articles

img

எளிய மக்களின் நாயகன் தோழர் எம்.பூபதி - பி.ஆர்.நடராஜன்

எளிய மக்களின் நாயகன் தோழர் எம்.பூபதி - பி.ஆர்.நடராஜன்

கோவை உழைப்பாளி மக்களால் நகரத் தந்தை என்று அன் போடு அழைக்கப்பட்ட  தோழர் எம்.பூபதி மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்க ளில் ஒருவராவார்.1.6.1912ஆம் ஆண்டில் பிறந்தவர்.கோவையில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து பம்பாய் சென்று அங்கே தனியார் கல்லுரியில் மேற்படிப்பை முடித்தார்.  கோவையின் மையப்பகுதியான  காட்டூரில் சோமசுந்தராமில், காளீஸ்வரா மில், ஸ்டேன்ஸ் மில் ஆகிய மூன்று பெரிய மில்கள் அமைந்த பகுதியில் பூபதியின் குடும்பமும் இருந்த காரணத்தினால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்நிலையையும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களும் பூபதியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த ஆலைகளில் செங்கொடி சங்கத்தின் போராட்டங்கள் பூபதியின் இளம் மனதை கவர்ந்திழுத்தது.

தனது இளம் வயதிலேயே செங்கொடி இயக்கத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டார்.  1941இல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் முடிவுப்படி மில் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார்.1948இல் நடைபெற்ற மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு முக்கிய பங்காற்றினார், ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நடந்த கண்டன இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார். தோழர் கே.ரமணியோடு இணைந்து தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார்.  கோவை முனிசிபல் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டு பல தொழிற் சங்கங்களை உருவாக்கினார். 20 ஆண்டு களுக்கு மேலாக மில் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டார். சின்னியம்பாளையம் தியாகிகளின் தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்ற நடவடிக்கைகளில் பூபதி பங்காற்றினார்.

சின்னியம்பாளையம் தியாகிகளை தூக்கி லிடுவதற்கு முதல் நாள் தோழர்கள் பி.ராம மூர்த்தி, கே.ரமணியுடன் பூபதியும் சென்று அவர்களை சந்தித்தார். 1946இல்  பாதுகாப்புக் கைதியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 1948ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோதும் பாதுகாப்புக் கைதியாக மீண்டும் கைது செய்யப்பட்டு பல வருடம் சிறையில் இருந்தார். 1959ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம் புத்தூர் நகர மன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. கம்யூனி ஸ்ட் கட்சிக்கும் திமுகவிற்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி சென்னை திமுக மேயருக்கு  கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பது, கோவையில் நகர மன்றத் தலைவருக்கு திமுக ஆதரவு தெரி விப்பது என்ற உடன்பாட்டின் அடிப்படை யில் தோழர் பூபதி கோவை நகர மன்றத் தலைவரானார்.  தோழர் பூபதி நகர மன்றத் தலைவராக இருந்தபோது முக்கிய சாதனை கோவை   நகருக்கு சிறுவாணி தண்ணீரை கூடுதலாக கேரளாவிலிருந்து பெற்றதாகும். பிரிட்டி சாரின் ஆட்சிக்காலத்திலிருந்து சிறுவாணித் திட்டம் படிப்படியாக துவங்கியிருந்த போதிலும் அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ற குடிநீர் தேவையினை சமாளிக்கும் அளவிற்கு கூடுதல் தண்ணீர் தேவைப்பட்டது.

அதை யொட்டியே அன்றைய கேரள முதல்வராக இருந்த தோழர் இஎம்எஸ் அவர்கள் கோவை க்கு வருகை தந்தபோது அவருடன் பேசி கூடுதல் தண்ணீர் பெறப்பட்டது.  உள்ளாட்சி அமைப்புக்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் அதிகா ரங்களும் நிதியும் வழங்கப்பட வேண்டுமென மாநில அரசிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். பிரதமர் நேரு முதலமைச்சர் காம ராசர் ஆகியோர் கோவைக்கு வந்தபோது அவர்களுக்கு நகர மன்றத்தின் சார்பில் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தி யுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதய மானபோது அதன் தமிழக ஸ்தாபக தலை வர்களில் பூபதியும் ஒருவராவார். கோவை மாவட்டத்தில் தோழர்கள் கே.ரமணி ஆர்.வெங்கிடு ஆகியோருடன் இணைந்து கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கினார். கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராகவும் செயலாற்றியுள்ளார். 1967இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை கிழக்குத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்பணியினை மிக சிறப்புடன் நிறைவேற்றினார். 1968இல்  கோவையில்  நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டினை கே.ரமணி, ஆர்.வெங்கிடு ஆகியோருடன் முன்னின்று நடத்தியதும்  குறிப்பிடத்தக்கது. தோழர் எம்.பூபதியின் பொது வாழ்க்கை க்கு அவரது துணைவியார் பாப்பம்மாள் அவர்கள் பெரும் உறுதுணையாக இருந்தார். அவரது மைத்துனரான மூத்த தோழர் சி.என்.கிருஷ்ணசாமியையும் கட்சிப் பணிக ளில் ஈடுபட வைத்தார். தோழர் சி.என்.கிருஷ்ண சாமி  தற்போது 95 வயதில் மூப்பின் காரண மாக ஓய்வில் இருந்து வருகிறார்,  கோவை உழைப்பாளி மக்களின் பேரன்பின் அடை யாளமாக அனைவராலும் தந்தை பூபதி என்று அன்போடு அழைக்கப்பட்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி இயக் கத்தோடு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தோழர் எம்.பூபதி 16.11.1996இல் இயற்கை எய்தினார்.