articles

img

விவசாயிகளின் விடிவெள்ளி டி.ஆர்.சுப்பிரமணியம்! - . தி.சீனிவாசன்

விவசாயிகளின் விடிவெள்ளி டி.ஆர்.சுப்பிரமணியம்! . தி.சீனிவாசன்

டுதலை தவறி கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசந் தன்னை வாழ்விக்க வந்த எண்ணற்ற தியாகிகளால் தான் இந்த நாடு விடுதலை பெற்றது. விடுதலை போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பணி மகத்தானது. அது ஓர் வீர காவியம். அத்தகைய தியாகிகளில் ஒப் பற்றவர் தோழர்.டி.ஆர்.எஸ். (டி.ஆர். சுப்பிரமணியம்). திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டு விடுதலைக்காக வும், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மக்க ளுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கு எதிராகவும் நடைபெற்ற வர்க்கப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கட்சி அளித்த குறைந்த ஊதியத்தில் எளிமையாக வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியத்தை அரசு வழங்க முன் வந்த போது அவர் வாங்க மறுத்து விட்டார். பயங்கரவாத இயக்கத்திலிருந்து  கம்யூனிஸ்ட் இயக்கம் நோக்கி தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போரில் கலந்து கொண்டார். அதனால் பல முறை சிறை சென்றார். சிறையில் பயங்கரவாத இயக்கத்தவர்களோடு பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

அவரும் பயங்கரவாத கருத்தியலால் ஈர்க்கப்பட்டார். முதல் சென்னை சதி வழக்கு  1933 மார்ச் மாதத்தில் ஆளுநர் நாற்காலியில் ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டு ‘பிரிட்டிஷ் ஆட்சிக்கு இது தான் கிடைக்கும்” என்ற குறிப்பும் எழு தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதை அடுத்து செப்டம்பர் 25இல் திருவாங்கூர் தேசிய வங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றி கருவூலத்திலிருந்த பொ ருள்களை அள்ளிச் சென்று விட்டனர். உதகைமண்டலத்தில் ஓய்வு எடுக்க வந்த வங்கக் கவர்னருக்கு பயங்கரவாதி களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, முகுந்தலால் சர்க்கார், டி.ஆர்.எஸ் உட்பட இருபது பேர் கைது செய்யப்பட்டனர். இது தான் முதல் சென்னை சதி வழக்கு. தோழர்.பி.ராம மூர்த்தி, காங்கிரஸ் வழக்கறிஞர் ஜகன்னாததாஸ் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கி புரட்சியாளர்களுக்காக நீதி மன்றத்தில் வழக்காடவும் மற்ற உதவி களும் செய்து வந்தனர். இருந்த போதி லும், டி.ஆர்.எஸ் உட்பட அனைவரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

முதல் கம்யூனிஸ்ட் கிளை  மும்பையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை  கட்ட சென்னை வந்து பணி புரிந்து வந்த தோழர் எஸ்.வி.காட்டே மற்றும் பி.சுந்தரய்யா முயற்சியால், தோழர்.பி.இராமமூர்த்தி, டி.ஆர்.சுப்பிரமணியம் போன்றோர் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்க்கப்பட்டனர். 1936இல் பி.இராமமூர்த்தி, பி.சீனி வாசராவ், ஜீவா,  ஏ.எஸ்.கே, சி.எஸ்.சுப்பிரமணியம், கே.முருகேசன், நாகர்கோவில் சி.பி.இளங்கோ, டி.ஆர்.சுப்பிமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவானது. களப்பணியாற்ற நெல்லைக்கு திருவொற்றியூரில் மாநில அளவி லான கட்சியின் ஒரு கூட்டம் நடை பெற்றது.பேரா.வானமாமலை  (நாட்டார் வழக்காற்று அறிஞர்) தோழர். எம்.ஆர் வெங்கட்ராமன் அவர்களிடம் கட்சியை கட்ட நெல்லைக்கு அனுப்பும்படி கேட்டார்.  

தோழர்.டி.ஆர்.சுப்பிரமணியம் தாமும் நெல்லை சென்று களப்பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். இதைய டுத்து அவர்கள் இருவரும் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தோழர் டி.ஆர்.எஸ் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திருவை குண்டத்தில் இருந்து கட்சி பணியாற்றத் துவங்கினார். நிலவுடமையாளர்கள் தங்கள் விருப்பம் போல் விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவது, அதிக மான குத்தகை வசூலிப்பது போன்ற கொ டுமைகளை நிகழ்த்திக் கொண்டியி ருந்தனர்.இந்நிலையைப் போக்க விவ சாயிகளை திரட்டி,  சங்கம் அமைத்து நில ஆதிக்க கும்பல்களை எதிர்த்து வீரமிக்க போராட்டங்களை நடத்தி, நிலச் சுவான்தார்களின் கொடுமைகளை முறியடித்தார். திருவைகுண்டம், திருச்செந்தூர் வட்டங்களில் டி.ஆர்.சுப்பிரமணியம் செல்லாத கிராமங்கள் கிடையாது. குறிப்பாக வெள்ளூர், மாங்கொட்டாபுரம், ஆறுமுகமங்கலம், மாறமங்கலம், ஆழ்வார்திருநகரி ஒட்டிய கிராமங்களில் அவரது பணியில் குத்தகை விவசாயி கள் பேத்து மற்றும் நீர்பாய்ச்சு விவசாயி கள் பாதுகாக்கப்பட்டனர். இப்பகுதி விவசாயிகள் இன்று தோழர் டி.ஆர்.எஸ்-ஐ ஆற்றல் மிக்க தலைவராக நினைவு கூர்கிறார்கள். தீண்டாமைக்கு எதிராக  டிஆர்எஸ்-சின் பணியால் ஈர்க்கப் பட்ட மாங்கொட்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் என்ற இளைஞன், சிவகளை என்ற கிராமத்தில் ஒரு ஹோட்டலில், “தலித் மக்களுக்கு தனிக் குவளையும் மற்றவர்களுக்கு தனி குவ ளையும் வைத்துள்ளார்கள்.

இந்த தனி குவளையில்தான் தலித் மக்கள் டீ குடிக்க வேண்டுமாம்.  இந்த அநியாயத்தை கண்டு உள்ளம் கொதிக்கிறது” என்று அவரிடம் முறையிட்டார். இதையடுத்து தோழர் டி.ஆர்.எஸ். இளைஞருக்கு சில வழிகாட்டுதலை வழங்கினார். அதன்படி செயல்பட்டதால் அங்கு இரட்டைக் குவளை  முறை ஒழிக்கப்பட்டது.  இறுதிக் காலம்  தீவிரமான தொடர்பணி, வயது காரணமாக தோழர். டி.ஆர்.எஸ் நோ யுற்றார். கோவையில் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தவர்கள் வசித்து வந்த னர். அவர்களைப் பார்க்க டி.ஆர்.எஸ் கோவை வந்தார். குடும்பத்தவர்களை பார்த்து விட்டு முதுபெரும் தோழர்.ரமணி அவர்களை சந்தித்தார். அப்போது டி.ஆர்.எஸ்-சின் உடல்நிலை கண்டு அதிர்ச்சியுற்ற தோழர்.ரமணி, தோழர். பி.ஆர்.நடராஜன் (முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்), அன்று மாவட்டச் செயலாளராக இருந்த தோழர்.வெங்கிடு இருவரையும் டி.ஆர்.எஸ்-ஐ அரசு மருத்துவமனையில் சேர்த்து நன்கு கவனிக்க அறிவுறுத்தினர். அவர் கள், டி.ஆர்.எஸ்-ஐ அரசு மருத்துவ மனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். பகலிலும், இரவிலும் அவரோடு இருந்து அவரை கவனிக்க சில தோழர்களையும் ஏற்பாடு செய்தனர்.

தோழர் டி.ஆர்.எஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதையறிந்து நெல்லை மாவட்ட கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.ஆர்.கிருஷ்ணன் அவர்களை கோவைக்கு அனுப்பி வைத்தது. ஆயினும் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இயற்கை எய்தினார். அவரது இறுதி  நிகழ்ச்சியை  தோழர் பி.ஆர்.நட ராஜன், தோழர்.வெங்கிடு மற்றும் தோ ழர்கள் துயரத்தோடு நடத்தி வைத்தார் கள். டி.ஆர்.எஸ்-சின் சகோதரர் மகனும் கலந்து கொண்டார்.  சுதந்திரப் போராட்ட வீரர், பல களம் கண்ட வர்க்கப்  போராளி,  புரட்சிகரத்தோழ ருக்கு நமது செவ்வணக்கத்தை செலுத்து வோம். 24ஆவது கட்சி காங்கிரஸ் முடி வுகளை நாம் முன்னெடுத்து கட்சியை கட்டுவோம். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி