர்களின் கோரிக்கை விபரங்களும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உரிய தலையீடு செய்து தீர்வு காண வேண்டுகிறேன். கிராமப்புறங்களில் சாதிக்கு ஒரு சுடுகாடு இருப்பதை தவிர்த்துவிட்டு தமிழ கம் முழுவதும் ஊருக்கு ஒரு பொது மயானம் அமைக்க வேண்டும். சாதி பாகு பாடுகளை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு ஒன்றி யத்திற்கும் ஒரு மின் மயானம் அமைக்க வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளிகள் தலித் மக்கள் 60 சதவிகிதம், சுயதொழில் செய்வோர் 5 சதவிகிதம், நிலமற்றோர் 80 சதவிகிதம், கல்வியறிவு 75 சதவிகிதம், இத்தகைய சூழலில் வாழும் மக்களின் வாழ்வில் கண்ணீரைத் துடைத்த தலித் மக்களுக்கு குடிமனைப்பட்டா உடனடி யாக வழங்க ஒரு நிபுணர் குழுவை உரு வாக்கி கொள்கை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதி திரா விடர்களுக்கான சிறு தொழிற்கூடங்கள் அனுமதி அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பிரித்துக்கொடுத்த நடைமுறை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட பயனாளிகளுக்கு வழங் கப்பட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது பட்டியலின மற்றும் பழங்குடி யின பேராசிரியர்கள் எண்ணிக்கை 6 சத விகிதத்திற்கும் குறைவாக உள்ளது. 18 சதவிகித இட ஒதுக்கீட்டினை செயல் படுத்த வேண்டும். விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தற்போதைய விலைப் புள்ளியை கவ னத்தில் கொண்டு குறைந்தபட்ச கூலிச் சட்டம் அறிவிக்க வேண்டும்.
பட்டா வழங்குக!
காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி திருவண்ணா மலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளனர். பட்டா கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதி ஆணவப்படு கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொ டர்ந்து வற்புறுத்தி வருகிறோம். அரசு இதை நிறைவேற்றிட வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களுக்கு சமூக மரியாதை அளிக்க வேண்டும். இவ்வாறு எம்.சின்னதுரை பேசினார்.