சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள்
மோடி அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முயற்சியை எதிர்த்து முறியடிப்போம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, மையப்படுத்தப்பட்ட ஒற்றை அரசை உருவாக்க விரும்பும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முயற்சியை வலுவாக எதிர்க்கிறது. இது அவர்களின் ‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தலைவர்’ என்ற முழக்கத்தின் நீட்டிப்பாகும். அவர்கள் இந்த முழக்கத்தை ஹிட்லரின் பாசிச காலத்திலிருந்து எடுத்து மாற்றியமைத்துள்ளனர். பாஜகவின் தவறான வாதங்கள் பாஜக தலைவர்கள் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது ஏராளமான பணத்தை சேமிக்கும், மேலும் அவை வளர்ச்சிப் பணிகளின் அடிக்கடி இடையூறுகளைத் தடுக்கும் என்ற தங்களின் பழைய வாதங்களைப் பயன்படுத்துகின்றனர். 2024 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு, நாடாளுமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) ஒதுக்கிய மொத்த ஒதுக்கீடு ரூ. 466 கோடி. தளவாட தேவைகளுக்காக மாநிலங்களால் இன்னும் சில தொகை செலவிடப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் மிகப் பெரிய தொகை அல்ல. மற்ற ஆண்டுகளுக்கு செலவு மிகக் குறைவு. வளர்ச்சியைப் பொறுத்தவரை, 1967 முதல் இன்றுவரை இந்தியாவில் காலமுறை மற்றும் அடிக்கடி தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அவை நாட்டின் வளர்ச்சி வேகத்தை நிறுத்தியுள்ளன என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ (ONOE) முறை, அரசியலமைப்பின் இரண்டு அடிப்படை அம்சங்களை - ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை மறுக்கிறது. கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்கிறது. இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த யோசனையை முன்னெடுத்து வருகிறார், 2020ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ “விவாதத்திற்குரிய விஷயம் அல்ல, இந்தியாவுக்கு அவசியம்” என்று அறிவித்தார். சட்டமன்றங்களின் ஆயுளை குறைக்கும் முயற்சி உண்மையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவு சில சட்டமன்றங்களின் ஆயுளை மக்களவைத் தேர்தலுடன் இணைக்கும் பொருட்டு, குறைப்பதற்கு சமமாகும். மேலும், ஒரு மாநில அரசு கவிழ்ந்து சட்டசபை கலைக்கப்பட வேண்டுமெனில், அப்போது நடத்தப்படும் இடைக்கால தேர்தல் சட்டசபையின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே நடத்தப்படும். இவை அனைத்தும் அரசியலமைப்பில் கருதப்பட்டபடி ஐந்து ஆண்டு காலத்திற்கு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களின் உரிமையை மீறுகிறது. கூட்டாட்சிக்கு எதிரான தாக்குதல் அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடவடிக்கையுடன் கூட்டாட்சிக்கு எதிரான தாக்குதல் மேலும் தெளிவாகிறது. இது பழிவாங்கும் நோக்கத்துடன்கூடிய அதிகார மையப்படுத்துதல் ஆகும்; மேலும் இது மாநில அரசுகளின் கீழ் உள்ள பரவலாக்கப்பட்ட முடிவெடுக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் நோக்கத்திற்கே எதிரானது. அரசியலமைப்பு மாற்றங்களின் அவசியம் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசியலமைப்பில் பெரும் மாற்றம் தேவைப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பிற விதிகளில் திருத்தங்கள் தவிர, அரசியலமைப்பில் பிரிவு 83 (அவைகளின் காலம்), பிரிவு 85 (மக்களவை கலைப்பு), பிரிவு 172 (மாநில சட்டமன்றங்களின் காலம்), பிரிவு 174 (மாநில சட்டமன்றங்களின் கலைப்பு), பிரிவு 356 (அரசியலமைப்பு அமைப்பின் தோல்வி) ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, சி.பி.ஐ.(எம்) 24வது மாநாடு, ஒரே நேரத்தில் தேர்தல்களை கொண்டுவருவதற்கான எந்தவொரு செயற்கையான முயற்சிக்கும் எதிராக குரல் எழுப்புகிறது; மேலும் இந்த நோக்கத்திற்காக அரசியலமைப்பைத் திருத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் வலுவாக எதிர்க்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் கூட்டாட்சியை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும், எதிர்ப்பில் உறுதியாக வெளிவந்து ஒன்றிணைந்து இந்த ஆபத்தான நடவடிக்கையை முறியடிக்க வேண்டும். இந்த ஜனநாயக விரோத மற்றும் கூட்டாட்சி விரோத நடவடிக்கையை எதிர்க்க சி.பி.ஐ.(எம்) இந்திய மக்களை அழைக்கிறது.
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலை கண்டிக் கிறது; உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத் தத்தை கோருகிறது. அக்டோ பர் 7, 2023 ஹமாஸ் தாக்கு தலுக்குப் பிறகு காசா, பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் இனப்படு கொலை போரைத் தொடங்கியது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குத லில் 50,021க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காசாவுக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் முதல் கட்ட போர் நிறுத்தம் முடிந்த உடனேயே இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கி யது. அதன் பிறகு, அது காசா வுக்கு உணவு, நீர், எரிபொருள், உதவி மற்றும் மற்ற அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விநியோ கத்தை நிறுத்தியது. இஸ்ரேல், காசாவை நெரிக்கவும் பட்டினி நோக்கி தள்ளவும் கருதுகிறது. காசாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லாமல், மருத்துவமனைகள், உதவி வாகனங் கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் தங்கு மிடங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மீது இஸ்ரேல் தாக்கு தல்களை நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர் களில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். பத்திரிகையாளர் கள் மற்றும் ஐ.நா உதவி ஊழியர் களும் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப் பட்டனர். பயிர்கள் அழிக்கப்பட்டன. இந்த அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேலிய அரசின் இனப்படு கொலை வெறியை காட்டுகின்றன. இதை கருத்தில் கொண்டு, சர்வ தேச நீதிமன்றம் (ICJ), பிரதமர் பெஞ்ச மின் நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரே லிய தலைவர்கள் மீது கைது வாரண்டு களை வழங்கியது. மேற்குக் கரையில் சியோனிச ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் பாலஸ்தீனிய நிலத்தை ஆக்கிரமிக்கவும், யூத குடியேற்றங்களை நிறுவவும் சியோ னிச (யூத இனவெறி கொண்ட) குடி யேறிகளை இஸ்ரேல் தீவிரமாக ஊக்கு விக்கிறது. இந்த முறையில், அது மெதுவாக மேற்குக் கரையில் பாலஸ் தீனிய பிரதேசத்தை இணைத்துக் கொண்டு வருகிறது. அகண்ட இஸ்ரேலை நிறுவும் தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஒரு பகுதியாக, பாலஸ்தீனியர்களை அவர்களின் தாய கத்திலிருந்து வெளியேற்றி, பாலஸ் தீனத்தை முழுமையாக இணைப்பதே இந்த செயல்கள் அனைத்தின் நோக்க மாகும். அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவு அமெரிக்க ஐக்கிய நாடுகளும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிற ஏகாதிபத்திய நாடுகளும் பாலஸ்தீனம் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியும் சர்வதேச மன்றங்களில் அதன் பக்கம் நின்றும் தீவிரமாக ஆதரவளிக்கின்றன. அங்கு வாழும் அனைத்து பாலஸ்தீனர் களையும் வெளியேற்றி காசாவை சுற்றுலா சொர்க்கமாக மாற்றுவதற் கான டிரம்ப்பின் கண்டனத்திற்குரிய திட்டங்களின் அறிவிப்பு, இஸ்ரேலின் நலன்களுக்கு ஏற்றதாக உள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஒன்றிய பாஜக அரசு பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நீண்ட கால அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்தது. பாலஸ்தீன மக்களுடன் உறுதியாக நின்று, இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவதற்குப் பதிலாக, பாஜக அரசு தற்போது இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் விளைவாக, போர் நிறுத்தத்தைக் கோரி, இஸ்ரேலைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானங்களுக்கு இந்தியா முதல் முறையாக எதிராக வாக்க ளித்தது அல்லது வாக்களிப்பி லிருந்து விலகியது. இத்தகைய நிலைப் பாடுகள் வளரும் நாடுகளிடையே இந்தியாவின் நம்பகத்தன்மையை குறைத்தன; மேலும் அது தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாகக் கருதப்படுகிறது. பாஜக-சங் பரிவாரத்தின் மத அடிப்படையிலான பிரச்சாரம் தனது நிலைப்பாடுகளை நியா யப்படுத்த, பாஜக, சங் பரிவாருடன் சேர்ந்து, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை ஒரு மத போராக சித்தரிக்கிறது. ஆர்எஸ்எஸ், தேசி யத்தை மதத்துடன் அடையாளப் படுத்துவதிலும், முஸ்லிம்கள் மீதான வெறுப்பிலும் யூத இன வெறி யர்களுடன் நெருக்கமான கருத்தியல் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள் கிறது. இஸ்ரேலுக்கான பாஜக அரசின் ஆதரவுக்குப் பின்னால் இந்த கருத்தி யல் ஒற்றுமைதான் உள்ளது. இந்திய மக்களுக்கு அழைப்பு சி.பி.ஐ.(எம்) 24வது மாநாடு, காசாவில் உடனடி போர் நிறுத்தத் தைக் கோருகிறது. இஸ்ரேலை இன வெறி நாடாக அறிவித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அரசு இஸ்ரேலுக்கு ஆதர வளிப்பதை நிறுத்தி, பாலஸ்தீனத் திற்கு ஆதரவளிக்கும் நிலைநிறுத்தப் பட்ட இந்திய கொள்கைக்குத் திரும்ப வேண்டும் என்று மாநாடு கோரு கிறது. கிழக்கு ஜெருசலேம் அதன் தலைநகராகவும், 1967க்கு முந்தைய எல்லைகளுடனும் ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதன் மூலமே பிராந்தி யத்தில் நீடித்த அமைதி சாத்திய மாகும். 24வது மாநாடு பாலஸ்தீன மக்களு டன் தனது ஒற்றுமையை வெளிப்படுத் துகிறது, மேலும் தங்கள் தாயகத் திற்கான அவர்களின் நியாயமான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களு டன் உறுதியாக நிற்குமாறு இந்திய மக்களை அழைக்கிறது.