நவீன பாசிசத்தின் குணாம்சம்!
நவீன இந்தியாவின் மக்கள் மனதில் “இரட்டை தேசிய உணர்வு” இணைந்தே நிலைகொண்டிருக்கி றது என்று மார்க்சிய அறிஞர் மறைந்த அம லேந்த் குகா குறிப்பிடுவார். அதாவது உள்ளூர், மாநிலம், மொழி சார்ந்த தேசிய உணர்வும், அதற்கு மேலீடாக இந்தியன் என்ற உணர்வும் ஒரு சேர இருக்கும். இந்த யதார்த்தத்தை உள்வாங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஒன்றின் மீது அதீத அழுத்தம் தருவதோ, ஒன்றை விடுத்து ஒன்றை மட்டும் முன் வைப்பதோ அபாய கரமான எதிர் வினைகளை உருவாக்கும் என்று அவர் கூறுவார். குறிப்பாக அதீத மையமாக்கல், ஒட்டுமொத்த இந்தியர் என்ற உணர்வை மட்டுமே வலியுறுத்துவ தால், அதுவே அதற்கு எதிரான வினையை தூண்டி, உள்ளூர் பிளவுவா தம் முதல் பிரிவினைவாதம் வரைக்கும் கூட வழி வகுத்து தேசத்தின் ஒற்றுமைக்கு அபாயத்தை விளைவிக்கும்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இத்தகைய மையமாக்கல், அன்று அதில் இந்துத்துவ நவீன பாசிசக் குணாம்சங்கள் இல்லாமல் இருந்த போதி லும், 1980 களில் நடந்தேறிய அஸ்ஸாம் போராட் டம் போன்ற எதிர் வினைகளுக்கு வழி வகுப்பதாக அமைந்தது என்றும் அம லேந்து குகா சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதே அபாயம் இன்று தேசத்தின் முன்னால் எழுந்திருக்கிறது. “நவீன பாசிச” மையமாக்கல் என்பது நம் கண்க ளின் முன்னால் வேகமாக நிகழ்ந்து வருகிறது.
அதிகாரம் குடியிருக்கும் இடம்
பாசிசம் என்பது, அதன் மற்ற குறிப் பான தன்மைகள் தாண்டி, அநேகமாக அது தீவிர மையமாக்கலுடன் இணைந்த தாகவே இருக்கிறது. அது “தலைவர்” என்பதை அதிகார மையமாகக் கொண்டி ருக்கிறது. அதிகாரம் மக்களிடம் குடியி ருப்பதில்லை. மக்களை தலைவர் பிரதி நிதித்துவப்படுத்துவார் என்பதற்கு மாறாக “தலைவர் “ என்பவரின் உருத் திரிபாக மக்கள் கருதப்படுகிறார்கள். மக்கள் எனப்படுபவர்களும் அவர்களின் முழுமை என்றல்லாது அவர்களின் ஒரு பகுதி என்ற அளவிலேயே, இந்து என்றோ பெரும்பான்மை இனம் என்ற வகையிலோ முன்னிறுத்தப்படுகி றார்கள். அதாவது “பிறர் “ என்று ஒதுக்கப் படுபவர்களுக்கு இடமில்லை. “மைய மாக்கல்” என்பது அதிகாரம் குடியிருக்கும் இடம் குறித்த, தலைகீழான கருத்தாக் கத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடே ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வளங்களையும் அதிகாரத்தையும் மையப் படுத்தும் போக்கை வரலாறு காணாத அளவிற்கு முன்னெடுத்துச் சென்று இருப்பது ஆச்சரியப்படத்தக்கது அல்
நவீன தாராளமயம் என்பதே மைய மாக்கலை தனக்குள்ளே கருக் கொண்ட தாகும். காரணம் கார்ப்பரேட் - நிதி ஏக போகங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்ட எத்தனிப்பதே. தனக்கு இசைவான அரசின் கைகளில் அதிகாரமும் வளங்க ளும் குவிவதை அவை விரும்புகின்றன. ஆனால் நவீன தாராளமயம் நெருக்க டியான காலகட்டத்தை எட்டும் போது கார்ப்பரேட் நவீன பாசிசக் கூட்டணி உருப் பெறுவதால் மையமாக்கல் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
ஜி.எஸ்.டி: கூட்டாட்சி மீதான கடுங்காயம்
நாம் இங்கே முழு விவரங்களுக்குள் செல்ல வேண்டியது இல்லை. வளங்கள் மையமாதலுக்கு அப்பட்டமான உதாரணம், பழைய வியாபார வரிக ளுக்கு பதிலாக ஜிஎஸ்டி வரி முறைமை அமலானது தான். பழைய வியாபார வரி முறைமையே மாநில அரசாங்கங்களின் வருவாய்க்கான ஊற்றாக அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டு இருந் தது. மாநில அரசாங்கங்களின் 80 சதவீத மான வருமானம் அதிலிருந்தே வந்து கொண்டிருந்தது. ஆனால் நவீன தாராள மயப் பாதை முன்வைத்த வாதம் வினோதமானது.
மதிப்பு கூட்டல் வரி முறைமை (தற் போதைய ஜிஎஸ்டி) வாயிலாக வரிகள் ஏற்படுத்தும் தொடர் சங்கிலிச் சுமை களை தவிர்த்து தேசிய அளவிலான சந்தையை ஒருங்கிணைக்கும் வல்லமை கொண்டது; ஆகவே ஒவ்வொரு சரக்குக்கும் ஒரே சீரான வரி விகிதங்களை அமலாக்க வேண்டும்; வெவ்வேறு வரி விகிதங்கள் இருப்பதென்றாலும் அவை யெல்லாம் சரக்குகளுக்கு ஏற்ப மாறுபட லாம்; இவ்வாறு ஒரே சீரான வரி விகிதங்க ளை தீர்மானிக்க வேண்டும் என்றால் அதற்கான அதிகாரம் படைத்த அமைப்பு மாநில அரசாங்கங்களில் இருந்து வேறு பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்; மாநில அரசாங்கங்கள் தாங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் முன்மொழி யப்பட்டது. அந்த அமைப்பே ஜி.எஸ்.டி கவுன்சில் ஆகும். அதில் ஒன்றிய அர சாங்கமும் மற்ற மாநில அரசாங்கங்க ளுடன் இணைந்து அங்கம் வகிக்கும்.
மாநிலங்கள் கைகளில் திருவோடு
ஜி.எஸ்.டி என்பதன் பொருள், மாநில அரசாங்கங்கள் தங்களின் அரசியல் உரி மைகளை சரணடையச் செய்வதாகும். ஆனால் அவர்கள் தங்கள் அதிகா ரங்களை சரண் அடையச் செய்வதற்கு அவர்களுக்கு வாக்குறுதி ஒன்று தரப்பட்டது. வரி முறைமை மாற்றத்தி னால் ஆண்டு வரி வருவாய் உயர்வு 14 சதவீதத்திற்கு கீழே இருக்கும் பட்சத்தில் அந்த இழப்பை ஒன்றிய அரசு ஈடு கட்டும் என்பதே அது. ஜி.எஸ்.டி க்கு முன், ஜி.எஸ்.டிக்கு பின் என காலங்களை ஒப்பிட்டுக் பார்க்கும்போது ஜி.எஸ்.டி வரிமுறைமையின் கீழ் வருவாய் உயர்வு விகிதம், மாநில ஜிஎஸ்டி + ஒன்றிய அர சின் இழப்பீடு ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகவே இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் மொத்த உள் மாநில உற்பத்தியில் (GSDP) மாநில ஜிஎஸ்டி + ஒன்றிய அரசின் இழப்பீட்டுத் தொகை யின் சதவீதம், பல மாநிலங்களில், ஜி. எஸ்.டி க்கு முந்தைய காலத்திய மொத்த உள் மாநில உற்பத்தியில் இருந்த வரி விகிதத்தை விட குறைவானதே ஆகும்.
சுருங்கச் சொன்னால், மாநிலங்கள் ஜிஎஸ்டி முறைமைக்கு மாறிய பின்னர், ஒன்றிய அரசு தந்த இழப்பீட்டுத் தொ கையை சேர்த்தாலும், வருவாய் இழப்பு க்கு ஆளாகி இருக்கின்றன என்பதே நிலை மையாகும். இன்னும் முக்கியமாக மாநி லங்கள் தங்கள் அரசியல் சாசன உரி மைகளை இழந்திருக்கின்றன. தற்போது ஒன்றிய அரசின் முன்னால் திருவோடு ஏந்தி நிற்பவர்களாக மாநிலங்கள் தோற்ற மளிக்கின்றன. இது கூட்டாட்சி கோட் பாட்டைக் காயப்படுத்தி உள்ள தாக்கு தலாகும்.
ஆளுநர்கள்: மற்றுமோர் கருவி
வளங்களை மையமாக்குதல் அரங்கேறும் அதே வேளையில் அதிகா ரக் குவிப்பிற்கான நகர்வுகளும் ஒருசேர முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று ஒன்றிய அரசால் நியமிக்கப் படும் ஆளுநர்கள் ஆவர். இன்றைய நாட்க ளில் ஆளுநர்களாக வருபவர்கள் யார்? இந்துத்துவா விசுவாசிகள், வளைந்து கொடுக்கும் அதிகார வர்க்கத்தினர், அதா வது ஒன்றிய அரசின் விருப்பங்களை சிர மேற்கொண்டு நிறைவேற்றுபவர்களே நியமிக்கப்படுகிறார்கள். ஆரம்ப காலங்க ளில் ஆளுநர் பதவி புருவங்களை உயர்த்தவில்லை. காரணம் அது அலங் கார பதவி என்றும், ஓய்வுபெற்ற அரசியல் வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கு மான கௌரவப் பதவியாகவும்தான் கரு தப்பட்டது. அதனால் தீங்கு ஏதும் நேரிடாது என்று நினைத்தார்கள். ஆனால் பிற்கா லங்களில் ஆளுநர்கள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதையும், தேர்ந்தெடுக் கப்பட்ட மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை முடக்குவதையும் செய்யத் துவங்கி விட்டார்கள்.
யூ.ஜி.சி வரைவு : அண்மைய உதாரணம் ஆளுநர்களின்
இத்தகைய செயல் பாடுகள் அரங்கேறுகிற முக்கிய இடமாக தற்போது மாநிலப் பல்கலைக்கழ கங்கள் திகழ்கின்றன. இப் பல் கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில் ஆளுநர்களே துணைவேந் தர்களை நியமிப்பது, அதில் மாநில அர சாங்கங்களுக்கு உள்ள பங்கை அறவே மறுப்பது என்று செயல்படத் துவங்கி இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு, முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் நியம னங்களால் நிரப்பப்படும் விசுவாசிகளைக் கொண்டு இயங்குவதே ஆகும். அத்த கைய பல்கலைக்கழக மானியக் குழு தற்போது வரைவு விதிமுறைகளை வெளி யிட்டு இருக்கிறது. அதன் உள்ளடக்கங் கள் இந்திய நாட்டின் உயர் கல்வியின் எதிர்காலத்தின் மீது தொலைதூர தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவையா கும். ஆனால் இங்கு நாம் ஒரே ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றி மட்டுமே பேசு கிறோம். அதாவது மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நிய மனத்தில் மாநில அரசாங்கங்களுக்குரிய பங்கை அடியோடு ஒழிப்பதைப் பற்றியே ஆகும்.
இதுவரை துணைவேந்தர் நியமனத் தெரிவுக் குழுவில் இடம் பெற்று வந்த மூன்று உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்கள் பல்கலைக்கழக நிர்வா கக் குழுவால் முன்மொழியப்படுபவர்க ளாகவும், இன்னொருவர் மாநில அரசின் கலந்தாலோசனை அடிப்படையில் வேந்தரால் பரிந்துரைக்கப்படுபவரா கவும் இருப்பார்கள். ஆனால் புதிய வரைவு யூ.ஜி.சி விதிமுறைகள் சொல்வது என்ன? மூன்று உறுப்பினர்களில் பல்க லைக்கழக மானியக் குழு, வேந்தர், பல்க லைக்கழக நிர்வாக குழு ஆகியோர் நியமிக்கும் நபர்களே இருப்பார்கள். மாநில அரசாங்கத்தின் ஆலோசனை யைக் கேட்டு ஆளுநர் தனது நியமனத்தை முடிவு செய்ய வேண்டியது இல்லை. இதன் பொருள் மாநில அரசாங்கங்களின் நிதி யால் இயங்கும் மாநிலப் பல்கலைக்கழ கங்களில் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசாங்கத்தின் கருத்துக்கு இடமே இல்லை. யூ.ஜி.சி மற்றும் ஆளு நர்களின் நியமன உறுப்பினர் ஆகிய இருவரால் தீர்மானிக்கப்படுபவர்களே மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக வர முடியும். இது உயர் கல்வித் துறையில் மையமாக்கல் விளை விக்கும் வஞ்சனையாகும்.
அரசியல் சாசனம்: எழுத்தும் எண்ணமும்
அது ஒட்டுமொத்த அரசியல் சாசனத் தின் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் முரணானதாகும். மாநில அரசாங்கங்க ளின் பங்களிப்பை மறுதலித்து சுயேச்சை யாக ஆளுநர்கள் இயங்குவதற்கும், ஒன்றிய அரசின் விருப்பங்களை நிறை வேற்றும் முகவர்களாக அவர்கள் செயல் படுவதற்கும் வழி வகுப்பதாகும். புதிய கொள்கைச் சட்டகத்தில் மையமாக்கலு க்கு பெரும் உந்துதலை இது தரும். மிக முக்கியமானது எதுவெனில், தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்க ளோடு மூர்க்கத்தனமாக ஆளுநர்கள் மோதுவது, மக்களின் தீர்ப்பை அவமதிப் பதாகும். இதன் விளைவுகள் மிகக் கடுமை யானவையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப் படாத ஆளுநர் சுயேச்சையாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் விருப்பத்திற்கு மாறாகவும் செயல்படு வாரேயானால் அது ஜனநாயகத்தை வெட்டிச் சுருக்குவதாகும். இத்தகைய போக்குகள் தொடருமேயானால் அவை தேசத்தின் நிலைத்த தன்மைக்கு ஊறு விளைவிக்கும்.
அரசியல் சாசனம், மிகக் கவனமாக ஒன்றிய அரசாங்கம் மற்றும் மாநில அர சாங்கங்களின் வளம் மற்றும் அதிகார எல்லைகளை - மாநில அரசாங்கங்க ளின் வளங்களை மேம்படுத்த சுயேச்சை யான நிதி ஆணையம் உள்ளிட்ட அம் சங்களோடு - வரையறுத்து இருந்தது.
இவை எல்லாமே இந்திய மக்கள் உட் செரித்துள்ள “இரட்டை தேசிய உணர்வு களை” கணக்கிற்கொண்டு சமன் படுத்துவதற்கு உருவாக்கப்பட்டவை ஆகும். மையமாக்கல் என்பது மாநில அர சாங்கங்களை ஒடுக்குவதும், மதிப்பிறக் கம் செய்வதும் ஆகும். மாநில மற்றும் மொழி வாரி தேசிய உணர்வுகள் இதில் அடங்கும். அரசியல் சாசனத்தின் குறிப்பான இம்மீறல், ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, மிகத் தீவிரமான விளைவுகளை உள்ளடக்கியது ஆகும். ஒன்றிய அரசின் தொலைநோக்கற்ற பார்வை அப்பட்டமான அறியாமையின் வெளிப்பாடாகும்.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி பிப்ரவரி 2 இதழில் இடம்பெற்ற பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் பொருளாதார