பள்ளிக் கல்வியின்றி சுய கல்வி மூலம் உயர்ந்த தொழிலாளி வர்க்க போராளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பி னராகவும் அகில இந்திய சிஐடியு தலைமை பொறுப்புகளையும் வகித்த தோழர் முகமது அமீன் அவர்கள் 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி ஷிப்பூர் எனுமிடத்தில் ஒன்றுபட்ட வங்காள மாகாணத்தில் பிறந்தார். மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. இவர் 7 வயதாக இருக்கும் பொழுது அவர் கிரா மத்தில் அம்மை நோய் தாக்கியது. அதில் தப்பித்த இரு சிறுவர்களில் அமீனும் ஒருவர்.
கிழக்கு பாகிஸ்தானில் கட்சி பணி
தனது 14ஆம் வயதில் சணல் ஆலையில் தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். அங்கு தொழிற்சங்கத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் அவர் கம்யூனிசக் கருத்துகளால் ஈர்க்கப் பட்டார். 1946ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி யில் இணைந்தார். 1947இல் தேசப்பிரிவினை க்கு பின்னர் கட்சியின் கட்டளைக்கு இணங்க கிழக்கு பாகிஸ்தான் சென்று கட்சி பணியில் ஈடுபட்டார். ஆனால் அரசாங்கத் தால் கைது செய்யப்பட்டு 26 மாதம் சிறை யில் அடைக்கப்பட்டார். விடுதலைக்கு பின்பு மேற்கு வங்கம் திரும்பிய முகமது அமீன் அங்கு கட்சி பணியில் ஈடுபட்டார். தொழிற்சங்கங்களை கட்டுவதிலும் தொழிலாளர்களை அணி திரட்டும் பணி யிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் சணல் தொழிலாளர்கள்/ பீடித் தொழிலா ளர்கள்/ ஆட்டோ தொழிலாளர்கள்/ விவ சாயத் தொழிலாளர்கள்/ இஞ்சினியரிங் தொ ழிலாளர்கள்/ தேயிலை தோட்டத் தொழி லாளர்கள் என பெரும்பாலும் மிகவும் அடித் தட்டு தொழிலாளர்களை அணி திரட்டினார்.
அரசியல் தலைமை குழுவில்...
தன் வாழ்நாள் முழுவதும் தொழிலா ளர்களின் பிரச்சனைகளுக்காகவே அவர் தனது வாழ்வை அர்ப்பணித்தார். 1955ஆம் ஆண்டு 24 பர்கானா மாவட்டக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் சிபிஐ(எம்) உதய மான பொழுது அதில் தீவிர ஊழியராக இணைந்தார். 1971ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1985ஆம் ஆண்டு மத்தியக் குழுவுக்கும் 2008ஆம் ஆண்டு அரசியல் தலைமை குழு வுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடந்த 20ஆவது மாநாட்டில் மத்தி யக் குழு சிறப்பு அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ஹெலிகாப்டரை விற்று பேருந்துகள் வாங்கப்பட்டன
2007ஆம் ஆண்டு சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அமீன் அவர்கள் 4 முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை மாநி லங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி னார். இரண்டு முறை இடது முன்னணி ஆட்சியில் அமைச்சராக பணியாற்றினார். போக்குவரத்து அமைச்சராக பொறுப் பேற்றவுடன் அவர் செய்த முதல் பணி காங்கி ரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட ஹெலிகாப் டரை விற்று அந்த நிதியில் சாதாரண மக்கள் பயணிக்கும் பல பேருந்துகளை வாங்க ஏற்பாடு செய்தார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் நீர் போக்குவரத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. அவர் அமைச்சராக இருந்த பொழுது, நலிவடைந்த பல தனியார் தொழிற்சாலைகளை மாநில அரசாங்கம் அல்லது ஒன்றிய அரசாங்கம் தமது பொறுப்பில் நடத்துவதை உத்தர வாதம் செய்தார்.
பத்திரிகை ஆசிரியர், கவிஞர்
பள்ளிக் கல்வி இல்லை என்றாலும் மிகவும் கடினமாக முயன்று சுய கல்வி மூலம் தனது அறிவை வளர்த்துக் கொண்டார். அதனால்தான் மேற்கு வங்க மாநிலக் குழுவின் உருது பத்திரிகையின் ஆசி ரியராக பணியாற்றியதுடன் பல கவிதைக ளையும் எழுதியுள்ளார். அவரது கவிதை தொகுப்பு 4 நூல்களாக வெளிவந்தன. மேலும் வங்காள-உருது அகராதியையும் உருவாக்கினார். இது அவரது சுய முயற்சி யின் இமாலய சாதனை எனில் மிகை அல்ல. தன் வாழ்நாளில் 26 மாதங்கள் சிறை யிலும் இரு ஆண்டுகள் தலைமறைவிலும் அவர் எதிர்கொண்டார். மிக மிக எளிமையாக வாழ்ந்த தோழர் அமீன் ஊழியர்களிடமும் தொழிலாளர்களி டமும் மிகவும் நேசமாகப் பழகினர். எவரும் அவரை எளிதில் நெருங்கி தனது கருத்தை சொல்ல முடியும். தன் சுயகல்வி மூலம் உயர்ந்த வர்க்கப் போராளி தோழர் முகமது அமீன் அவர்கள் தனது 80ஆவது வயதில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி காலமானார்.