articles

img

கூட்டாட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவோம்!

கூட்டாட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவோம்!

இந்தியா ஒன்றுபட்ட நாடாக- தொடர்வதற்கு நாம் நடத்தும் போராட்டத்தில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவோம்” என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு ஒருங்கிணைப்பாளர்  பிரகாஷ் காரத்  கூறினார். சிபிஎம் அகில இந்திய மாநாட்டையெட்டி மதுரை யில், “கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை”  என்ற தலைமையில ஏற்பாடு செய்யப்பட்ட கருத்த ரங்கில் அவர் பேசியது வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி தேசிய பிரச்ச்னைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது அவசியம் என்று கருதினோம். கூட்டாட்சி முறை மீது ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதல்கள், மாநில அரசுகளின் உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் எம்.சி. சுதாகர் என மூன்று முக்கியமான ஆளுமைகள் பங்கேற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தரு கிறது. மாநில அரசுகளை இவர்கள் நடத்தி வருவ தால் மாநிலங்களின் உரிமைகள் மீது மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு எப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறது என்பது குறித்து இவர்களுக்கு நேரடி யான அனுபவம் உள்ளது. மோடி அரசு   மாநிலங்க ளின் உரிமைகளை மறுக்கிறது.

திட்டமிட்டு சீர்குலைப்பு

1950-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஏற்றுக்கொள் ளப்பட்ட நமது நாட்டின் அரசியல் சாசனத்தில் மாநி லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மோடி அரசு பறித்து வருகிறது. கூட்டாட்சி தான் நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சமாகும். இன்று கூட்டாட்சி யின் ஒவ்வொறு கூறும்- குறிப்பாக ஒன்றிய - மாநில  அரசுகளுக்கு இடையிலான உறவுகள் திட்டமிட்டு சீர் குலைக்கப்படுகின்றன. ஒன்றிய - மாநில அரசு களுக்கு இடையிலான அரசியல் ரீதியிலான உறவு களாக இருந்தாலும் நிதி ஒதுக்கீடு குறித்ததாக  இருந்தா லும் ஒன்றிய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நேரடியான வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்கிறது. ஒன்றியம் என்றால் என்ன? ‘இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களை கொண்ட ஒரு ஒன்றியம்’ என அரசியல் சாசனத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதைத் தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்று மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கையந்தும் நிலைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஒன்றிய அரசிடம் உள்ள வளத்தையும் நிதியையும் மாநிலங்களுடன் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. அது வும் பாஜக ஆட்சியில் திட்டமிட்டு மீறப்பட்டு வருகிறது.

மாநிலங்களின்  உரிமைகளில் தலையீடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. ஆளுநர்களைக் கொண்டு போட்டி அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நீண்ட அனுபவம் உள்ளது. கர்நாடக ஆளுநரும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை நாம் பார்த்து வரு கிறோம். நாட்டில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி யில் உள்ள மாநிலங்களில்- குறிப்பாக, எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாகு பாடு கட்டப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இயற்கை சீற்றங்கள் ஏற் படும்போது பாஜக அல்லாத மாநிலங்களுக்கு உதவ ஒன்றிய அரசு மறுக்கிறது. இதற்காகத்தான் அவசர பணிகளுக்கான நிதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பேரிடர் நடந்த பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிதி தேவைப்படுகிறது. அதையும்  ஒன்றிய அரசு தரமறுத்து மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது. மாநிலங்களுக்கான வறட்சி நிவாரண நிதியை ஒதுக்கக்கோரி கர்நாடக அரசு  உச்ச நீதிமன்றம் வரை சென்று  போராடியது. தமிழகத்தில் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது  நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு ஒன்றிய அரசிடம் கேட்டபோது நிதி வழங்க மறுத்தார்கள்.

உயர்நீதிமன்றம்  தலையீடு

கேரளத்தின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிதி கேட்டபோதும், உயர் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்ட பின்னரும், ஒன்றிய அரசு மறுத்து விட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி  தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் பாகுபாடுடன் கூடிய கொள்கையின் தொடர்ச்சிதான் இவை. இது மட்டுமல்ல ‘மாநிலங்களை உள்ளடக்கியதுதான் ஒன்றி யம்’ என்ற கொள்கையை மோடி  அரசு சீர்குலைத்து வருகிறது.

இரண்டாக உடைக்கப்பட்ட  ஜம்மு - காஷ்மீர்

மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீரை இரண்டாக உடைத்து யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டது. சட்டத்திற்கு புறம்பாக இந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் மோடி அரசு மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டது. இது கூட்டாட்சி க்கு விடப்பட்ட அச்சுறுத்தல். இது அரசியல் சாச னத்திற்கு விடப்பட்ட சவால். ஜனநாயகத்திற்கு விடப் பட்ட அச்சுறுத்தல் ஆகும்.

ஆளுநர்களின் அட்டகாசம்

ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு சட்டப் பேரவையை வைத்துள்ளன. மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசால் அந்த சட்டப்பேரவை ஏற்படுத் தப்படுகிறது. ஆனால், இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர் சட்டப்பேரவையை கட்டுப்படுத்த பார்க்கிறார். இது கூட்டாட்சிக்கு எதி ரானது மட்டுமல்ல; ஜனநாயகத்திற்கும் எதிரானது. எனவே தான் ‘கூட்டாட்சி முறையைப் பாதுகாக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு சமம்’ என்கிறோம்.

தமிழக முதல்வரின்  பாராட்டத்தக்க முன் முயற்சிகள்

இங்கு வந்துள்ள 3 மாநில அரசுகளை சேர்ந்த வர்கள் ஆளுநர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், ஒன்றிய அரசு கூட்டாட்சியை சீர்குலைப்பதை எதிர்த்தும் இணைந்து போராட முன்வந்திருப்பது நல்ல விஷயம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அருமையான முன்முயற்சிகளை மேற்கொண்டார். தொகுதி மறுவரையறை குறித்து, ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு எதிராக தென் மாநிலங்களை சேர்ந்த அரசுகள் மற்றும் தொகுதி  மறு வரையால் பாதிக்கப்படும் பஞ்சாப், ஒடிசா மாநிலங்க ளை சேர்ந்த அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மார்ச் 22 அன்று கருத்தரங்கம் ஒன்றை சென்னை யில் நடத்தினார். 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை மேற்கொண்டால் மாநிலங்களுக்கு இடையே  சமத்துவமின்மை ஏற்படும். நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.

துணைவேந்தர்களாக  ஆர்எஸ்எஸ் நபர்கள்?

மேலும் புதிய யுஜிசி கொள்கைகளை கண்டித்து  பெங்களுருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி யுள்ளன. துணைவேந்தர்களை இனி அவர்களே நிய மனம் செய்வார்களாம், ஆர்எஸ்எஸ் பரிந்துரைக்கும் நபர்கள் தான் இனி மாநிலங்களில் உள்ள துணை வேந்தர்களாக பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படு வார்கள். இதற்கு எதிராக திருவனந்தபுரத்தில் உயர் கல்வித்துறை நிபுணர்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஒன்றுபட்டு  குரல் எழுப்புவோம்!

பாஜக அல்லாத மாநிலங்கள் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ந்து ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும். இதற்காக ஐக்கிய முன்னணி ஏற்படுத்தப்பட்டு இதில் மதச்சார்பற்ற அனைத்து ஜனநாயக கட்சிகளையும் இணைக்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக் கையுள்ள மதச்சார்பற்ற தன்மை மீது நம்பிக்கை யுள்ள கூட்டாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது இந்தி யாவை ஒன்றுபட்ட நாடாக வைத்திருக்க நாம் நடத்தும் போராட்டம். மேலும், இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும் இந்த போராட்டம் அவசியமாகும். அதற்கு இந்த கருத்தரங்கம் மேலும் வலுசேர்க்கும். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.